search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    47-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி
    X

    47-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி

    • கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது
    • மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்ட பொது நூலக துறை சார்பில் உலக மகளிர் தினத்தை ஒட்டி 47வது சிந்தனை மிச்சம் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளர் கவிதா ஜவகர் இறைவி என்ற தலைப்பில் பேசியது, ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. 1,330 திருக்குறளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து லட்சியமாக வைத்துக் கொண்டால் வாழ்வில் உயர்வு நிச்சயம். பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பல ஆண் எழுத்தாளர்கள் தான் பெண்களின் வீரத்தை புகழ்ந்தும் பெருமைப்படுத்தியும் எழுதி உள்ளனர். அதை படித்த பிறகு தான் பெண்களும் எழுதத் தொடங்கினர். சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதை இறைவி என்ற படத்தில் இயக்குனர் அழகா காட்டியிருப்பார். பெண்கள் பாட்டியாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக ஆண்கள் வாழ்வில் உள்ளனர். பெண்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது எனக் கூறினார்.விழாவில் வாசகர் வட்டத் தலைவர் சங்கர், துணைத் தலைவர் விமலா தித்தன், மாவட்ட மைய நூலக அலுவலர் மேரிரோசரி சாந்தி, நல்லாசிரியர் கோவிந்தராஜ், தொழிலதிபர்கள் தங்கராஜ், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கவிதா ஜவகர் எழுதிய நீயே முளைப்பாய் என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது.

    Next Story
    ×