search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died"

    • முத்துப்பாண்டி கடந்த 3 ஆண்டுகளாக முல்லைநகரில் வசித்து வருகிறார்.
    • துணிக்கடையில் மேல்புறமாக சீரியல் பல்புகளை போட்டுக்கொண்டு இருந்தார்.

    கோவை,

    தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 30). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சோமனூர் அருகே உள்ள முல்லை நகருக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தார்.

    பின்னர் அங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

    இவர் அந்த பகுதியை சேர்ந்த மோட்சா ஆரோ க்கியதாஸ் என்பவர் நடத்தி வரும் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று முத்து ப்பாண்டி ராமச்சிபாளை யத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் மேல்புறமாக சீரியல் பல்புகளை போட்டுக்கொண்டு இருந்தார்.

    அப்போது பல்புகளை கீழ் இருந்து மேல்நோக்கி வீசும் போது அந்த வழியாக சென்ற மின்சார வயர் மீது பட்டு முத்துப்பாண்டியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    இதில் உடல் கருகி உயிரு க்கு போராடிய அவரை அந்த வழியாக சென்ற வர்கள் மீட்டு சோமனூர் ஆரம்ப சுகாதார நிலைய த்துக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் முத்துப்பாண்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருமத்த ம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டை அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார்
    • பள்ளிக்கு சென்ற போது பரிதாப சம்பவம்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராம்குமார் (வயது 15). இவர் செங்கிப்பட்டி அருகே உள்ள முத்தாண்டி பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக கோமாரம் வந்திருந்த ராம்குமார் இன்று காலை பள்ளி சீருடையில் பள்ளிக்கு வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது சாலை ஓரத்தில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக மாணவனின் தாய் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் பலியான மாணவனின் தந்தை செந்தில் குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தாதம்பட்டி அடுத்த படையாட்சி காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 43). இவர் உடையாபட்டி அருகே உள்ள தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பிரபாவதி (45). இவர் மன அழுத்த காரணத்தால் கடந்த 7 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரபாவதி வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
    • பொதுமக்கள் டிரைவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்

    சூலூர்,

    சூலூர் அருகே காரம் பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). பெயிண்டர். இவருக்கு மனைவி, மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் முருகேசன் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரி பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே அவர்கள் கும்பலாக திரண்டு வந்து அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. எனவே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டிரைவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷ்யாம்குமார் என்பதும், தெலுங்கானாவை சேர்ந்த சரக்கு லாரியில் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவை, புதுாரை சேர்ந்தவர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர், 

    கோவை, புதுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 73). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினியர்.

    இவரது மகன் ஜெயராமன் (37). இவர் தனது மோட்டார் சைக்கிளில்,கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, தண்ணீர்பள்ளி, சாந்திவனம் தனியார் பள்ளி அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற சரக்கு லாரி, பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். குளித்தலை போலீசார், லாரி டிரைவர், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த பழைய அப்பனேரியை சேர்ந்த ராஜி (52), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்
    • நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). இவர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்திரன் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இறந்து போன சந்திரனுக்கு சசிகலா (44) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • பெரம்பலூர் அருகே விபத்து இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்
    • கேஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது

    குன்னம்,

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டத்துர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சஞ்சீவி மகன் வினோத்(வயது19), ராஜி மகன் ராம்(20), செல்வராஜ் மகன் ஆனந்த்(22), நண்பர்களான இவர்கள் பெரம்பலூர் துறையூர் சாலையில், அடைக்கம்பட்டி கிராமத்தில் டி.களத்தூர் பிரிவு சாலை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திவிட்டு, டாஸ்மாக் கடையில் இருந்து வரும் மண் பாதை வழியாக பிரதான சாலைக்கு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அப்போது, பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற டேங்கர் கேஸ் லாரி இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இந்த திடீர் சாலை விபத்தில், வினோத்தும் ராமும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் நிலவியது.மேலும் விபத்துக்கு காரணமான கேஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த அத்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராஜா (37), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்
    • மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மில்லத் நகரை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 38). இவர் சம்பவத்தன்று இரவு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன் பேரையூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த மங்கலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் 

    • பசும்பலூர் கிராமத்தில் சோகம் வயலுக்குச் சென்ற விவசாயி மின்வேலியில் சிக்கி பலி
    • வ.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் அடுத்த பசும்பலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் அதே ஊரைச் சேர்ந்த பிச்சைபிள்ளை என்பவரின் வயலில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பிச்சைப்பிள்ளை என்பவரின் மக்காச்சோள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக காலை சுமார் 8 மணி அளவில் சென்றார் என கூறப்படுகிறது. பின்னர் வயலின் உரிமையாளர் ராமச்சந்திரனை தேடிய போது காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ராமச்சந்திரன் வயலில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து வ.களத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திட்டமிட்ட செயலா ?அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பூஜை தினத்தன்று நடந்த இந்த சம்பவம் அந்த ஊர் மக்களை பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.
    • கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பூதப்பள்ளம் அடர்ந்த வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது.

    இந்நிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான், காட்டுயானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    மேட்டுப்பாளையம் வனத்துறைக்குட்பட்ட நெல்லித்துறை பூதப்பள்ளம் சுப்பிரமணியன் என்பவர் தோட்டத்தில் நேற்று 5 ஆடுகள் கட்டப்பட்டிருந்தது.

    அதில் ஒரு ஆட்டை சிறுத்தை கழுத்தை கடித்து கொன்றுள்ளது. அப்போது அங்கு நின்ற மற்றொரு ஆண்டின் கழுத்தையும் கடித்துள்ளது. இதனிடையே ஆட்டின் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த போது சிறுத்தை ஆட்டை கடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவர சிறுத்தை அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தனர்.

    தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளன. இதோடு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    • பெரம்பலூரில் கார் மோதி மூதாட்டி பலியானார்
    • விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூா் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67). இவர் கடந்த 16-ந்தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூர்-காரை பிரிவு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த காா் எதிர்பாராதவிதமாக மூதாட்டி தனலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவறையில் மயங்கிய முதியவர்
    • முதியவர் திடீர் சாவு


    வேலாயுதம்பாளையம்


    கரூர் மாவட்டம் புகளூர் அருகே முருகம்பாளையம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). சம்பவத்தன்று இவர் அவரது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.


    அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


    இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ×