search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "function"

    • மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
    • மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

    உடுமலை:

    வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சூழ்நிலைகளால் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாவட்டம் வாரியாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக அரசு பள்ளிகளில் தனித்தனியாகவும், குழுவாகவும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஆனால் இத்திட்டம் கொரோனாவுக்கு பின் பள்ளிகளில் நிறுத்தப்பட்டு விட்டது. மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் உளவியல் ஆலோசகர்களிடம் கூறி தெளிவு பெற்றனர்.இதனால் பல பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. தவிர தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் இத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. மாவட்டம்தோறும் ஒரு ஆலோசகர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.இதனால் பள்ளிகளில் தொடர்ச்சியான ஆலோசனை வகுப்புகளுக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்துஉளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்தது. இப்போது தேர்வு பயம் நீக்குவதற்கும் புகார் அளிப்பதற்கும், ஆலோசனை பெறுவதற்கும் பொதுவான சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். மேலும் அவ்வாறு தேடிச்சென்று ஆலோசனை பெற வேண்டும் என்ற மனநிலை வருவதற்கும் ஒரு தெளிவு வேண்டும்.90 சதவீத மாணவர்களிடம் அது கிடையாது. அவர்களிடம் கலந்துரையாடினால் மட்டுமே என்ன பிரச்சினை என்பதை கண்டறிய முடியும். இதற்கு பள்ளிகளுக்கான உளவியல் ஆலோசனை திட்டம் கட்டாயம் தேவையாகதான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    கல்வித்துறை சார்பில் கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதாவது உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இயல்பான நிலையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கற்கும் திறன் மட்டும் சற்று குறைவாக இருக்கும்.அத்தகைய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் பலரும் கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில் அரசின் சலுகை பெற்று பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.

    அதன்படி தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் ஏதாவது ஒரு பாடத்தை தேர்வு எழுதாமல் தவிர்ப்பது, தேர்வெழுத வழக்கமாக ஒதுக்கப்படும் நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது, கணித பாடத்திற்கு கால்குலேட்டர் பயன்படுத்துவது உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இந்த சலுகையை பயன்படுத்தி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் பலர் தமிழ் பாடத்தை எழுதாமலும், அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் ஆங்கில பாடத்தை எழுதாமலும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

    இது குறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    பல பள்ளிகள் கற்றல் குறைபாடு என்ற அரசின் சலுகையை பயன்படுத்தி மொழிப்பாடத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.அத்தகைய விலக்கு பெற்ற மாணவ, மாணவிகள் உண்மையில் அந்த பாடங்களை பயில்வதில் மந்த நிலையில் தான் உள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அத்தகைய சலுகையை பயன்படுத்திக் கொண்டனவா என்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாணவர்களுக்கான எதிர்காலம் குறித்து சிறப்பு விருந்தினர் பேசினார்
    • ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தில் 'ஞானோத்சவ்-23' விழா நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் 'ஞானோத்சவ்-23' மற்றும் கலைத்திருவிழா ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன், ஸ்ரீசாரதா மகளிர் கலை கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், எழுத்தாளருமான ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பேசுகையில், அறிவு என்பது வேறு, ஞானம் என்பது வேறு. அறிவு என்பது நீங்கள் முன்னேற பயன்படுவது, ஞானம் என்பது நீங்கள் பெற்ற அறிவின் மூலம் சமுதாயத்திற்குப் பயன்படுவதாகும். மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணங்களை எப்பொழுதும் தங்களின் தோள்களில் சுமக்க வேண்டும், தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் அதனை ரசனையுடன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    மாணவர்கள் எப்பொழுதும் மன உறுதியுடனும், தைரியத்துடனும் தான் மேற்கொண்ட இலக்கை அடைய வேண்டும். மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.இதில் துணை முதல்வர்கள், துறைதலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில துறை தலைவர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.

    • கிராமம் தோறும் நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு
    • பசுமை நிறைந்த கிராமங்கள் உருவாக்க நோக்கம்

    'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிரா மம்தோறும் துவங்கியுள்ளது என, கரூர் கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தும் விதமாக, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு இயக்கம் கடந்த, 1ல் துவங்கியது. வரும் 15ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதன் மூலம் பொது இடங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் மாஸ் கிளீனிங் செய்தல், பள்ளி கல்லூரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமப்புறங்களில் தனிநபர் இல்லங்களில் சுகாதாரம் பேணுவது தொடர்பாக, சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்ப டுத்துவதை ஊக்குவிக்கும் நட வடிக்கை, கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், என் குப்பை என் பொறுப்பு, என் கிராமம் தூய்மை கிராமம் என, உறு திமொழி எடுத்துக் கொண்டு செயல்படுவது. சுகாதாரமான பசுமை நிறைந்த கிராமங்களை உருவாக்குதல் போன்ற நடவு டிக்கைகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் நீதிபதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது
    • இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார்

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழா மற்றும் பணி மாறுதலாகி செல்லும் நீதிபதி தினேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சார்பு நீதிபதி சமுத்திரக்கனி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி குறித்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அரசு வக்கறிஞர் நீலமேகம், துணைத் தலைவர் முருகேசன், இணை செயலாளர் சரவணன், துணைத் தலைவர் சுதா மற்றும் வழக்கறிஞர்கள் மது, சந்திரசேகர், மது, பிரபு, தோகைமலை குமார், சரவணன், மேட்டு மருதூர் குமார், கார்த்திகேயன், காத்தலிங்கம், நிகில்அரவிந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மருதூர் தமிழரசன் நன்றியுரையாற்றினார்.


    • கரூர் மைய நூலகத்தில் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

    கரூர்,

    உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ மாணவியருக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு பள்ளி மாணவ மாணவியர் 300 பேருக்கு நன்கொடை மூலம் நூலக அடையாள அட்டைகளை, வாசகர் வட்டத் தலைவர் தீபம் சங்கர் வழங்கினார். மேலும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய கிளை ஊர்புற நூலகங்களில் 44 புரவலர்கள், இரண்டு பெரும் புரவலர்கள், இரண்டு கொடையாளர்கள் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மைய நல் நூலகர் சுகன்யா, மாநகராட்சி கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, நூலகர் கார்த்தி நிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் கரூர் மாநகராட்சி காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் புத்தக வாசிப்பை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியை திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.

    • தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.
    • மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார்.

    கோவை,

    கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 20 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து செல்ல தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.

    புதிதாக வாங்கப்பட்ட 45 தள்ளுவண்டிகள் மற்றும் 180 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் மேயர் கல்பனா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வழங்கினார். இதில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது
    • ஏராளமானவர்கள் பங்கேற்பு

    திருச்சி, 

    எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங் கம் திருச்சி மாவட்ட ஆட்டோ நலச்சங்க தலைவர் அல்லா பகஷ் தலைமையில் இப்தார் நிகழ்ச்சி உறையூரில் நடைபெற்றது. ஆட்டோ நலச் சங்க செயலாளர் தமிமுல் அன்சாரி தொகுத்து வழங்கினார். சிட்டி மீட்டர் ஆட்டோ குழு தலை–வர் முகமது இலியாஸ் வர–வேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைவரு–மான இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி மற்றும் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் முகம்மது ரபிக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.நிர்வாகிகள் தலைவர் முஸ்தபா, துணை தலைவர் மீரான் மைதீன், செயலாளர் காஜா முயினுதீன், கட்சியின் மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ், சிராஜ், அப்துல் மாலி, சக்கரை மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் புதிய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகிகள் சிவா, கணேசன், சிட்டி மீட்டர் ஆட்டோ குழு செயலாளர் அப்துல் சையது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது
    • மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் நடைபெற்றது

    கரூர், 

    கரூர் மாவட்ட பொது நூலக துறை சார்பில் உலக மகளிர் தினத்தை ஒட்டி 47வது சிந்தனை மிச்சம் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளர் கவிதா ஜவகர் இறைவி என்ற தலைப்பில் பேசியது, ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. 1,330 திருக்குறளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து லட்சியமாக வைத்துக் கொண்டால் வாழ்வில் உயர்வு நிச்சயம். பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பல ஆண் எழுத்தாளர்கள் தான் பெண்களின் வீரத்தை புகழ்ந்தும் பெருமைப்படுத்தியும் எழுதி உள்ளனர். அதை படித்த பிறகு தான் பெண்களும் எழுதத் தொடங்கினர். சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதை இறைவி என்ற படத்தில் இயக்குனர் அழகா காட்டியிருப்பார். பெண்கள் பாட்டியாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக ஆண்கள் வாழ்வில் உள்ளனர். பெண்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது எனக் கூறினார்.விழாவில் வாசகர் வட்டத் தலைவர் சங்கர், துணைத் தலைவர் விமலா தித்தன், மாவட்ட மைய நூலக அலுவலர் மேரிரோசரி சாந்தி, நல்லாசிரியர் கோவிந்தராஜ், தொழிலதிபர்கள் தங்கராஜ், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கவிதா ஜவகர் எழுதிய நீயே முளைப்பாய் என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது.

    • எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
    • உணவின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் வட்டார அளவில் 0-6 மாத எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.விராலிமலை தெற்கு தெரு அங்கா–டியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் விராலி மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காமுமணி தலைமை தாங்கினார்.இதில் அட்மா சேர்மன் இளங்குமரன், வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றி பெட்டகத்தை வழங்கி–னார்கள். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜெயபிரபா ஊட்டசத்து பெட்டகம், மருத்துவ அட்டையை பற்றியும் ஊட் டச்சத்து தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் இணை உணவின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு வழங் கப்பட்டது.மேலும் இந்த நிகழவில் மேற்பார்வையாளர்கள் பர்வின்பானு, ராஜாமணி, ரோஸ்லின் மேரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரஸ் வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாசிப்பயறு, கேழ்வரகு பாயாசம் வழங்கப்பட்டது.

    • மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
    • இயற்கையை நேசிக்க உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட வனத்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த உலக வன நாள் விழாவிறகு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், " ஐக்கிய நாடுகளின் சபையில் மார்ச் 21 ஆம் நாள் உலக வன நாள் விழாவாக கொண்டடாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் உலக வனநாளை கொண்டாடி வருகின்றோம். காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றது. அதற்கு நாம் செய்ய வேண்டியது காடுகளை பாதுகாக்க வேண்டும். காடு செழித்தால் நாடு செழிக்கும். காடுகளை பாதுகாப்போம், வெப்பம் தணிப்போம், இயற்கையை நேசிப்போம் என நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்" என தெரிவித்தார்.சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்துகொண்டு பேசுகையில், மாணவ, மாணவிகளிடம் " வன வளத்தை நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்கவும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்பத்துவதற்காகதான் உலக வன நாளை நாம் கொண்டாடுகின்றோம். மனித வாழ்விற்கு தேவையான பல பொருட்களை வழங்கக்கூடிய இடம் தான் வனம். வனங்கள் தான் நம் வாழ்வாதாரத்திற்கு தேவையான தூய்மையான நீரையும் தூய காற்றையும் தருகின்றது. அது மட்டுமின்றி நமது அன்றாடத் தேவைகளான விறகு. விலங்குகளுக்கு தேவையான தீவனம். மருத்துவ மூலிகைகளையும் அள்ளித் தரும் பொக்கிஷம். இந்த நன்னாளில் நாம் வனங்கள் நமக்கு தரும் நன்மைகளை மனதில் வைத்து வனவளத்தை பேணி பாதுகாப்போம் என உறுதி மொழி ஏற்போம்." என தெரிவித்தார். தொடர்ந்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ் ஆகியோரும் பேசினர்.பின்னர் மரக்கன்று நடும் விழா நடந்தது. முன்னதாக உலக வன நாளையொட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த வன நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வன அலுவலர் குகனேஷ், எஸ்பி ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் கற்பகம் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்நிகழ்ச்சியில் வனச்சரகர் பழனிகுமரன், சீனிவாசன் கலைக்கல்லூரி முதல்வர் வெற்றிவேலன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி, வேளாண் கல்லூரி முதல்வர் சாந்தாகோவிந்த, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • திருமானூர் மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை பள்ளியில் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கிரீடம் சூட்டப்பட்டது

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை மான்ய தொடக்கப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற கண்காட்சி விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டார கல்விஅலுவளர் பரிமளம் தலைமை வகித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வியின் பற்றிய முக்கியத்துவத்தை கூறினார். மேலாண்மை நிர்வாகி காந்திமதி முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழகிய மணவாளன் ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலு கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பள்ளி தலைமைஆசிரியை மெரீனா செல்வராணி செய்திருந்தார். ஆசிரியர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கிடையே படைப்புகள் செய்தல், பாடல்கள் கதை கூறுதல், விலங்குகள் போல் ஒலி எழுப்புதல், ஆங்கிலம் வாசித்தல்போ ன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அப்போது பரிசு பெற்றவர்களுக்கு கீரிடம் சூட்டப்பட்டது. நிறைவில் ஆசிரியை துர்கா தேவி நன்றி உரை நிகழ்த்தினார்.


    • ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பெற்றோர் பாராட்டு

    ஆலங்குடி,

    ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது. மார்க்கிரேட் நிர்மலாமேரி அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சூசைராஜ் தலைமை வகித்தார்.குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்த எண்ணும் எழு த்தும் கற்பித்தல் முறையில் பெற்றோர்கள் சிறந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. எண்ணும் எழுத்து கொண்டாட்டத்தில் பெற்றோர்க ளும், மாணவர்க ளும் இணைந்து வகுப்பறை செயல்பாடுகளில் பங் கேற்றுக்கொண்டனர்.பள்ளியின் இடைநிலை ஆசிரியை லூர்துமே ரி அனைவருக்கும் நன்றி கூறினார்.




    ×