search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் சிலிச்- இத்தாலி வீரரை போராடி வீழ்த்தினார்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் சிலிச்- இத்தாலி வீரரை போராடி வீழ்த்தினார்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலி வீரரை போராடி வென்ற சிலிச் கால் இறுதிக்கு முன்னேறினார். #frenchopen #cilic
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 3-ம் நிலை வீரரான மரீன் சிலிச் (குரோஷியா) 4-வது சுற்றில் பேபியோ பாக்னியை (இத்தாலி) எதிர்கொண்டார்.

    இதன் முதல் இரண்டு செட்டை சிலிச் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது மற்றும் 4-வது செட்களை இத்தாலி வீரர் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட் பரபரப்பாக இருந்தது.

    இந்த செட்டை சிலிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3.

    3 மணி 37 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே சிலிச்சால் இந்த வெற்றியை பெற முடிந்தது. அவர் கால்இறுதியில் 5-ம் நிலை வீரர் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

    உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் ஜெர்மனி வீரர் மார்ட்டெரரை 6-3, 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று கால்இறுதியில் நுழைந்தார்.

    சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 900-வது வெற்றியாகும். நடால் கால்இறுதியில் அர்ஜென்டினா வீரர் டியோகோவை எதிர்கொள்கிறார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- மார்கோ (இத்தாலி), ஸ்வேரேவ் (ஜெர்மனி)- டொமினிக் தியம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஷிமோனா ஹெலப் (ரூமேனியா) 3-வது இடத்தில் இருக்கும் முருகுஜா (ஸ்பெயின்), ‌ஷரபோவா, டாரியா கசாட்சினா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு நுழைந்தனர்.

    இன்று நடைபெறும் கால்இறுதியில் மேட்சன் கீஸ் (அமெரிக்கா)- புதின் சேவா (கஜகஸ்தான்) ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)- கசாட்சினா மோதுகிறார்கள்.#frenchopen #cilic
    Next Story
    ×