search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl marriage"

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கீழபாலாமடை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது29). இவருக்கு கடந்த ஆண்டு ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது.

    தற்போது குழந்தை பேறுக்காக அந்த இளம்பெண்ணை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சமீபத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அரசு ஆஸ்பத்திரியில் அந்த இளம்பெண் குறித்து விபரங்களை சேகரித்த போது, அவருக்கு 16 வயதே பூர்த்தியானது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதார ஊழியர் முத்துலெட்சுமி போலீசில் புகார் செய்தார். நெல்லை தாலுகா அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 16 வயதான சிறுமிக்கு திருமணம் செய்து குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் கணவர் கணேசன் (29), தாயார் ஆயிரத்தம்மாள், சகோதரன் மணிகண்டன் மற்றும் உறவினர்களான கீழபாலாமடையை சேர்ந்த செல்லப்பா, ஆறுமுகக்கனி, லில்லி ஜெபமணி ஆகிய 6 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கம்பம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தப்பி ஓடியதையடுத்து அவரது பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டி-ஜோதி தம்பதியின் 13 வயது மகளுக்கும் கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்த கோபால்-வசந்தி ஆகியோரின் மகன் பார்த்திபனுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. கடந்த மாதம் 28-ந் தேதி சாமாண்டிபுரம் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுரேசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வருவதை அறிந்ததும் பார்த்திபன் தப்பி ஓடி விட்டார். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பாண்டி, தாயார் ஜோதி மற்றும் உறவினர் கோபால் ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பார்த்திபன் மற்றும் அவரது தாய் ஜெயந்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே 16வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே விஸ்வாசபுரத்தை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மகன் ராஜா(வயது26). இவருக்கும் உப்புக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    18 வயது பூர்த்தியாகாத சிறுமியை திருமணம் செய்ததாக தேனி குழந்தைநலக்குழு தலைவர் சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ்குமார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கு இருவீட்டாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்படி சிறுமியை திருமணம் செய்த ராஜா, அவரது தந்தை ஆண்டவர், தாய் குருவம்மாள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 17 வயது சிறுமியின் திருமணத்தை சமூகநல அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் அவர் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவை சேர்ந்த வாலிபரை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் போலீசாருடன் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமிக்கு திருமண வயது எட்டாததை பெற்றோரிடம் விளக்கிக்கூறினர். இதனை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    பாரிமுனையில் உள்ள கோவிலில் 16 வயது சிறுமிக்கு நடந்த திருமணம் சட்டப்படி குற்றம் என்றும் இந்த திருமணம் செல்லாது என்றும் போலீசார், அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    பாரிமுனையில் உள்ள கோவிலில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த நேற்று காலை ஏற்பாடுகள் நடந்தன.

    இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் அதற்குள் சிறுமி கழுத்தில் மணமகன் தாலி கட்டி விட்டார்.

    போலீசார் தாமதமாக சென்றதால் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. விசாரணையில் சிறுமிக்கும், 28 வயது வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜோசியர் ஒருவர் அளித்த அறிவுரைப்படி சிறுமிக்கு திருமணம் செய்தது தெரிய வந்தது. ஆனால் இது சட்டப்படி குற்றம் என்றும் இந்த திருமணம் செல்லாது என்றும் போலீசார், அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள், சிறுமிக்கு 18 வயது முடியும் வரை திருமணம் செய்ய மாட்டோம் என்று எழுத்து பூர்வமாக போலீசாரிடம் எழுதி கொடுத்தனர்.

    பின்னர் சிறுமி அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இச்சம்பவத்தால் கோவிலில் பரபரப்பு நிலவியது. #tamilnews
    ராமநாதபுரத்தில் 17 வயது சிறுமிக்கு நாளை நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    ராமநாதபுரம்:

    குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் 7 குழந்தைகள் திருமணம் நடத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது உறவினர் கணேஷ்பாபு (வயது28) என்பவருக்கும் ராமநாதபுரம் குண்டு கரையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருப்பது தெரிய வந்தது

    அந்த திருமணத்தை சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் துறைமுகம் வீதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும். கடலாடி நரசிங்ககூட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (27) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சைல்டு லைன் தலைவர் ஜார்ஜ் ஆகியோர் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் அபிராமம் அருகே உள்ள பளூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அவரது உறவினர் அருண்குமார் (29) என்பவருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை மாவட்ட சமூக நல அதிகாரி குணசேகரி தடுத்து நிறுத்தினார். #Tamilnews
    ×