search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Decoration"

    • சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • விநாயகர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவி நாயகர், கட்சுவான் முனிஸ்வ ரர்சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தெப்பத்தில் உலா வந்தார்.
    • 12-ம் திருவிழா விடையாற்றி உற்சவம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

    பேராவூரணி:

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடனும் இரவு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.

    வண்ண மயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா வந்தது.

    11- ம்நாள் திருவிழா காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் அருகில் உள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தெப்பத்தில் உலா வந்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று 12 -ம் திருவிழா விடையாற்றி உற்சவம், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோயில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ணமலர்கள் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வண்ணமலர்கள் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 12-ம் நாளான நேற்று காலை சந்திரசேகரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    விழாவில் தினமும் சுவாமிக்கு அலங்காரம், புறப்பாடு நடந்து வருகிறது.

    விழாவின் 12-ம் நாளான நேற்று காலை சந்திரசேகர சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    இன்று காலை சந்திரசேகர சுவாமிக்கு வெண்ணெய்த்தாழி அலங்காரம் செய்யப்பட்டது.

    மாலையில் வெள்ளி வானங்களில் விநாயகர், சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர், ஓலை சப்பரத்தில் சந்திரசேகரர், அம்பாள் வீதியுலா நடைபெற உள்ளது.

    • புனித‌நீர்‌ அடங்கிய கடம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
    • ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பூதலூர்:

    வடக்கு பூதலூர் ஆனந்த காவேரி கரையில் அமைந்திருக்கும் ஆனந்த விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவில்பத்து ஆபாத்சகேஸ்வரசாமி கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்தனர். கோவிலின் அருகில் புனிதநீர் அடங்கிய கடம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.

    ஹோமத்தில் வைக்கப்பட்டு இருந்த புனித நீரால் ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்த விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராமத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • தீமிதி திருவிழா கடந்த 16-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூரில் பிரசித்தி பெற்ற செல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 16 -ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன், மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் சாட்சிநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குருபகவான் குடிகொண்டுள்ளார்.

    தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குருபகவான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம் இதுவாகும்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதேபோல், திருவிடைமருதூர் அருகே சூரியனார்கோயிலில் உள்ள உஷா தேவி சாயா தேவி உடனாகிய சிவசூரிய பெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு கட அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

    குருபெயர்ச்சி அடையும் நேரமான 11. 21 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

    • மலர்களை திருவாசல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் அடுத்த தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, நூற்றுக்கண க்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை திருவாசல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    • பழங்களால்‌ சிறப்பு அலங்காரம்‌ செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் திரண்டு அய்யப்பனை‌ வழிபட்டனர்.

    பூதலூர்:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருக்காட்டுப் பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரசாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தீபாராதனை காண்பிக் கப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து, கோவிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் அய்யப்பனுக்கு விஷூக்கனி தரிசனத்திற்காக அனைத்து வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதனை காண அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் திரண்டு அக்னீஸ்வரர் மற்றும் அய்யப்பனை வழிபட்டனர்.

    • மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவாரூர்:

    நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குநடைபெற்றது.

    இதையொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது.

    பின்னர் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். .

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு யாகம் நடைப்பெறுவது வழக்கம் போல் அதன்படி பங்குனி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

    இதில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்குஉள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு யாகம் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×