search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death Sentence"

    வங்காளதேசம் விடுதலை போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் 17 கொலைகள் மற்றும் 15 பெண்களை கற்பழித்த வழக்கில் 5 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Bangladeshwarcrimes #deathsentence
    டாக்கா:

    வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு போர்குற்ற வழக்குகளை விசாரிக்க சர்வதேச கிரிமினல் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    விடுதலை போரின்போது பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அயூப் கானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் வங்காளதேசத்தின் பட்டுவாகாலி மாவட்டத்துக்கு உட்பட்ட இட்டாபாரியா கிராமத்துக்குள் புகுந்து 17 பேரை கொன்றதாக  (முன்னாள்) பழமை வாத முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 5 பேர் கடந்த 2015-ம் ஆண்டில் கைது  செய்யப்பட்டனர். 

    மேலும், அதே கிராமத்தில் 15 பெண்களை கற்பழித்தது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது. வீடுகளை எரித்தது, ஆள்கடத்தல், சித்ரவதை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் வங்காளதேச நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 5 பேருக்கும் முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து மூன்று நீதிபதிகளை கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். 

    இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம், ‘போர்குற்றத்தின் ஒரு பகுதியாக இவர்கள் 5 பேரும் பெண்களின் கற்பை சூறையாடுவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இதே மன உளைச்சலுடன் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அங்கீகரமாக இத்தகைய குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதித்தே ஆக வேண்டும்.

    எனவேம் குற்றவாளிகள் முஹம்மது இஷாக் ஷிக்தர், அப்துல் கனி, முஹம்மது அவால், சத்தார் படா, சுலைமான் மிருதா ஆகியோரை சாகும்வரை தூக்கிலிட்டு கொல்லுமாறு உத்தரவிடுகிறோம்’ என தெரிவித்துள்ளது. #Bangladeshwarcrimes #deathsentence
    எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது.
    கெய்ரோ:

    எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டனர்.

    எனவே 700 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 75 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    சென்னையை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு, தூக்கு தண்டனை வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    சென்னையில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவருடைய குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் குருமணி, ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, ஒன்றிய துணை செயலாளர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகே மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரவள்ளி தலைமை தாங்கினார்.

    தேசியக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், ஒன்றிய தலைவர் வனிதாதேவி, நகர தலைவர் மல்லிகா, துணை செயலாளர்கள் பூபதி, ஈஸ்வரி, லட்சுமி, மீரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கோட்டூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாதர் சங்க ஒன்றிய தலைவர் சுலோசனா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் உஷா, ஒன்றிய துணை தலைவர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் அம்புஜம், ஒன்றிய துணை செயலாளர் ம.தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொரடாச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவுரி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கேசவராஜ், துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
    எகிப்து நாட்டில் ஒரே நாளில் இரு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்தது.
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் ஒரு போலீஸ்காரரும், ஒரு பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது.

    கொல்லப்பட்ட இருவரும் உயிரிழப்பதற்கு முன்பாக துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 18 பேரை தாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்ததாகவும் போலீசார், கோர்ட்டில் சாட்சியம் கூறினர்.

    விசாரணை முடிவில் அந்த 18 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய எல் ஜகாஜிக் கோர்ட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இதே போன்று, அங்கு உள்ள மற்றொரு நகரமான இஸ்மாய்லியாவில் சிறையில் இருந்து தப்பிய மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    தண்டிக்கப்பட்ட 13 பேரும் 2016-ம் ஆண்டு, சிறையில் இருந்து தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இவ்விரு வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் வகையில் இலங்கையில், 19 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
    கொழும்பு:

    குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. இதற்காக வெளிக்கடை சிறையிலும், கண்டி போகம்பறை சிறையிலும் தூக்கு மேடைகள் அமைக்கப்பட்டன. கடந்த 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி பப்புவா என்பவருக்கு இலங்கையில் கடைசியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இலங்கை சிறைகளில் 500-க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால் மீண்டும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கை குறித்து இலங்கை பாரளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விவாதம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இலங்கை மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    மந்திரிசபையின் ஒப்புதலைத் தொடர்ந்து தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்ட ரீதியான பணிகள் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கியுள்ளது.

    இதில் முதற்கட்டமாக, தொடர்ந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இது தொடர்பாக பவுத்த சாசன மந்திரி காமினி ஜெயவிக்ரம பெரேரா, நிருபர்களிடம் கூறும்போது, போதைப்பொருள் குற்றத்துக்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரின் தண்டனையை நிறைவேற்ற மந்திரி சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். 
    இலங்கையில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

    எனவே, இது தொடர்பாக இதுபற்றி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறுகையில், “தீவிர குற்றச்செயல்களை தடுப்பதற்கு மீண்டும் மரண தண்டனையை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அதிபர் சிறிசேனா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனை அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களை நடத்தி நாட்டை அழிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சில குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தாலும் வெளியே போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்கின்றனர்” என்றார்.



    இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தாலும், 1976-க்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதிகள் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 1978க்குப் பிறகு வந்த அதிபர்களும், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.

    தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதால், மரண தண்டனை குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான பணிகளை அரசு தொடங்கி உள்ளது. #SriLankaCapitalPunishment #LankaDrugOffences
    சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
    சென்னை:

    சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த 2017 பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்த அவர் ஜாமினில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பை தப்பி ஓடினார்.

    பின்னர், தனிப்படை போலீசார் மும்பை சென்று அவரை பிடித்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. மேலும், 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 15 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. 

    இந்த மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் ராமதிலகம் மற்றும் விமலா இன்று தீர்ப்பு வழங்கினர். அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், செங்கல்பட்டு கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
    மத்திய பிரதேசத்தில் ஈவுஇரக்கமின்றி 9 வயது சிறுமியை கற்பழித்த குற்றவாளிக்கு புதிய சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ந்தேதி 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். அது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    கற்பழிப்பு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டசபையில் இந்த சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ஏப்ரல் 21-ந்தேதி ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. புதிய சட்டத்தின் கீழ் சிறுமியை கற்பழித்த நபருக்கு முதன் முறையாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர சுக்லா தெரிவித்தார்.

    இது குறித்து முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் கூறும் போது “கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதன் மூலம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுமிகளை கற்பழிப்பவர்கள் ஈவுஇரக்கமின்றி தூக்கிலிடப்படுவார்கள்” என்றார்.
    மலேசியாவில் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MariaExposto #deathsentence #drugtrafficking

    கோலாலம்பூர்:

    ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மரியா எக்ஸ்போஸ்டோ (54). மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்போர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்திள் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. 

    ஆனால் அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். அந்த பையில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது எனவும், அதை தனது ஆன்லைன் நண்பர் ஒருவர் தன்னிடம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுக்குமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து அந்த பையை எடுத்து வந்ததாகவும், மரியா கூறினார். அந்த பையை தன்னிடம் கொடுத்த நபர் அமெரிக்க ராணுவ வீரர் எனவும், தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருவதாக கூறியதாகவும் அவர் கூறினார்.

    இந்நிலையில், போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரியாவுக்கு மரண தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அவரை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக மரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  

    இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு, மலேசியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடு உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MariaExposto #deathsentence #drugtrafficking
    ×