search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French Open Tennis"

    14-வது முறையாக பிரெஞ்சு ஓபனை ரபெல் நடால் வெல்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரபெல் நடாலுடன் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார். பாரீஸ், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

    இதில் ரபெல் நடால் 7-6 (10-8), 6-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 'களிமண் தரை போட்டியின் மன்னன்' என்று வர்ணிக்கப்படும் நடால் 14-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடாலுடன், நார்வேயின் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார்.

    இறுதிப்போட்டி என்பதால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை யார்? வெல்வார்கள் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 14வது முறையாக பிரெஞ்சு ஓபனை ரபெல் நடால் வெல்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர்.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் பிரிவில் 11 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜெர்மனி தகுதி நிலை வீரர் யானிக் மடெனை எதிர்கொண்டார். ‘களிமண் தரை’ போட்டியின் ராஜா என்று வர்ணிக்கப்படும் நடால் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தியதோடு 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் யானிக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 32 வயதான நடால் அடுத்து பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-6, 6-0, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹூகோ டெலியனை (பொலிவியா) தோற்கடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2016-ம் ஆண்டு சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா லார்சனை (சுவீடன்) சாய்த்து 3-வது சுற்றை எட்டினார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) தன்னை எதிர்த்த கிறிஸ்டினா குகோவை (சுலோவக்கியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். பிளிஸ்கோவா வெறும் 56 நிமிடங்களில் இந்த வெற்றியை சுவைத்தார். மற்றொரு முன்னணி வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருடன் மோத இருந்த சக நாட்டவரான கத்ரினா கோஸ்லோவா உடல் நலக்குறைவால் விலகியதால் ஸ்விடோலினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்த ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பொட்டாபோவா 2-வது சுற்றில் 4-6, 0-6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் வோன்டோரோசோவாவிடம் வீழ்ந்தார். அதே சமயம் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), செவஸ்தோவா (லாத்வியா), கனேபி (எஸ்தோனியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்) உள்ளிட்டோர் 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரேசில் வீரர் மார்செலோ டெமோலினருடன் கைகோர்த்து களம் இறங்கினார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்ட் லின்ஸ்டெட் (சுவீடன்)- மார்டோன் புசோவிக்ஸ் (ஹங்கேரி) இணையை தோற்கடித்தனர்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரஷியாவைச் சேர்ந்த விடாலியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 3 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் ரஷியாவை சேர்ந்த விடாலியா டியாட் சென்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில் செரீனா 2-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 4-வது இடத்தில் இருப்பவரான பெர்ட்டென்ஸ் (பிரான்ஸ்) செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 2-வது நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    4-ம் நிலை வீரரான டொமினிக் தியெம் (ஆஸ்திரியா) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டோமி பவுலை 6-4, 4-6, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் இன்று தொடங்கியது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஒரு மணி நேரம் 41 நிமிடங்களில் பெடரருக்கு இந்த வெற்றி கிடைத்தது.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    பாரீஸ்:

    உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரபெல் நடால். உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அவர் களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவர்.

    இதன் காரணமாக 32 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11 முறை வென்று சாதனை படைத்துள்ளார்.

    அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தார்.

    வேறு எந்த வீரரும் ஒரு கிராண்ட் சிலாமில் இதுவரை அதிகமான பட்டம் வென்றது கிடையாது.

    வருகிற 26-ந்தேதி தொடங்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிசிலும் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் முதல்நிலை வீரர் ஜோகோச்சை (செர்பியா) வீழ்த்தினார். இதன் மூலம் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    களிமண் தரையில் (கிளே) விளையாடுவதிலும் மன்னரான அவர் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ள கடுமையாக போராடுவார். நடால் ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறையும், விம்பிள்டனை 2 தடவையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 1 முறையும் வென்றுள்ளார்.

    சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாம் பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 6+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 8+ அமெரிக்க ஓபன் 5) முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 15 கிராண்ட் சிலாமை பட்டத்துடன் (ஆஸ்திரேலிய ஓபன் 7+, பிரெஞ்சு ஓபன் 1+, விம்பிள்டன் 4+, அமெரிக்க ஓபன் 3) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    நடாலின் பிரெஞ்சு ஓபன் ஆதிக்கத்தை இந்த முறை தகர்க்க வேண்டும் என்ற வேகத்தில் ஜோகோவிச், பெடரர் உள்ளனர்.

    இதேபோல் டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர் மனி), டிஸ்டிபயாஸ் (கிரீஸ்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (அர்ஜென் டினா) போன்ற வீரர்களும் நடாலுக்கு சவாலாக விளங்கலாம்.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலி வீரரை போராடி வென்ற சிலிச் கால் இறுதிக்கு முன்னேறினார். #frenchopen #cilic
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 3-ம் நிலை வீரரான மரீன் சிலிச் (குரோஷியா) 4-வது சுற்றில் பேபியோ பாக்னியை (இத்தாலி) எதிர்கொண்டார்.

    இதன் முதல் இரண்டு செட்டை சிலிச் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது மற்றும் 4-வது செட்களை இத்தாலி வீரர் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட் பரபரப்பாக இருந்தது.

    இந்த செட்டை சிலிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3.

    3 மணி 37 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே சிலிச்சால் இந்த வெற்றியை பெற முடிந்தது. அவர் கால்இறுதியில் 5-ம் நிலை வீரர் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

    உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் ஜெர்மனி வீரர் மார்ட்டெரரை 6-3, 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று கால்இறுதியில் நுழைந்தார்.

    சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 900-வது வெற்றியாகும். நடால் கால்இறுதியில் அர்ஜென்டினா வீரர் டியோகோவை எதிர்கொள்கிறார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- மார்கோ (இத்தாலி), ஸ்வேரேவ் (ஜெர்மனி)- டொமினிக் தியம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஷிமோனா ஹெலப் (ரூமேனியா) 3-வது இடத்தில் இருக்கும் முருகுஜா (ஸ்பெயின்), ‌ஷரபோவா, டாரியா கசாட்சினா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு நுழைந்தனர்.

    இன்று நடைபெறும் கால்இறுதியில் மேட்சன் கீஸ் (அமெரிக்கா)- புதின் சேவா (கஜகஸ்தான்) ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)- கசாட்சினா மோதுகிறார்கள்.#frenchopen #cilic
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரும், 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 70-ம் நிலை வீரர்மேக்ஸ்மிலன் மார்ட்ரெரை (ஜெர்மனி) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 1-6, 2-6, 7-5, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ரபெல் நடால்-டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதுகிறார்கள்.

    இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 16-ம் நிலை வீராங்கனை எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 14-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். வெற்றி பெற்ற டாரியா கசட்கினா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, உக்ரைன் வீராங்கனை லிசி சுரெங்கோவை சந்தித்தார். இதில் முகுருஜா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது லிசி சுரெங்கோ காயம் காரணமாக விலகினார். இதனால் முகுருஜா வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகினார். #FrenchOpen #SerenaWilliams
    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பங்கேற்றார். 36 வயது நிரம்பிய செரீனா, குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், இன்று 4–வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ‌ஷரபோவாவை (ரஷியா) எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, காயம் காரணமாக செரீனா போட்டியில் இருந்து விலகினார்.

    சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தின்போதே செரீனாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரட்டையர் பிரிவில் ஓரளவு சமாளித்து ஆடினார். ஆனால், இன்று அவரால் தொடர்ந்து சர்வீஸ் போட முடியாத நிலை ஏற்பட்டதால் பாதியில் விலகி உள்ளார்.

    ஷரபோவாவுடன் போட்டியிட இருந்த கடைசி நேரத்தில் அவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

    இதுபற்றி செரீனா கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக என்னுடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இப்போதைய நிலையில் என்னால் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. இதுபோன்று ஒருபோதும் காயம் ஏற்பட்டது கிடையாது. இதுபோன்ற வேதனையையும் அனுபவித்தது கிடையாது” என்றார்.

    செரீனா விலகியதால் மரிய ஷரபோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  காலிறுதியில் முகுருசா அல்லது லேசியாவுடன் மோத உள்ளார் ஷரபோவா. #FrenchOpen #SerenaWilliams
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோசரை வீழ்த்தி ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #Muguruza
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்றைய மகளிர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருஜா ஆகியோர் விளையாடினர்.

    கடந்த 2016ம் ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்சை வீழ்த்தி பட்டம் வென்றவரான முகுருஜா, முதல் செட்டை 6-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.

    தொடர்ந்து 2வது செட்டிலும் தொடக்கத்தில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முகுருஜா முன்னிலை பெற்றார்.  ஸ்டோசர் 2-2 என அதனை சமன்படுத்தினார்.

    ஆனால் அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்றி 6-2 என்ற கணக்கில் 2வது செட்டையும் தன்வசப்படுத்தி ஸ்டோசருக்கு அதிர்ச்சியளித்த முகுருஜா 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த போட்டியில் பெற்ற வெற்றி பற்றி முகுருஜா கூறும்பொழுது, கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ஸ்டோசர் கடும் போட்டியாளராக இன்று விளையாடினார்.  எனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை எனில் வெற்றி பெறுவது கடினம் என எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

    அடுத்து அவர் உக்ரைன் நாட்டின் லெசியா டிசூரென்கோவுடன் 4-வது சுற்றில் விளையாட உள்ளார். #Muguruza
    ×