என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆனந்த விநாயகர்.
ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக தினவிழா
- புனிதநீர் அடங்கிய கடம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
- ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூதலூர்:
வடக்கு பூதலூர் ஆனந்த காவேரி கரையில் அமைந்திருக்கும் ஆனந்த விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவில்பத்து ஆபாத்சகேஸ்வரசாமி கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்தனர். கோவிலின் அருகில் புனிதநீர் அடங்கிய கடம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.
ஹோமத்தில் வைக்கப்பட்டு இருந்த புனித நீரால் ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்த விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராமத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story