ஜூலை மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதியமைச்சகம் தகவல்

ஆறு ஆண்டுகளில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஐந்தாவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,65,105 கோடியாக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதியமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

அதன்படி, மொத்தமாக ரூ.1,65,105 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

செஸ் வரியாக ரூ.11,779 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com