search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interest"

    • வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுள்ளார்
    • புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தார்.

    மூலனூர் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூரை அடுத்த எரிசனம்பாளையத்தை சோ்ந்தவா் ஏ.செந்தமிழ்ச்செல்வன் (வயது 22). இவா் பள்ளபட்டியை சோ்ந்த நிதி நிறுவன அதிபரான ராம்குமாரிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளாா்.இதற்காக அசல் மற்றும் வட்டியுடன் சோ்ந்து ரூ.15 ஆயிரம் கட்டியதாக தெரிகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக செந்தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு வந்த ராம்குமாா் மேலும் வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுடன், புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தாராம்.

    இது குறித்து மூலனூா் போலீஸ் நிலையத்தில் செந்தமிழ்ச்செல்வன் புகாா் அளித்துள்ளாா்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    • வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்திய பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • மற்றொரு பெண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் முருகன் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி ஜெயக்கொடி (36). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு 2 பத்திரங்களை எழுதி கொடுத்து ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

    அதன் பின்னர் 2020-ம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் விஜயலட்சுமியிடம் வாங்கியுள்ளார். அதற்கு கடந்த 4 ஆண்டுகளாக ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் வட்டியாக செலுத்தி உள்ளார்.

    அதன் பின்னரும் விஜயலட்சுமி கூடுதல் வட்டி கேட்டு ஜெயக்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயக்கொடி விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. #SmallSaving #Interest #RatesHiked
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றில், தபால் நிலைய சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வைப்பு நிதி (பி.பி.எப்.) போன்ற பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மேற்கூறிய சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கு வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்படுகிறது. அதே போல் பி.பி.எப். மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் கிஷான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாகவும், பெண் குழந்தைக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    எனினும், வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான அடிப்படை வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #SmallSaving #Interest #RatesHiked
    ×