என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிகிறது: பரபரப்பு வாக்குமூலம் விரைவில் கோர்ட்டில் தாக்கல்
- அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.
- கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை கடந்த 7-ந் தேதி காவலில் எடுத்த அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று 6-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.
சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தை விரிவாக பதிவு செய்து உள்ளனர். அந்த வகையில், கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த அவகாசம் இன்றுடன் (12-ந் தேதி) முடிகிறது. இதையடுத்து அவர் இன்று பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.






