search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government job"

    செந்துறை அருகே அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஆர்.எஸ். மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் கரூர்-அரியலூர் இடையே செந்துறை அருகே உள்ள சிட்டேரியில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உடையார் பாளையம் ஆர்.டி.ஓ.வுக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது வெள்ளாற்றின் ஓரத்தில் மணல் கடத்த வசதியாக சாலை போடப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. உத்திரவின் பேரில் மாத்தூர் ஆர்.ஐ. செந்தில், ஆலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராயர் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் அந்த சாலையை பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் தூண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிட்டேரி முள்ளுகுறிச்சியை சேர்ந்த அருள் (வயது 40) என்பவர் அங்கு வந்து சாலையை துண்டிக்க கூடாது என்று கூறி தகராறு செய்தார். ஆர்.ஐ. செந்தில், கிராம நிர்வாக அதிகாரி ராயர் ஆகிய 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார். 

    இது குறித்து செந்தில் தளவாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இன்று அதிகாலையில் அருளை கைது செய்தனர். 
    திண்டிவனம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக முன்னாள் எம்.பி.ரித்தீஷ் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எறையானூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 35). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பயிற்சி முடித்துள்ளார்.

    இவரிடம் திண்டிவனம் நல்லியகோடான் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதை ஜெயபாலன் நம்பினார். அவர் கண்ணனிடம் தனக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று கண்ணன் கூறினார்.

    இதையடுத்து ஜெயபாலன் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.7 லட்சத்தை கண்ணனிடம் கொடுத்தார்.

    இந்த பணத்தை கண்ணன் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் கண்ணனும், ரித்தீசும் ஜெயபாலனுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர்களிடம் சென்று தன்னுடைய பணத்தை திருப்பித்தருமாறு ஜெயபாலன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்து விட்டனர்.

    இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன் பேரில் ரித்தீஷ், கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    கேரளாவில் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வாலிபரின் மனைவிக்கு அரசு வேலையும் ரூ.10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.#Sreejith #custodialdeath #governmentjob #wife #chiefminister #kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பரவூர் வராப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அகிலா(வயது26).

    அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஸ்ரீஜித்தை கைது செய்து அவர் மீது வராப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடந்த போது ஸ்ரீஜித்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் இறந்து விட்டார். போலீசார் ஸ்ரீஜித் மீது பொய் வழக்கு பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர்.

    இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரை கண்டித்து எதிர் கட்சியினர் போராட்டமும் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கேரள அரசு ஐ.ஜி. மட்டத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

    அதன்படி நடந்த விசாரணையைத் தொடர்ந்து ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.



    போலீஸ் காவலில் மரணம் அடைந்த வாலிபர் ஸ்ரீஜித் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளை அரசு செய்யும் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது ஸ்ரீஜித்தின் மனைவிக்கு பரவூர் தாலுகா அலுவலகத்தில் கிளார்க் வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டது. எர்ணாகுளம் கலெக்டர் முகமது சபீருல்லா, ஸ்ரீஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி அகிலாவிடம் வேலைக்கான உத்தரவையும், ரூ.10 லட்சம் நிதிக்கான காசோலையையும் வழங்கினார்.#Sreejith #custodialdeath #governmentjob #wife #chiefminister #kerala
    ×