என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்டோபர் மாதத்தில் ரூ.1.72 லட்சம் கோடி: ஜிஎஸ்டி வரி வசூலில் இரண்டாவது அதிகபட்சம்
    X

    அக்டோபர் மாதத்தில் ரூ.1.72 லட்சம் கோடி: ஜிஎஸ்டி வரி வசூலில் இரண்டாவது அதிகபட்சம்

    • அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,72,003 கோடியாக அதிகரித்துள்ளது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாடுமுழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டு கடந்துள்ள நிலையில், அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

    அதன்படி, மொத்தமாக ரூ.1,72,003 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.30,062 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.38,171 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.91,315 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் மாத வசூல், ஜிஎஸ்டி வசூலில் இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×