என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழிவறையில் மயங்கி விழுந்த முதியவர் திடீர் சாவு
- கழிவறையில் மயங்கிய முதியவர்
- முதியவர் திடீர் சாவு
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகளூர் அருகே முருகம்பாளையம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). சம்பவத்தன்று இவர் அவரது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






