search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "financial aid"

    • இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடிக்கான நிதியை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளைக்கு கல்வி மற்றும் மருத்துவசேவை பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்க தெற்குமாவட்ட தி.மு.க. முடிவுசெய்தது.

    இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் மதுரை தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்குமாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டியன், மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.என்.எல். செல்வம், இளைஞரணி துணைஅமைப்பாளர்கள் விமல், சுரேஷ்குமார், பகுதி அமைப்பாளர் காளிதாஸ், ஒன்றிய துணை அமைப்பாளர் தனசேகர், கிளைசெயலாளர் ராதாகிருஷ்ணன், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி அருகே பேனர் வைக்கும்போது தவறி விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். #MinisterRajendraBalaji
    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரைச் சேர்ந்தவர் வீரம்மாள். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் மாடசாமி (வயது 15) படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு பிளக்ஸ் போர்டு, கட்சி கொடிகள் கட்டும் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் டி.டி.வி. தினகரன் பங்கேற்ற அ.ம.மு.க. கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தினகரனை வரவேற்பதற்காக மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

    கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்தபின் மாடசாமி பிளக்ஸ் போர்டுகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ரெங்கபாளையம் என்ற இடத்தில் இருந்த பிளக்ஸ் போர்டை எடுப்பதற்காக சாரம் மீது ஏறியபோது மாடசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையறிந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாடசாமியின் வீட்டிற்கு சென்று அவரது தாயாருக்கும், குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவர் ரமணா உள்பட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர். #MinisterRajendraBalaji
    கார்குடி கிராமத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சிவசந்திரன் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் வைப்பு தொகைக்கான ஆவணத்தை ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் வழங்கினர்.
    பெரம்பலூர்:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.

    இந்த தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், கேரளாவை சேர்ந்த வசந்தகுமார், கர்நாடகாவை சேர்ந்த குரு, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பப்லுசந்த்ரா, சுதிப் பிஸ்வாஸ், ஓடிசாவை சேர்ந்த சாஹூ, மனோஜ்குமார் பெஹ்ரா ஆகிய 8 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 40 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் வைப்பு தொகைக்கான ஆவணத்தை ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன மூத்த பொதுமேலாளர்கள் வெங்கட்ராமன், சதாசிவம், பொதுமேலாளர் ஜான்சன், துணை பொதுமேலாளர் பாலகணேசன் மற்றும் அதிகாரிகள் வழங்கினர். 
    ஒடிசாவை தாக்கிய டிட்லி புயலின் எதிரொலியாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதியை ரூ.4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். #OdishaCM #Titliexgratia #cycloneTitli #Naveenpatnaik
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
     
    சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    மழை. வெள்ளம், நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 52 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதியை ரூ.4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று உத்தரவிட்டுள்ளார். #OdishaCM #Titliexgratia #cycloneTitli #Naveenpatnaik
    தூத்துக்குடி மாவடத்தில் உள்ள மடத்துப்பட்டியில் கோவில் கட்ட ஸ்டெர்லைட் சார்பில் ரூ.100 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மடத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பத்திரகாளியம்மன் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக நிதி உதவி கோரி ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கோவில் கட்டுமான பணிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மடத்துப்பட்டியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.

    இந்த தொடக்க நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ராதாகிருஷ்ணன், குமாரவேந்தன், நாகராஜ், ஜாய்ஸ், நிஷின் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பத்திரகாளியம்மன் கோவில் அமைப்பு நிர்வாக கமிட்டி தலைவர் துரைராஜ், செயலாளர் ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். #Sterlite
    பல்வேறு சம்பவங்களில் பலியான 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருத்தாசலம் வட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம், நாவினிவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி மாசிலாமணி மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    மதுரை மாவட்டம், கல்கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மொக்குசு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாளராகப் பணிபுரிந்து வந்த மைக்கேல்ராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ‘ஏ’ கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் மனைவி பாப்பா, பாம்பு கடித்து உயிரிழந்தார்

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது. #Qatar #KeralaFlood #FinancialAid
    துபாய்:

    மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், வெளிநாடுகளும் உதவி செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்குவதற்காக அவசர குழு ஒன்றை அமைத்தது. இதன் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது.

    இதற்கான உத்தரவை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி பிறப்பித்தார். இதையடுத்து, கத்தார் அரசின் அறக்கட்டளை பிரதிநிதிகள் மூலம் இந்தத் தொகை இந்தியாவிடம் அளிக்கப்பட்டது. இத்தொகை கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவி செய்யும்பொருட்டு வழங்கப்படுவதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்து உள்ளது. #Qatar #KeralaFlood #FinancialAid

    ×