search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel robbery"

    • 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி இட்டேரி சாலை பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது37). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி கவுசல்யா. இவரும் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் குற்ற சம்பவங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் உதயகுமாரை தாக்கி கட்டிப்போட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மற்றொரு டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்குமோ? என சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
    • கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    கோடை விடுமுறையையொட்டி பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனை நோட்டமிடும் மர்ம கும்பல் வீடு புகுந்து நகை-பணத்தை சுருட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளை கும்பல் அள்ளி சென்றுவிட்டனர்.

    காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே சுதர்ஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர் டேனியல். இவர் கோடை விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகை தப்பியது.

    சுதர்சன் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் 8 பவுன் நகை, லேப்டாப்பை சுருட்டினர். ஆசிரியர் தமிழரசு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்து இருந்தது.

    இதேபோல் மேலும் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை போய் உள்ளது. அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று உடனடியாக தெரியவில்லை.

    நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் நள்ளிரவு 1.30 மணியளில் கையுறை அணிந்தபடி கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அனைத்து வீடு களிலும் ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    • சுவர் ஏறி குதித்து தப்பிய 2 வாலிபர்கள் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு பகுதியில் அடிக்கடி திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற வருகிறது. இதனால் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஒரு வீட்டின் சுவற்றில் இருந்து 2 வாலிபர்கள் குதிப்பதை போலீசார் பார்த்தனர்.

    போலீசாரை கண்டவுடன் 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

    அப்போது வாலிபர்களிடம் 3 அரை பவுன் நகை இருந்தது தெரிய வந்தது. வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முயல் வாங்குவதாக கூறி மோசடி
    • பெண்ணுக்கு வலைவீச்சு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா கீழ்அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் வியாசியாமேரி (வயது 78). இவருடன் அவரது மகள் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் வீட்டின் மாடியில் முயல் வளர்த்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் வியாசியாமேரி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மொபட்டில் அவரது வீட்டிற்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து உள்ளார். அந்த பெண் மூதாட்டியிடம் முயல் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து உள்ளார்.

    இதையடுத்து மூதாட்டி வீட்டின் கதவில் தாழ்பாள் போட்டு அந்த பெண்ணை மாடிக்கு அழைத்து சென்று அவர்கள் வளர்த்து வரும் முயலை காண்பித்தார். பின்னர் அந்த பெண் முயலை வாங்கினார். மூதாட்டியிடம் முயலை எடுத்து செல்ல கோணிப்பையை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு கீழே சென்றார்.

    10 பவுன் நகை கொள்ளை

    இதை நம்பி மூதாட்டி மாடியிலேயே இருந்தார். பின்னர் அந்த இளம்பெண் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.

    நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் மாடியில் இருந்து மூதாட்டி கீழே வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப்ப ட்டது தெரியவந்தது.

    இது குறித்து திருவண்ணா மலை தாலுகா போலீசா ருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் மற்றும் 2¾ பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • காவல் துறையினர் 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் கதிர்வேல். நேற்று நள்ளிரவு கதிர்வேலும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் மற்றும் 2¾ பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து கதிர்வேலின் தம்பி கண்ணனது வீடும் அருகிலேயே இருந்துள்ளதால் அந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர் .

    அங்கு எதுவும் கிடைக்காத காரணத்தினால் அருகில் உள்ள முன்னாள் ராணுவ வீரரும், தற்போது பவர் கிரேடில் பணிபுரிந்து வருபவருமான பீட்டர் என்பவரின் வீட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பீட்டர் இரவு பணிக்காக சென்றிருந்த நிலையில் அவரது மனைவி கிறிஸ்டி விமலா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது கதவை உடைக்கும் சத்தம் கேட்கவே அவர் எழுந்து கூச்சலிட்டுள்ளார். இருப்பினும் விடாது கதவை உடைக்க முயற்சி செய்த மர்ம நபர் அவர் வெளி லைட்டை போட்டு விட்டு அருகில் உள்ளவர்களுக்கு போனில் தகவல் சொல்வதை கேட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் தலைமையிலான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புராஜ், நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், முதல்நிலை தலைமை காவலர் சுரேஷ், ஆகியோர் 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு அதன் வழியாக மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் டேனியல் சேகர். இவரது மனைவி சகிலா(வயது 55). இவர்களது மகள் மேரி செல்சியா(23).

    டேனியல் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சகிலா வடக்கன்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அப்பகுதியில் தனது மகளுடன் சகிலா வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலையில் சகிலாவும், செல்சியாவும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு அதன் வழியாக மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

    உடனே சகிலாவும், அவரது மகளும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் ரத்தம் சொட்ட சொட்ட கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி 2 பேரையும் மிரட்டினர்.

    பின்னர் அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 32 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர். உடனே சகிலா பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அரிவாளில் இருந்து விழுந்த ரத்தத்தை சோதனை செய்தபோது கோழியின் ரத்தம் என்பதும், வீட்டில் இருப்பவர்களை மிரட்டுவதற்காக அதனை அரிவாளில் தடவி வந்ததும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

    • ஏழு சவரன் தங்க நகைகளையும், மூன்று ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள்(வயது50). கணவனை இழந்த இவர் பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த புதன்கிழமை காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில், உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.ஒரு லட்சத்து 8 ஆயிரம், தங்க சங்கிலி, டாலர், கம்மல் உள்ளிட்ட ஏழு சவரன் தங்க நகைகளையும், மூன்று ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாரியம்மாள் நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடைபயிற்சி சென்ற பெண் மீது கொள்ளையர்கள் முட்டையை வீசி நகை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையர்கள் இருவரும் கவிதா அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு, பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நடைபயிற்சி சென்ற பெண் மீது கொள்ளையர்கள் முட்டையை வீசி நகை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கவிதா (58). இவர் அருகே உள்ள கருமாரியம்மன் கோவில் தெரு சாலையில் நடைபயிற்சி செய்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென கவிதா மீது முட்டையை வீசினர்.

    இதில் முட்டை உடைந்து வழிந்தது. இதனால் கவிதா நிலை தடுமாறினார். அதற்குள் கொள்ளையர்கள் இருவரும் கவிதா அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது நகை பறிப்பதற்கு முன்பு மர்ம வாலிபர்கள் 2 பேரும் அதே பகுதியில் 2 முறை சுற்றி வந்து ஆட்கள் நடமாட்டம் குறித்து நோட்டமிட்டு சென்று இருப்பது பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • பூட்டை உடைத்து ஒன்றரை சவரன் தாலி-ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ தரணீஸ்வரர் திருக்கோவில் மற்றும் இதன் அருகே பொன்னியம்மன் திருக்கோவில் ஆகியவை உள்ளது. இக்கோவில்களுக்கு அருகே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,முக்கரம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த மாம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில், இக்கோவில்களின் அர்ச்சகர்கள் நேற்று இரவு கோவில்களை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை பூஜை செய்ய கோவிலுக்கு வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத தரணீஸ்வரர் திருக்கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தாலி மற்றும் பொன்னியம்மன் கோவிலிலிருந்த உண்டியல், ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.30,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும், மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற விவசாயின் நிலத்தில் இருந்த டிராக்டரையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அங்கு வைத்திருந்த சுமார் 35 லிட்டர் டீசலை கீழே கொட்டி விட்டு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகளை சேதப்படுத்திவிட்டு சென்றிருந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையம் மற்றும் ஊத்துக்கோட்டை காவல் நிலையம் ஆகியவற்றில் கிராம மக்கள் மற்றும் விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் புகார் செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • தனிப்படை விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் காந்தி நகர் பகு தியை சேர்ந்தவர் உமா (வயது 50). முருங்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள் ளியில் ஆசிரியையாகவேலை செய்து வருகிறார்.

    இவரது கணவர் ஜான்சன்.சென்னை யில் குடிநீர் வடிகால் வாரியத் தில் வேலை செய்து வருகி றார். நேற்று காலை ஆசிரியை உமா வழக்கம் போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றார்.

    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் பணம் ரூ.1,000 திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தக்கோலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
    • மேலும் 2 முறை திருட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே எஸ்.குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று வழக்கம்போல் இரவு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த சாமி அறை மற்றும் மற்றொரு அறை பூட்டு உடைக்கப்பட்டு அறை கதவு திறந்திருந்தது. மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் ஒரு கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் சாமி நெற்றியில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 1 1/2 லட்சமாகும்.

    ஆனால் சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி செல்லாமல் சென்றனர். மேலும் தடவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் போலீஸ் மோப்பநாய் கோவிலுக்கு வரவழைத்து மோப்பம் பிடித்து அந்த பகுதியில் உள்ள சுடுகாடு வரை சென்று நின்றது. இந்த நிலையில் கோவிலில் கடந்த 3 முறை மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதில், ஒரு முறை ஆஞ்சநேயரிடம் இருந்த வெள்ளி பூணூலை திருடி சென்றனர். மேலும் 2 முறை திருட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.  தற்போது நேற்று நள்ளிரவு 4-வது முறையாக மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதில் கோவிலில் இருந்த வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இக்கோவில் சாலை ஓரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் திருடு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • திருட்டு கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
    • கைரேகை நிபுணர்கள் சோதனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சி சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகில் உள்ள அம்மணி அம்மன் சித்தர் பீட நிர்வாகி ஆவார்.

    இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று வேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் இன்று காலை ரமேஷ் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அவர் குடும்பத்தினருடன் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர்கள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோக்களின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் கலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    45 பவுன் நகை கொள்ளை

    மேலும் வீட்டில் இருந்த 45 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×