search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ilayaraja"

    • பவதாரிணியின் உடல் சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.

    இசை விழா ஒன்றுக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்று பவதாரிணியின் உடலை பார்த்து கண் கலங்கினார்.

    47 வயதே ஆன பாடகி பவதாரிணியின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

    பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பவதாரிணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    மாலை பவதாரிணியின் உடல் சென்னை தியாகராய நகர் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    ஏராளமான பொதுமக்களும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பவதாரிணியின் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தெலுங்கு முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

    பவதாரிணியின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இரவு காலமானார்.
    • அவரது உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், அன்பு மகளே என பதிவிட்டு பவதாரிணியின் சிறுவயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    • நதிகள் இணைப்புத் திட்டத்தை பாரதியார் அப்போதே பாடியிருக்கிறார்.
    • காசியில் தமிழ் சங்கமத்தை நடத்தும் பிரதமரை கண்டு வியப்படைகிறேன்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது: 

    காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர் பேச்சுக்களை காசியில் கேட்க கருவி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முன்னேற்றம் அடையாத நேரத்தில் பாரதியார் இதை பாடியுள்ளார்.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அப்போதே பாரதியார் பாடியிருக்கிறார்.


    இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் கங்கையில் மூழ்கி எழும் போது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்த நிகழ்வு காசியில் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருமை மிக்க காசி நகரில் தமிழ் சங்கமத்தை நடத்தும் எண்ணம் பிரதமருக்கு எப்படி வந்தது என்பதை கண்டு வியப்படைகிறேன்.

    தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி, காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது. தமது குழுவினருடன் ஜனனே ஜனனே, ஓம் சிவோஹம் உள்ளிட்ட பாடல்களை அவர் பாடினார்.  பிரதமர் மோடி அந்த பாடல்களை ரசித்து கேட்டு மகிழ்ந்தார்.

    • இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
    • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் விழாவில் பங்கேற்கின்றனர்.

    காந்தி கிராமம்:

    திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு பிரதமர் மதுரை வருகிறார். பின்னர் மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

    அதன்பின்னர் அங்கு இருந்து கார் மூலம் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் பிரதமர் விசாகப்பட்டினத்திற்கு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் வருவதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்திய தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கையேடு விநியோகம்.

    சென்னையில் இந்திய கடலோரக் காவல்படையின் விமானத்தளம் சார்பில் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நாட்டின் பெருமைமிகு விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். 


    சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம், நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மாணவர்களின் உள்ளங்களில் நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் விதமாக, இந்திய தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும். தேசிய கொடிகள், கொடிகளை கொண்ட பட்டைகள், கையேடுகள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

    • மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • இளையராஜாவுக்கு, மத்திய இணை மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்து வாழ்த்து.

    விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். 

    பாராளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்ற பிறகு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது அழைப்பின்பேரில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இளையராஜா சந்தித்தார். 

    முன்னதாக பாராளுமன்ற அலுவலகத்தில் இளையராஜாவிற்கு சால்வை அணித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட, இசைஞானி இளையராஜா சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தமது டுவிட்டர் பதிவில், மந்திரி எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.  

    இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி முரளிதரனும் உடன் இருந்தார்.

    • பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

    கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை.

    இதற்கிடையே, இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி. ஆக நாளை பதவி ஏற்க நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

    • மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே, கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி. ஆக நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.டெல்லி சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர்.

    இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.

    இசையமைப்பாளர் இளையராஜா 80 வயதை அடைந்திருப்பதால், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேகம் செய்து வழிபட்டு இருக்கிறார்.
    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    மேலும் இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பவுர்ணமியாக்கிய வரலாறு நிகழ்ந்த தலம். இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இளையராஜா

    இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று மாலை 80 வயதை அடைந்த இசையமைப்பாளர் இளையராஜா சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார்.

    தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவகுமார் சிவாச்சாரியார், செந்தில்குமார் குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா, இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ரசிகர்கள் உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார்.
    இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பல்வேறு செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்குக் காலர் டியூன்களாகவும், ரிங் டோன்களாகவும் கொடுத்து அதற்குத் தனியாகப் பணம் வசூலித்து வருகின்றன. இதே போல சிலர் இளையராஜாவின் பழைய பாடல்களை நவீன முறையில் தர மேம்படுத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

    இளையராஜா

    இதற்கு முறைப்படி இளையராஜாவிடம் அனுமதி வாங்கினார்களா என்பது தெரியாது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இளையராஜா, ரசிகர்கள் தனது பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் சில பாடல்களை அவரே நேரில் பாடி பதிவு செய்திருப்பதையும் பார்க்க முடியும். இந்த செய்தி இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
    96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்த இளையராஜாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, என்னவானாலும் தான் இளையராஜாவின் ரசிகன் என்று கூறியிருக்கிறார்.
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. படத்தில் இளையராஜாவின் பிரபல பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள்.

    இதுபற்றி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த வீடியோவில் இளையராஜா இசையமைத்து தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த கண்மணி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின் பின்னணி இசையை வாசிக்கிறார்.

    கோவிந்த் வசந்தாவின் பெருந்தன்மையான இந்த கருத்தை வரவேற்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    ×