search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST"

    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது.
    • 2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும்.

    கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.

    2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,72,003 கோடியாக அதிகரித்துள்ளது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாடுமுழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டு கடந்துள்ள நிலையில், அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

    அதன்படி, மொத்தமாக ரூ.1,72,003 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.30,062 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.38,171 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.91,315 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் மாத வசூல், ஜிஎஸ்டி வசூலில் இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமாக்கும் வகையில் கடந்த மாதம் மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
    • ஆறு மாதங்களுக்குப் பிறகு (2024, ஏப்ரல்) மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடை பெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சா் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சா்களின் ஒப்புதலோடு இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றில் கட்டப்படும் முழு பந்தயத் தொகை மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    அதைத் தொடா்ந்து, கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமாக்கும் வகையில் கடந்த மாதம் மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்மூலம் ஏற்கனவே 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்படும் லாட்டரி, சூதாட்டங்களுடன் இணையழி விளையாட்டுகள், குதிரைப்பந்தயம், சூதாட்ட விடுதிகள் ஆகியவையும் சோ்க்கப்பட்டன.

    மேலும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி வெளிநாடுகளில் இருந்து இணையம் மூலம் நடத்தப்படும் இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து உள்நாட்டு சட்டங்களில் குறிப்பிட்டுள்ள வரியைச் செலுத்த வேண்டும். இந்தச் சட்டம் இன்று முதல் (1-ந் தேதி) அமலுக்கு வரவுள்ளது என்றும், இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு (2024, ஏப்ரல்) மதிப் பாய்வு செய்யப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

    • ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.59 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
    • ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.65 கோடியாக இருந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

    இந்நிலையில், மொத்தமாக ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59,069 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடியாக இருந்தது. இந்தாண்டு 2023 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    • 70 பெண்களைக் கொண்ட இந்த அர்ப்பணிப்பு குழு நான் ருசித்த மிகவும் சுவையான இனிப்புகளில் சிலவற்றை உருவாக்குகிறது.
    • சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது எம்.பி. தொகுதியான வயநாட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தார். செல்லும் வழியில் அவர் ஊட்டியில் இயங்கி வரும் சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றிருந்தார்.

    அங்கு அவர் நிறுவனத்தின் தயாரிப்புகளை சுவைத்ததுடன், அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடி, இணைந்து இனிப்பு தயாரிக்கவும் செய்தார். 60-க்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு, ஒரு தம்பதி நடத்தி வரும் இந்த நிறுவனத்தை அவர் பாராட்டியுள்ளார்.

    இந்த சந்திப்புகள் தொடர்பான வீடியோவை நேற்று அவர் வெளியிட்டு இருந்தார். அத்துடன் இதுபோன்ற சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை பாதுகாக்க ஜி.எஸ்.டி.யை ஒரே விகிதமாக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது:-

    சமீபத்தில் வயநாடு செல்லும் வழியில், ஊட்டியின் மிகவும் பிரபலமான சாக்லெட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு செல்லும் மகிழ்ச்சியான அனுபவம் எனக்கு கிடைத்தது. இந்த சிறு வணிகத்தின் பின்னணியில் உள்ள தம்பதியினரின் தொழில் முனைவோர் உணர்வு ஊக்கம் அளிக்கிறது.

    70 பெண்களைக் கொண்ட இந்த அர்ப்பணிப்பு குழு நான் ருசித்த மிகவும் சுவையான இனிப்புகளில் சிலவற்றை உருவாக்குகிறது.

    எனினும் நாடு முழுவதிலும் உள்ள எண்ணற்ற பிற சிறு, குறு, நடுத்தர தொழில்களை போல, இந்த நிறுவனமும் கப்பார் சிங் வரியால் (ஜி.எஸ்.டி.) அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால் நான் இங்கு சந்தித்த பெண்களைப் போன்ற கடின உழைப்பாளிகள்தான் இந்தியாவின் வளர்ச்சியைத் தக்க வைக்கின்றனர்.

    தொழில்துறை மையங்களை உருவாக்குவதும், ஒரே ஜி.எஸ்.டி விகிதத்தை அமல்படுத்துவதுமே இந்தியாவின் வளர்ச்சி எந்திரத்தை இயக்கும் இந்த நிறுவனங்களை பாதுகாப்பதற்கான இன்றியமையாத நடவடிக்கைகள் ஆகும். பெண்கள் தலைமையிலான இது போன்ற குழுக்கள் அனைத்து ஆதரவுக்கும் தகுதியானவர்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.

    அதில் அவர், 'இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் ராகுல் காந்தி சமீபத்தில் ஊட்டியில் பெண்களால் நடத்தப்படும் சாக்லெட் தொழிற்சாலைக்கு சென்றார். அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், அவர்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொண்டார். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை சேர்ந்தவர்களின் குறைகளை இதைப்போல கேட்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தேவை' என்றும் குறிப்பிட்டு இருந்தார்

    • டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.
    • இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடந்தது.

    காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும். இது அமல்படுத்தப்பட்டு 6 மாதத்துக்குப் பிறகு இந்த முடிவு குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    • ஆறு ஆண்டுகளில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஐந்தாவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
    • ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,65,105 கோடியாக அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

    அதன்படி, மொத்தமாக ரூ.1,65,105 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    செஸ் வரியாக ரூ.11,779 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கடைகளில் இருந்த வியாபாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி கோழிக்கோடு மாவட்டம் திருவண்ணூர் எஸ்.எம். தெருவில் உள்ள 25 கடைகள் மற்றும் அரையிடத்துப்பாலம் பகுதியில் உள்ள மால் உள்ளிட்டவைகளில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்த கடைகளில் இருந்த வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்களின் சோதனையை தொடர்ந்தனர்.

    இதில் ஆவேசம் அடைந்த வியாபாரிகள், சோதனையில் ஈடுபட்ட ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சிலரை கடைக்குள் வைத்து அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து கடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டனர்.

    • நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
    • புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:

    ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

    புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படும்.

    செயற்கை ஜரிகைக்கு 12% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்ட நிலையில் இனி 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

    கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜி.எஸ்.டி. வரி பாக்கி ரத்து செய்யப்படும்.

    தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
    • புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

    இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில் இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக தெரிவித்தார்.

    'புற்றுநோய்க்கான மருந்துகள், அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்காக உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான 'டைனடக்சி மேப்' மருந்து மீது தற்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது. புற்று நோய்க்கான அந்த மருந்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது நோயாளிகளுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆராயவுள்ளது.

    இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

    குழுவில் இடம்பெற்றிருந்த கோவா, 28 சதவீதத்துக்குப் பதிலாக 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வலியுறுத்தியதால், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் பெரும்பான்மை அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது. எனினும், அதில் இடம் பெற்றிருந்த சில விவகாரங்களுக்கு கோவா எதிா்ப்பு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த அறிக்கையை மறுஆய்வு செய்யுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது.

    அதன் அடிப்படையில் மாநில நிதியமைச்சா்கள் குழு மீண்டும் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது. இது தொடா்பான இறுதி முடிவு எடுப்பதற்கான பொறுப்பை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடமே மாநில நிதியமைச்சா்கள் குழு ஒப்படைத்துள்ளது.

    ×