search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ED raid"

    • தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    நிஜாம் காலனி பகுதியில் உள்ள அவரது வேதாந்தா அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு 2 கார்களில் 4 அமலாக்க பிரிவு அதிகாரிகள் வந்தனர்.

    ஒரு கார் கேரள பதிவு எண்ணும், மற்றொரு கார் சென்னை பதிவு எண்ணும் கொண்டதாக இருந்தது. தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது, மணல் தொழிலில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் 20 இடங்களில் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.
    • சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய முறையிடப்பட்டது.

    சென்னை:

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர், இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டு விசாரிப்பதா? மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரிப்பதா? என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஐகோர்ட்டில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் விசாரித்து, ஜாமின் மனு மட்டுமல்ல, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் மத்திய அரசு அறிவிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தீர்ப்பு அளித்தனர்.

    இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய இன்று காலையில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

    • திருச்சூர் அருகே கருவண்ணூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.125.83 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
    • அமலாக்கத்துறை சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியருப்பதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே கருவண்ணூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.125.83 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில கேரள மாநில தொழில்துறை முன்னாள் மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வுமான மொய்தீனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மொய்தீனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறையினரின் சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து 22 மணி நேரம் நடந்தது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியருப்பதாக கூறப்படுகிறது. 

    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

    சென்னை:

    கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை கைது செய்தது.

    இதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவர் மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும்.

    அந்த அடிப்படையில், இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டு உள்ளார்.

    சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் செந்தில்பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வாய்ப்பு உள்ளது.

    குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதும் சாட்சி விசாரணை உள்ளிட்ட அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்குகளிலும் செந்தில்பாலாஜி மீது அடுத்த மாதம் இறுதிக்குள் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

    • செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

    சென்னை:

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினர்.

    இந்த விசாரணையின்போது செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் பற்றியும் அமலாக்கத்துறையினர் கேள்விகளை கேட்டு விசாரித்தனர். பின்னர் செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறையினர் மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.
    • செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்ட பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    அசோக் குமார் கைது செய்யப்படவில்லை. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.

    செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    கொச்சியில் அசோக்குமார் கைதானதாக வெளியான செய்தி தவறானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    • கரூரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டையும், வீடு கட்டப்படும் நிலத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளதாக அறிவித்தனர்.
    • மத்திய உளவுத்துறை போலீசாரின் கட்டுப்பாட்டில் அசோக் இருப்பதாகவும் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்ட பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பினார்கள். ஆனால், அவர் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில், கரூரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டையும், வீடு கட்டப்படும் நிலத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளதாக அறிவித்தனர்.

    அசோக்குமாரின் மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர்களும் ஆஜராகவில்லை.

    அமலாக்கத்துறை கஸ்டடியில் வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடந்த போது அசோக் எங்கெங்கு செல்வார்? அவருடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருப்பார்கள் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் கேரள மாநிலம் கொச்சியில் அசோக் இருக்கும் தகவலை அறிந்து சுற்றிவளைத்து இருக்கிறார்கள். அவரை கொச்சியில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்து இருப்பதாக தகவல் பரவியது.

    அவரை டெல்லி அல்லது சென்னைக்கு கொண்டு சென்று விசாரிக்கலாம் என்று கூறப்பட்டது.

    இதனால் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் பாதுகாப்பை பலப்படுத்த நுங்கம்பாக்கம் போலீசாரும் உஷார் ஆனார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு மாறுபட்ட தகவல்கள் வெளியானது.

    அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அசோக் எங்கள் பிடியில் இல்லை என்று மட்டும் கூறியதாக தெரிகிறது. இதனால் சாஸ்திரிபவன் பகுதியில் பரபரப்பு அடங்கியது.

    இதனால் அசோக் கைது செய்யப்பட்டாரா? எங்கிருக்கிறார்? என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கான விடை எந்த தரப்பிலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அதிகாலையில் சில தகவல்கள் கசிந்தது. அதாவது மத்திய உளவுத்துறை போலீசாரின் கட்டுப்பாட்டில் அசோக் இருப்பதாகவும் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    அவர்கள் விசாரித்த பிறகே அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    ஆனால் இந்த தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை.

    • அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.
    • கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை கடந்த 7-ந் தேதி காவலில் எடுத்த அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று 6-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

    சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தை விரிவாக பதிவு செய்து உள்ளனர். அந்த வகையில், கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த அவகாசம் இன்றுடன் (12-ந் தேதி) முடிகிறது. இதையடுத்து அவர் இன்று பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் 2.39 ஏக்கரில் வீடு கட்டி வருகிறார்.
    • அனுராதா ரமேஷ் என்பவரிடமிருந்து ரூ.10 லட்சத்துக்கு இடம் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னை:

    போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்தனர்.

    இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 7-ந்தேதி காவலில் எடுத்தனர். நேற்று 4-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின் போது இதுவரை 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு உள்ளன.

    இன்று 5-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் நாளையுடன் அமலாக்கத்துறை காவல் முடிவடைகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜி நாளை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட உள்ளார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் நேற்று மாலையில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோரும் முக்கிய எதிரிகள் ஆவர். இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதன் மூலம் தகுதியான நபர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

    செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் 2.39 ஏக்கரில் வீடு கட்டி வருகிறார். இந்த இடத்தை அவரது மாமியார் லட்சுமி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அனுராதா ரமேஷ் என்பவரிடமிருந்து ரூ.10 லட்சத்துக்கு இடம் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இது கற்பனை கதையாகும். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.10 லட்சத்துக்கு இடத்தை வாங்கியதாக காட்டிவிட்டு மீதி தொகையை ரொக்கமாக அனுராதா ரமேசுக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த பணத்தை வைத்து அனுராதா ரமேஷ் வேறு ஒரு இடத்தில் நிலம் வாங்கியுள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அசோக்குமார், நிர்மலா, லட்சுமி ஆகியோருக்கு பலமுறை சம்மன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர்.

    இவ்வாறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 3 பேரிடமும் விசாரணை நடத்த அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி அமலாக்கத்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜிக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வழங்கப்படுவதாகவும், டாக்டர்கள் குழுவினர் எப்போதும் அங்கு கீழ் தளத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • செந்தில் பாலாஜி தெரிவித்து வரும் பதில்கள் அனைத்தையும் தனி வீடியோவாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்த நிலையில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியை கடந்த 7-ந் தேதியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து வைத்து உள்ளனர்.

    கேள்விகள் அனைத்தும் வெள்ளை பேப்பரில் 'டைப்' செய்யப்பட்டு அதற்கு செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது.

    திங்கட்கிழமை மாலையில்தான் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்ததால் அன்றிரவு அவரிடம் அதிக நேரம் விசாரணை நடைபெறவில்லை. செவ்வாய்க்கிழமையில் இருந்துதான் முழுமையான விசாரணை தொடங்கியது.

    அமலாக்கத்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்குகளின் ஸ்டேட்மெண்டை வைத்துக் கொண்டு விசாரணை நடைபெறுவதுடன், சமீபத்தில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணை அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது கேள்விகள் ஒவ்வொன்றையும் 'தட்டச்சு' செய்து அதை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்து எழுத்துப்பூர்வ பதிவையும் கேட்கின்றனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியும் எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுத்து வருகிறார்.

    இதுவரை 250 கேள்விகளுக்கு அவர் பதில் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெரும்பாலான கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி 'தெரியாது' 'நினைவில்லை' 'அது எனது பணம் இல்லை' என்று பதில் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தொடர்ச்சியாக அவரிடம் கேள்வி கேட்காமல் விசாரணைக்கு இடையே அவருக்கு ஓய்வும் கொடுக்கப்படுகிறது.

    செந்தில் பாலாஜிக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வழங்கப்படுவதாகவும், டாக்டர்கள் குழுவினர் எப்போதும் அங்கு கீழ் தளத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காலையில் அவர் நடைபயிற்சி செய்வதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் நேற்று அவருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பேன்ட், சட்டை, லுங்கி, பனியன், பேஸ்ட், பிரஷ் ஆகியவைகளை கொண்டு சென்று கொடுத்தார்.

    அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். செந்தில் பாலாஜியிடம் அவரது சகோதரர் அசோக் பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிக கேள்விகள் கேட்டுள்ளனர்.

    செந்தில் பாலாஜியின் மனைவி வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றது குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரித்து உள்ளனர்.

    சனிக்கிழமை வரை செந்தில் பாலாஜியிடம் இந்த விசாரணை நடைபெறும் என்றும் அதன் பிறகு அவரை சிறையில் அடைக்க நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செந்தில் பாலாஜி தெரிவித்து வரும் பதில்கள் அனைத்தையும் தனி வீடியோவாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். அதே போல் எழுத்துப்பூர்வ பதிவையும் வாங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேற்கு தாம்பரம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்பட 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
    • இன்று காலை 7 மணியளவில் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை தொடங்கியது.

    சென்னை:

    சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது.

    இந்த நிறுவனம் ரூ.225 கோடி வங்கி நிதியை மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிதி மோசடியில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறையும் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வால்டர் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆரோக்கிய சாமி ஜேம்ஸ் வால்டர் நிறுவனத்தில் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

    சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மேற்கு தாம்பரம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்பட 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

    ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டரின் நிறுவனம் தொடர்பான அலுவலகங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

    இன்று காலை 7 மணியளவில் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் சோதனை தொடங்கியது.

    ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர் வீடு மற்றும் நிறுவனம் அண்ணாநகரில் ஒருவரது வீட்டின் மாடியில் செயல்பட்டுள்ளது. அதன் பிறகு சமீபத்தில் அமைந்தகரைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    • இதுவரை நடந்துள்ள விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார்.
    • பிரபல ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து சரியான நேரத்துக்கு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜியை கடந்த 7-ந்தேதியில் இருந்து காவலில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது.

    இதன்படி நேற்று 3-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ள ஆவணங்களை வைத்து அவரிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார். நேற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

    விசாரணைக்கு இடையே அவருக்கு சற்று ஓய்வு கொடுக்கப்படுகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து சரியான நேரத்துக்கு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படுகிறது. டாக்டர்கள் குழுவினரும் செந்தில்பாலாஜியை தினமும் 2 முறை பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம் பார்க்கப்படுகிறது.

    செந்தில் பாலாஜியை விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    அந்த தகவலுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால், அவரை டெல்லி அழைத்து செல்லும் திட்டம் இல்லை, என்று கூறி விட்டார்கள். இதை செந்தில்பாலாஜி தரப்பும் உறுதி செய்து விட்டது.

    ×