என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த செல்லமுத்து மாரியம்மன்.

    செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

    • மலர்களை திருவாசல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் அடுத்த தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, நூற்றுக்கண க்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை திருவாசல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    Next Story
    ×