search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died"

    • புள்ளம்பாடியில் மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பரிதாபமாக பலியானார்
    • கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    டால்மியாபுரம்,

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் தெற்குதெருவில் வசித்து வரும் சின்னதுரை என்பவரின் மகன் ராமசுந்தரம் (வயது 32).விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆடுகளுக்கு தழை வெட்ட சென்றார். இதற்காக வேப்பமரத்தில் ஏறி நின்று தழைகளை வெட்டி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தால். இதில் மரத்தின் கீழே உள்ள கருங்கலில் தலை மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் காட்டில் இருந்து வரப்பு வரை நகர்ந்து வந்து காட்டின் ஒரத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

    அவ்வழியாக ஆடுமேய்க்க சென்றவர்கள், இதனை கண்டு ஊருக்கு தகவல் கொடுத்தனர். ராமச்சுந்தரத்தின் மனைவி ஜெயசீலா தனது உறவினர்களுடன் சென்று கணவரை மீட்டு சமயபுரம்-இருங்களூர் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் ராமச்சந்திரத்தின் மனைவி ஜெயசீலா கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் லால்குடி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் உள்ள ராமசந்திரத்தின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இறந்த ராமசுந்தரத்திற்கு ஜெயசீலா என்ற மனைவியும், தர்ஷனா (வயது 3), தன்விகா (வயது 1 1/2)என்ற 2 பெண் கைக்குழந்தைகள் உள்ளது.தீபாவளி திருநாளன்று தனது வயலுக்கு சென்று மரத்திலிருந்து கீழே விழுந்தவர் இறந்ததால் உறவினர் மட்டுமல்லாது பொதுமக்கள் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • பெரம்பலூர் அருகே கார்-பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்
    • பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர், 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் இவரது மகன் வேல்முருகன் (வயது 28). இவர் நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள நண்பரை பார்த்து விட்டு பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

    அப்போது பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள மட்ட பாறை கிராமத்தில் ஒரு டீக்கடை முன்பு வந்த போது பெரம்பலூரில் இருந்து துறையூர் சென்ற அரசு பேருந்து எதிர்பாரா விதமாக வேல்முருகன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார். இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த யாருக்கும் காயம் இல்லை. நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது.

    அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். பலியான வேல்முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் திடீரென கார் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48). கார் டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த நாடிமுத்து திடீரென்று தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மணிகண்டத்தில் லோடு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலியானார்
    • மணிகண்டம் போலீசார் விசாரணை

    ராம்ஜிநகர்,

    திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வீக ராஜ், விவசாயி. இவரது மகன் சச்சின் ஜோசர் (வயது 14). இவர் திருச்சி மதுரை சாலை நாகமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் மின்சார இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்ற இவர், பள்ளி முடிந்தவுடன் டியூஷன் சென்று முடித்துவிட்டு தீரன் மாநகரில், இருந்து நவலூர்குட்டப்பட்டு செல்லும் சாலையில் கலிங்கிபட்டி என்ற இடத்தில் வந்தார். அப்போது எதிரே மணப்பாறையில் இருந்து நாகமங்கலம் நோக்கி வந்த லோடு ஆட்டோ மோதியது. இதில் சச்சின் ஜோசர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார்.

    இதனை அறிந்த மணிகண்டம் போலீசார் பள்ளி மாணவனின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவர் மணப்பாறை பெரியப்பட்டியை சேர்ந்த முத்துவேல் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ஆலங்குடி அருகே மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்
    • உறவினர்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் இடையன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25) பொட்டாத்திக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(30) மேலும் இரண்டு நபர்கள் என மின்வாரிய கேங்க்மேன்கள் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர்-கச்சிரான்பட்டி சாலையில் மின்வாரியப் பணியில் தனித்தனி மின்கம்பங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் அஜித் மற்றும் முருகேசன் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்து கீழே விழுந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார் அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து உயிரிழப்பிற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை- பேராவூரணி நெடுஞ்சாலையில் உள்ள ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும், அது வரை போராட்டத்தை கைவிட்டு அமைதியாக இருக்குமாறும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • துறையூரில் படியில் பயணம் செய்த மெக்கானிக் பலி
    • படியில் தொங்கிக்கொண்டு செல்போன் பேசியதால் விபரீதம்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு uட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 43). இவர் மெக்கானிக்காக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்கிற மனைவியும், கோகுல், வசந்தகுமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக துறையூர் வந்துவிட்டு, மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கு புளியஞ்சோலை செல்லும் அரசு பஸ் ஒன்றில் சென்றுள்ளார். அப்பொழுது வடிவேல் படியில் தொங்கிக்கொண்டு செல்போன் பேசியதாகவும், அப்பொழுது தவறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவரும், பயணிகளும் சென்று பார்த்த பொழுது வடிவேல் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

    இதை அறிந்த துறையூர் போலீசார், வடிவேலின் பிரேதத்தை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அறுந்து கிடந்த வயரை மிதித்ததால் பரிதாபம்
    • விவசாயி உடலை பார்த்து உறவினர்கள் கதறல்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கருங்கண்ணன்(வயது67).

    இவர் அந்த பகுதியில் உள்ள பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 25 வருடங்களாக விவசாய வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு தோட்டத்தின் வழியே சென்ற மின்சார வயர் ஒன்று அறுந்து கீழே விழுந்து விட்டது. இரவு நேரம் என்பதால் தோட்டத்தில் யாரும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று காலை, கருங்கண்ணன் வழக்கம் போல வேலைக்கு வந்தார். பின்னர் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்வதற்காக பம்ப் செட் அறைக்கு நடந்து சென்றார். அப்போது வயல் வரப்பில் மின்சார வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல், கருங்கண்ணன் மிதித்து விட்டார்.

    இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்தின் உரிமையாளரான பழனிசாமியின் மகன் செல்வராஜ் ஓடி வந்து பார்த்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கருங்கண்ணனின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த கருங்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு திரண்ட அவரது உறவினர்கள், கருங்க ண்ணன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகே, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ஆலாந்துறை பட்டாளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சுமதி (வயது 35). கூலித் தொழிலாளி.

    கடந்த சில நாட்களாக இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்த போது திடீரென சுமதியின் உடல் நிலை மோசமடைந்தது.

    இதனையடுத்து அவரை அவரது கணவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சுமதியை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்ததி வருகிறார்கள்.

    • மொபட் ராமபட்டிணம் பிரிவு அருகே சென்ற போது முருகன் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அகே உள்ள டி. நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார்.

    மொபட் ராமபட்டிணம் பிரிவு அருகே சென்ற போது முருகன் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி
    • மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(வயது 60). கொத்தானார் வேலை செய்து வரும் இவர், தனது உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எரையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    இறுதி சடங்கு முடிந்த பின்னர் இவர் ஊர் திரும்பி உள்ளார். பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சித்தளி பிரிவு ரோட்டில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிச்சை பிள்ளையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர்.
    • கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி அருகே நல்லூர் மின்வாரிய அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(34) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்து லாரி குழந்தைவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைவேலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே குழந்தைவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியும் இறந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×