search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனை கோவிலில் 16 வயது சிறுமிக்கு திருமணம்
    X

    பாரிமுனை கோவிலில் 16 வயது சிறுமிக்கு திருமணம்

    பாரிமுனையில் உள்ள கோவிலில் 16 வயது சிறுமிக்கு நடந்த திருமணம் சட்டப்படி குற்றம் என்றும் இந்த திருமணம் செல்லாது என்றும் போலீசார், அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    பாரிமுனையில் உள்ள கோவிலில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த நேற்று காலை ஏற்பாடுகள் நடந்தன.

    இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் அதற்குள் சிறுமி கழுத்தில் மணமகன் தாலி கட்டி விட்டார்.

    போலீசார் தாமதமாக சென்றதால் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. விசாரணையில் சிறுமிக்கும், 28 வயது வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜோசியர் ஒருவர் அளித்த அறிவுரைப்படி சிறுமிக்கு திருமணம் செய்தது தெரிய வந்தது. ஆனால் இது சட்டப்படி குற்றம் என்றும் இந்த திருமணம் செல்லாது என்றும் போலீசார், அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள், சிறுமிக்கு 18 வயது முடியும் வரை திருமணம் செய்ய மாட்டோம் என்று எழுத்து பூர்வமாக போலீசாரிடம் எழுதி கொடுத்தனர்.

    பின்னர் சிறுமி அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இச்சம்பவத்தால் கோவிலில் பரபரப்பு நிலவியது. #tamilnews
    Next Story
    ×