search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிச்"

    ஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், மரின் சிலிச் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரர் இங்கிலாந்தின் டான் ஈவன்ஸை எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 7(7) - 6(5), 7(7) - 6(3), 6-3 என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


    மரின் சிலிச்

    மற்றொரு போட்டியில் 6-ம் நிலை வீரரான மரின் சிலிச் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டு 7 - 5, 6(9) - 7(11), 6 - 4, 6- 4 என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் மில்மேனை வீழ்த்தி ஜோகோவிச் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். சிலிச் அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen2018
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 6-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 2 முறை வென்றவருமான ஜோகோவிச் (குரோஷியா) கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மில்மேனை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ந்து 11-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மில்மேன் 4-வது சுற்றில் ரோஜர் பெடரரை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தார். கால் இறுதியில் அவரது ஆட்டம் ஜோகோவிச் முன்பு எடுபடவில்லை.

    உலகின் 7-ம் நிலை வீரரும், 2014-ம் ஆண்டு சாம்பியனுமான சிலிச் (குரோஷியா) கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 21-ம் நிலை வீரரான நிஷி கோரி (ஜப்பான்) 2-6, 6-4, 7-6, (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி சிலிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    24 வயதான நிஷிகோரி 2014-ம் ஆண்டு அமெரிக்க ஒபன் இறுதிப் போட்டியில் சிலிச்சிடம் தோற்றதற்கு தற்போது பழி தீர்த்துக் கொண்டார். நிஷிகோரி அரை இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 14-வது வரிசையில் இருக்கும் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் நவரோவை எதிர்கொண்டார். இதில் கெய்ஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு கால் இறுதியில் 20-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் லெசியாவை வீழ்த்தி முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஒசாகா அரை இறுதியில் மேடிசன் கெய்சை சந்திக்கிறார்.

    ஜப்பான் டென்னிஸ் வரலாற்றில் இவை முக்கியமான நாள். அந்நாட்டை சேர்ந்த இருவர் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளனர். #USOpen2018
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலி வீரரை போராடி வென்ற சிலிச் கால் இறுதிக்கு முன்னேறினார். #frenchopen #cilic
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 3-ம் நிலை வீரரான மரீன் சிலிச் (குரோஷியா) 4-வது சுற்றில் பேபியோ பாக்னியை (இத்தாலி) எதிர்கொண்டார்.

    இதன் முதல் இரண்டு செட்டை சிலிச் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது மற்றும் 4-வது செட்களை இத்தாலி வீரர் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட் பரபரப்பாக இருந்தது.

    இந்த செட்டை சிலிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3.

    3 மணி 37 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே சிலிச்சால் இந்த வெற்றியை பெற முடிந்தது. அவர் கால்இறுதியில் 5-ம் நிலை வீரர் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

    உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் ஜெர்மனி வீரர் மார்ட்டெரரை 6-3, 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று கால்இறுதியில் நுழைந்தார்.

    சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 900-வது வெற்றியாகும். நடால் கால்இறுதியில் அர்ஜென்டினா வீரர் டியோகோவை எதிர்கொள்கிறார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- மார்கோ (இத்தாலி), ஸ்வேரேவ் (ஜெர்மனி)- டொமினிக் தியம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஷிமோனா ஹெலப் (ரூமேனியா) 3-வது இடத்தில் இருக்கும் முருகுஜா (ஸ்பெயின்), ‌ஷரபோவா, டாரியா கசாட்சினா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு நுழைந்தனர்.

    இன்று நடைபெறும் கால்இறுதியில் மேட்சன் கீஸ் (அமெரிக்கா)- புதின் சேவா (கஜகஸ்தான்) ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)- கசாட்சினா மோதுகிறார்கள்.#frenchopen #cilic
    ×