search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INC"

    • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை
    • பா.ஜ.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் எதுவும் இல்லை

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகன் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கான பொதுத்தேர்தல், வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும்.  ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.

    இன்று, அம்மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தில், களபிப்பல் பகுதியில் ஒரு பொது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரும். இதுவரை அவர்களின் சரியான எண்ணிக்கை எங்குமே இல்லை. நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் வகுப்பதற்கு பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்களுக்கோ எம்.பி.க்களுக்கோ எந்த அதிகாரமோ பங்களிப்போ இல்லை. கேபினெட் செயலர்கள் மற்றும் 90 அதிகாரிகளை கொண்டுதான் நாடே இயக்கப்படுகிறது. அதிகாரவர்க்கமும், ஆர். எஸ்.எஸ். பிரதிநிதிகளும்தான் நாட்டையே வழிநடத்துகிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணாக மத்திய பிரதேச மாநிலம் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 விவசாயிகள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராகுல் அறிவித்தார்.

    • போர் குறித்த கருத்து வேறுபாட்டால் கூட்டறிக்கை வரைவு முடிவாகாமல் இருந்தது
    • 200 மணிநேர பேச்சுவார்த்தை, 300 சந்திப்புகள், 15 வரைவறிக்கைகள் தேவைப்பட்டது

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள மாநில திருவனந்தபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், சசி தரூர் (67). மூத்த அரசியல்வாதியான இவர், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. அரசு எடுக்கும் பல முடிவுகள் குறித்து உலக அரங்கில் முன்வைக்கும் விமர்சனங்கள் மிகவும் பிரபலமாக பேசப்படும்.

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ரஷிய உக்ரைன் போரின் காரணமாக இம்மாநாட்டின் சார்பாக தலைவர்களின் கூட்டறிக்கை வரைவதில் கருத்தொற்றுமை ஏற்படாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

    இம்முறை இந்தியா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவதால் கூட்டறிக்கை தாமதமானாலோ அல்லது இடம் பெறாமல் போனாலோ நாட்டிற்கு பின்னடைவாக கருதப்படலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால் நேற்று மாலை, அனைத்து தலைவர்களின் 100 சதவீத சம்மதத்துடன் அறிக்கை தயாரானதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனையடுத்து, டெல்லி பிரகடனம் எனும் பெயரில் அந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    200 மணி நேர பேச்சுவார்த்தை, 300-க்கும் மேற்பட்ட இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உலக பிரதிநிதிகளின் பரிசீலனைக்காக 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகள் என கடின உழைப்பிற்கு பிறகே இது சாத்தியமானதாக இம்மாநாட்டின் ஷெர்பா எனப்படும் ஒருங்கிணைப்பாளர் அமிதாப் காந்த் சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

    இதனையறிந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சசி தரூர் இந்த முயற்சிகளை வெகுவாக பாராட்டினார். தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில், அமிதாப் காந்த் வெளியிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

    "சிறப்பாக பணி புரிந்துள்ளீர்கள் காந்த். வாழ்த்துக்கள். நீங்கள் சிவில் சேவைக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவு துறை (ஐஎஃப்எஸ்) பணிக்கு பதில் இந்திய ஆட்சிப் பணியை (ஐஏஎஸ்) தேர்வு செய்ததன் மூலம் ஐஎஃப்எஸ் ஒரு திறமையான அதிகாரியை இழந்து விட்டது. இந்தியாவிற்கு ஜி20 மாநாட்டில் இது ஒரு அற்புதமான தருணம்."

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ம.பி.யில் வரும் நவம்பர் மாதம் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது
    • கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது

    இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

    ஆனால், மார்ச் 2020ல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கமல்நாத் அரசை எதிர்த்து தனது அணியுடன் பா.ஜ.க.வை ஆதரித்ததால், பா.ஜ.க. அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு அவர் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ம.பி.யில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இங்கு கடுமையாக போட்டி போடுகின்றன.

    மத்திய பிரதேச பண்டல்கண்ட் பகுதியில் 6 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சாகர் எனும் பகுதியில், ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இப்போதுதான் கார்கே முதல்முறையாக மத்திய பிரதேசத்திற்கு வந்திருக்கிறார். கார்கேயின் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இப்பின்னணியில் அவர் உரையில் மக்களுக்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

    எதிர்பார்த்ததை போலவே வாக்காளர்களை ஈர்க்கும் பல சலுகைகளை அவரது உரையில் உறுதியளித்தார். அதன்படி, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ.500-க்கு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். முதல் 100 யூனிட்டுகள் வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் நெருங்கும் போது இரு கட்சிகளின் சலுகைகளும் முழுவதுமாக தெரிய வரும்.

    டி.வி. சேனல் விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். 

    இந்த தேர்தலில் காங்கிரஸ் குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்த் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், டி.வி. சேனல் விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதித்து காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டி வி சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.
    ×