என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருமத்தம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- முத்துப்பாண்டி கடந்த 3 ஆண்டுகளாக முல்லைநகரில் வசித்து வருகிறார்.
- துணிக்கடையில் மேல்புறமாக சீரியல் பல்புகளை போட்டுக்கொண்டு இருந்தார்.
கோவை,
தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 30). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சோமனூர் அருகே உள்ள முல்லை நகருக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தார்.
பின்னர் அங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.
இவர் அந்த பகுதியை சேர்ந்த மோட்சா ஆரோ க்கியதாஸ் என்பவர் நடத்தி வரும் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று முத்து ப்பாண்டி ராமச்சிபாளை யத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் மேல்புறமாக சீரியல் பல்புகளை போட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது பல்புகளை கீழ் இருந்து மேல்நோக்கி வீசும் போது அந்த வழியாக சென்ற மின்சார வயர் மீது பட்டு முத்துப்பாண்டியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
இதில் உடல் கருகி உயிரு க்கு போராடிய அவரை அந்த வழியாக சென்ற வர்கள் மீட்டு சோமனூர் ஆரம்ப சுகாதார நிலைய த்துக்கு கொண்டு சென்ற னர்.
அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் முத்துப்பாண்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருமத்த ம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






