search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cut"

    • துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின்பாதையை பாராமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் தச்சநல்லூர் மற்றும் தியாகராஜ நகர் துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அெவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம், இருதய நகர், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, முத்தூர், கொடிக்குளம் மற்றும் ஸ்ரீராமன்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    அன்றைய தினம் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • மனித கை ஒன்று கிடப்பதாக கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • அந்த கை ஒரு பெண்ணின் வலது கை என்பது தெரியவந்தது.

    கடையநல்லூர்:

    கடைய நல்லூர் தாலுகா அச்சம்பட்டி கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு தென்புறத்தில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    மனித கை

    அந்த நிலத்தில் மனித கை ஒன்று கிடப்பதாக கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    அங்கு ஒரு கை வெட்டப்பட்டு கிடந்தது. அவர் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    விசாரணை

    அப்போது அந்த கை ஒரு பெண்ணின் வலது கை என்பது தெரியவந்தது. மேலும் அழுக தொடங்கிய நிலையில் அந்த கை இருந்தது. உடனே போலீசார் அந்த கையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த கை யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவர்குளம் அருகே விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 47), விவசாயி.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (65) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரண்டு குடும்பத்திற்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பரமசிவன், அவரது மனைவி சீலக்காரி, மகன் வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, கருப்பசாமியை சரமாரி அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.

    பலத்த காயமடைந்த கருப்பசாமிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கருப்பசாமி தேவர்குளம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை டவுனில் பட்டாசு வாங்குவதில் தகராறில் அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 29). இவரது தம்பி சுடலைமுத்து (27). இவர்கள் நேற்று முன்தினம் பட்டாசு வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றனர்.

    அப்போது வரிசையில் நிற்பது தொடர்பாக அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து அங்கு டீக்கடை நடத்தி வரும் முத்தையா என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    நேற்று அவரது கடைக்கு சென்ற மாரிச்செல்ம் மற்றும் சுடலைமுத்து ஆகியோர் எப்படி போலீசில் புகார் செய்யலாம் என கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த முத்தையா இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் இருதரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியின் கழுத்தை அறுத்து, வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36), பாத்திரக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (32). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    மேலும் மனைவி மாலதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மாலை மாலதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாலதியின் கழுத்தை அறுத்தார். மாலதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    பின்னர் வேல்முருகன் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்து, மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். 2 பேரும் வீட்டில் மயங்கி கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

    உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×