search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric fence"

    • புல் அறுக்க முயன்ற இடத்தில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது.
    • விளைநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மின்வேலி அமைத்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ்சரகம் திருவக்கரை அருகே உள்ள தேனிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. அவரது மனைவி நாகவள்ளி (வயது 60). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றார். இரவு நேரமாகியும் நாகவள்ளி வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் விளைநிலம் நோக்கி சென்றனர். அப்போது நாகவள்ளி பிணமாக கிடந்தார். புல் அறுக்க முயன்ற இடத்தில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது. எனவே அந்த விளைநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மின்வேலி அமைத்துள்ளார். இதை கவனிக்காமல் நாகவள்ளி தொட்டதால் மின்சாரம் தாக்கி பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்தனர். இறந்துபோன நாகவள்ளி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வானூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.
    • வெங்கடேசனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உப்பு வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50) விவசாயி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில்  வெங்கடேசன் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளார். அந்த பகுதிகளில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிக அளவில் இருந்து வந்துள்ளது. காட்டு பன்றிகளின் தொல்லையால் விளை நிலங்களில் பயிரிட்டுள்ள வேர்க்கடலை உள்ளி ட்டவைகளை நாசம் செய்து வந்தது. இதனால் வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்தார். நேற்றுவெங்கடேசன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக கவனிக்காமல் தான் வைத்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விவசாய நிலத்திற்கு சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை என்று வீட்டிலிருந்து உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கடேசன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த வெங்கடேசனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கிளியனூர் போலீஸ் இ ன்ஸ்பெக்டர் பாலமுரளி சப்இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மணல் கடத்தலின் போது சம்பவம் போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி மின் வேலியில் சிக்கினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி.எடையாறு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தென்பெண்ணையாறு ஓடுகிறது. இங்கு அந்த பகுதியில் மர்ம மனிதர்கள் மாட்டு வண்டியில் இரவு-பகல் பாராமல் மணல் திருடி வருகிறார்கள். அதன்படி டி.எடையாறு கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 45) என்பவர் தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி கொண்டிருந்தார். இந்த தகவல் போலீசாருக்கு எட்டியது.தகவலறிந்த போலீசார் தென்பெண்ணையாற்று பகுதிக்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த பழனி அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் செல்லும் வழியில் அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் காட்டு பன்றிக்காக மின்வேலி போடப்பட்டு இருந்தது.

    இதனை கவனிக்காத பழனி அந்த வழியாக சென்ற போது மின் வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள விவசாயிகள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வி.கே.புரம் அருகே மீன் பிடிக்க புழு எடுக்க சென்றபோது மின்வேலியில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியானார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    வி.கே.புரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் படித்துறை தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 48). இவர் நூற்பாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலையில் இவர் அங்குள்ள வயல்வெளி அருகில் சென்றார். சிறிது நேரத்தில் அவர் இறந்த நிலையில் அங்கு விழுந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த வி.கே.புரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.சங்கரநாராயணன் நேற்று ஆற்றில் மீன் பிடிப்பதற்காக அதன் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று புழுக்களை எடுக்க சென்றுள்ளார்.

    அங்கு தோட்டத்திற்குள் காட்டு விலங்குகள் வராமல் இருப்பதற்காக அதன் உரிமையாளர் மின்வேலி போட்டுள்ளார். அதில் சங்கரநாராயணன் கவனிக்காமல் மிதித்துவிட்டார்.

    அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதுதொட ர்பாக தோட்டத்தின் உரிமையாளரான திருப்பதியாபுரத்தை சேர்ந்த நம்பிவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயல்களில் மின் வேலிகளை அமைப்பது கூடாது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழக மின்சார வாரியத்தின் அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மின்பாதையில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி மின் வாரியத்தில் இல்லாத நபர்கள் பணி செய்யக்கூடாது. மின்தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்ய வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது அதன் இழுவை கம்பியிலோ கட்டக் கூடாது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின் வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    தேன்கனிகோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேர் மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிகோட்டை:

    தேன்கனிகோட்டை அருகேயுள்ள நாட்ராம் பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கெம்பன் மற்றும் சிவனப்பா. இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். நேற்று இரவு வனவிலங்குகளை வேட்டையாட அதேபகுதியில் உள்ள பஞ்சள்துணை என்ற கிராமத்திற்கு இவர்கள் சென்று உள்ளனர். 

    அப்போது அங்கு சித்தராமையா என்பவரின் வேர்க்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் இருவரும் சிக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து மின்சாரம் தாக்கிய அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வேலியில் சிக்கி 2 பேர் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மின் வேலிகளை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், வாழைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானை வழித்தடத்தை மறைத்து ரிசார்ட்டுகள் (ஓட்டல்கள்) கட்டப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகளை ஆய்வு செய்து அதனை சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 39 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் மின் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மின் வேலிகளை அகற்ற கோரி சுற்றறிக்கை வழங்கி வருகிறார்கள்.

    48 மணி நேரத்திற்குள் யானைகள் வழித்தடத்தில் உள்ள மின் வேலிகளை அகற்றாவிட்டால் அந்தந்த அதிகாரிகளே அகற்றுவார்கள் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மின் வேலிகளை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    ×