search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் நாளை நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    ராமநாதபுரத்தில் நாளை நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    ராமநாதபுரத்தில் 17 வயது சிறுமிக்கு நாளை நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    ராமநாதபுரம்:

    குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் 7 குழந்தைகள் திருமணம் நடத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது உறவினர் கணேஷ்பாபு (வயது28) என்பவருக்கும் ராமநாதபுரம் குண்டு கரையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருப்பது தெரிய வந்தது

    அந்த திருமணத்தை சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் துறைமுகம் வீதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும். கடலாடி நரசிங்ககூட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (27) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சைல்டு லைன் தலைவர் ஜார்ஜ் ஆகியோர் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் அபிராமம் அருகே உள்ள பளூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அவரது உறவினர் அருண்குமார் (29) என்பவருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை மாவட்ட சமூக நல அதிகாரி குணசேகரி தடுத்து நிறுத்தினார். #Tamilnews
    Next Story
    ×