search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Test Rankings"

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். #ViratKohli
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிச.) நேற்று வெளியிட்டுள்ளது.

    இதன்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி (116 புள்ளிகள்) ஒரு புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் தொடர்கிறது. தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு புள்ளி மட்டும் சரிந்து இருக்கிறது. மற்றபடி அணிகளின் தரவரிசையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

    தென்ஆப்பிரிக்க அணி (106 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (105 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இலங்கை அணி (97 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (76 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (67 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (2 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.

    பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி (935 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் (919 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (847 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (835 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (812 புள்ளிகள்), இந்திய வீரர் புஜாரா (765 புள்ளிகள்), இலங்கை வீரர் கருணாரத்னே (754 புள்ளிகள்), இலங்கை வீரர் சண்டிமல் (733 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (724 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா (719 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 33 ரன்னும் எடுத்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேறி 60-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் 92 ரன்கள் சேர்த்த இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 23 இடங்கள் ஏற்றம் கண்டு 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரபாடா (882 புள்ளிகள்), பிலாண்டர் (826 புள்ளிகள்), இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (812 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் (795 புள்ளிகள்) ஆகியோர் முறையே நம்பர் ஒன் இடம் முதல் 5-வது இடம் வரை அப்படியே தொடருகின்றனர். இந்திய வீரர் ஆர் அஸ்வின் 8-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் முகமது ஷமி 22-வது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (420 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (400 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (380 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (370 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், இந்திய வீரர் அஸ்வின் (341 புள்ளிகள்) 5-வது இடத்தையும் பெற்றனர்.
    டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர். #Prithvishaw
    இங்கிலாந்து தொடரின்போது இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் அறிமுகமானார். கடைசி டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ராஜ்கோட் மற்றும் ஐதராபாத் டெஸ்டில் இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    மற்றொரு இளம் வீரரான பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தொடக்க வீரரான பிரித்வி ஷா ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஐதராபாத் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் விளாசினார். இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    ஐதராபாத் டெஸ்டில் வேகப்பந்தில் தனி ஒருவராக நின்று அபாரமாக பந்து வீசி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். இந்த மூன்று பேரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா 73-வது இடத்தை பிடித்திருந்தார். ஐதராபாத் டெஸ்டில் (70, 33 நாட்அவுட்) சிறப்பான விளையாடியதன் மூலம் 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் ரிஷப் பந்த் 111-வது இடத்தில் இருந்தார். தற்போது இரண்டு இன்னிங்சிலும் தலா 92 ரன்கள் அடிக்க தற்போது 62-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 29-வது இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா, முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதல் 25 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    வெஸ்ட்இண்டீசுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி ஐ.சி.சி. தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளது. #India #WestIndies #ICC #TestRanking #INDvWI
    துபாய்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது. இதே போல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் 2 டெஸ்டில் மோதுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 7-ந்தேதி துபாயில் தொடங்கிறது.



    இவ்விரு தொடர்களின் முடிவுகள் தரவரிசையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும் (115 புள்ளி), தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் (106 புள்ளி), ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் (106 புள்ளி) உள்ளன. பாகிஸ்தான் 7-வது இடமும் (88 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடமும் (77 புள்ளி) வகிக்கின்றன.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் ஒரு புள்ளி உயர்ந்து 116 புள்ளிகளை எட்டும். 1-0 என்ற கணக்கில் வென்றால் ஒரு புள்ளி குறையும். தொடர் சமனில் முடிந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 112 ஆக குறையும். ஆனால் முதலிடத்திற்கு பிரச்சினை வராது.

    அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தினால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 108 ஆக சரிவடையும். வெஸ்ட் இண்டீஸ் அணி 85 புள்ளிகளை எட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணியின் முதலிடத்திற்கும் ஆபத்து வந்து விடும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும்பட்சத்தில் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணியினர், முதலிடத்தை தக்கவைக்கும் நோக்குடன் இந்த தொடரில் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பாகிஸ்தானை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் 107 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேற முடியும். பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இரண்டு டெஸ்டிலும் வெற்றி கண்டால் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 97 ஆக எகிறுவதுடன், மயிரிழை வித்தியாசத்தில் இலங்கையை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை பிடிக்கும். இத்தகைய முடிவு ஆஸ்திரேலியாவை 100 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு சறுக்கி விடும்.

    சில வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தங்களது தரவரிசையை வலுப்படுத்திக்கொள்ளவும் இந்த தொடர் உதவும். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி (930 புள்ளி) ரன்மழை பொழிந்தால் அவரது புள்ளிகள் கணிசமாக ஏற்றமடையும். இந்தியாவின் புஜாரா (6-வது இடம்), லோகேஷ் ராகுல் (19), வெஸ்ட் இண்டீசின் கிரேக் பிராத்வெய்ட் (13), பாகிஸ்தானின் அசார் அலி (15) ஆகியோரும் அசத்தினால் தங்களது தரவரிசையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

    இதே போல் பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (4-வது இடம்), அஸ்வின் (8), ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (10) வெஸ்ட் இண்டீசின் ஷனோன் கேப்ரியல் (11), ஜாசன் ஹோல்டர் (13), பாகிஸ்தானின் யாசிர் ஷா(18) உள்ளிட்டோர் தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  #India #WestIndies #ICC #TestRanking #INDvWI
    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது. #ICCTestRankings
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து 4-1 என இந்தியாவை துவம்சம் செய்து கோப்பையை கைப்பற்றியது.

    இந்தியாவை 4-1 என வீழ்த்தியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது.

    4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்தது. தற்போது 8 புள்ளிகள் அதிகம் பெற்று 105 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.



    1-4 என படுதோல்வியடைந்ததால் இந்தியா 10 புள்ளிகளை இழந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. 109 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் 200 ரன்கள் குவித்ததன் மூலம் மீண்டும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி. #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 200 ரன்கள் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம்பிடித்தார்.

    லார்ட்ஸ் டெஸ்டில் 40 ரன்கள் மட்டுமே அடித்ததால், 2-வது இடத்திற்கு இறங்கினார். டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 200 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் மீண்டும் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.



    அத்துடன் 937 புள்ளிகள் பெற்றுள்ளார். இன்னும் ஒரு புள்ளி பெற்றால் 938 புள்ளிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக புள்ளிகள் பெற்றவர்கள் பட்டியலில் 10-வது இடத்தை பிடிப்பார். டான் பிராட்மேன் 961 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஹட்டன், ரிக்கி பாண்டிங், ஹோப்ஸ்  942 புள்ளிகளும், மே 941 புள்ளிகளும், ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், வாலூட், சங்ககரா 938 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி லார்ட்ஸ் டெஸ்டில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு இறங்கினார் விராட் கோலி. #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டில் 149, 51 ரன்கள் அடித்த விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.

    லார்ட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி முதல் இன்னிங்சில் 23 ரன்களும், 2-வது இன்னிங்சில் 17 ரன்களும் அடித்தார். இதன்மூலம் முதல் இடத்தை பறிக்கொடுத்தார்.



    929 புள்ளிகளுடன் ஸ்மித் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 919 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 851 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
    ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி 934 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #ViratKohli #ICC

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 149, 51 ரன்கள் எடுத்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    934 புள்ளிகளுடன் கோலி முதலிடமும், 929 புள்ளி என்ற சிறிய வித்தியாசத்துடன் ஸ்மித் இரண்டாம் இடமும், ரூட் 865 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்களில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    125 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரபடா 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார். #ICCTestRankings #Rabada
    துபாய்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி தென்ஆப்பிரிக்க தொடரில் 158, 60, 53, 85 ரன்கள் வீதம் மொத்தம் 356 ரன்கள் சேர்த்து தொடர்நாயகன் விருது பெற்ற இலங்கை வீரர் கருணாரத்னே, டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா 3 இடங்கள் குறைந்து 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் (929 புள்ளி), 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் (903 புள்ளி), 3-வது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் (855 புள்ளி) நீடிக்கிறார்கள்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (882 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2-வது இடத்துக்கு இறங்கினார். இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரபடா 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (892 புள்ளி) மீண்டும் முதலிட அரியணையில் ஏறினார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 4-வது இடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5-வது இடமும் வகிக்கிறார்கள்.

    இலங்கை தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 இடங்கள் உயர்ந்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார். கொழும்பு டெஸ்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தாத தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 5 இடங்களை பறிகொடுத்து 24-வது இடத்துக்கு (635 புள்ளி) பின்தங்கினார். கடந்த 11 ஆண்டுகளில் ஸ்டெயின் பெற்ற குறைந்த தரவரிசை புள்ளி இதுவாகும்.  #ICCTestRankings #Rabada
    ×