search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity tariff"

    • தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி ஆகியவற்றை குறைக்க கோரியும், குடும்ப தலைவிக்கான ரூ.1000, சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் மற்றும் அரசு ஊழியருக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

    கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.

    இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொள்கிறார்கள்.

    • மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    • மதுரையில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தை அடுத்து அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும். இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரு சேர முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்கி உள்ளோம்.

    என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா? அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதா, அவர்களையும் ஏற்றுக்கொண்டு கட்சியில் பதவிகளை வழங்கினார்.

    அதுபோல தற்போது அ.தி.மு.க.வை விட்டு விலகி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.

    வருகிற 25-ந் தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து பொதுமக்களும் திரளாக பங்கேற்று இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு.

    தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.

    2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.

    201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும். 2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும்.

    விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×