search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor"

    • குன்னூர் சிம்ஸ் பூங்கா தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது.
    • மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர். நீலகிரிக்கு மற்ற நாட்களை விட வெயில் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    சுற்றுலா பயணிகள்

    இதில் ஊட்டி படகு இல்லம், ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தேயிலை தோட்டம், சூசைட் பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்வார்கள்.

    இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பூங்காவில் இருந்த மரத்தில் இருந்த தேன் கூடு திடீரென எவ்வாறோ கலைந்தது. அதில் இருந்து வெளியேறிய தேனீகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கொட்ட தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    துரத்தி துரத்தி கொட்டியது

    ஆனால் அவர்களை தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது. இதனால் பலர் காயம் அடைந்தனர். சில குழந்தைகளும் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த பூங்கா நிர்வாகத்தினர் அங்கு வந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர்.

    காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பூங்காவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பூங்கவில் இருந்து வேலையாட்களும் வெளியேற்றப்பட்டு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.

    பூங்காவில் தேனீக்கள் சுற்றுலா பயணிகளை தாக்கி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 61-வது ஆண்டு துர்கா பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர்.
    • துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    நீலகிரி குன்னூர் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பெங்கால் இன மக்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில் 61-வது ஆண்டு துர்கா பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர். இதில் இயற்கை சார்ந்த பொருட்களும் ஆர்கானிக் வண்ணத்திலும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.வடமாநில மக்களான பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். மேலும் சுமங்கலி பூஜையில், அம்மனுக்கு செந்தூரம் திலகமிட்டு, பூஜைகளை, மகளிரே நடத்தி வழிபட்டனர் தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காட்டேரி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு கடையின் உரிமையாளர்களும் கடை வாடகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும்
    • இந்த 9 கடைகள் மட்டும் சுமார் 1 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் ஒவ்வொரு கடையின் உரிமையாளர்களும் கடை வாடகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பலரும் வாடகை செலுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

    அதிகளவு வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ள நகராட்சி வருவாய் துறையினர், கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை வைத்துள்ள 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த 9 கடைகள் மட்டும் சுமார் 1 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதில் 1 கடை மட்டும் சுமார் 40 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது.

    இது குறித்து கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், மார்கெட் வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தினால் நகராட்சியின் நிதி நிலை சீராகி விடும். நிதி நிலை இல்லாததால் எந்த மக்கள் நல பணியும் செய்ய முடியவில்லை. எத்தனை நாளுக்கு சாலையோர மர ங்களை அகற்றியும் தூய்மை பணிகளை மேற்கொ ண்டும் மக்களை ஏமாற்ற முடியும். குன்னூர் மார்கெட்டில் உள ்வாடகையை ஒழித் து நிலுவை தொகை களை அதிரடியாக வசுல் செய்தால் மட்டுமே குன்னூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

    • நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் மாவட்ட அவைத் தலைவா் பில்லன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக் வரவேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: -

    தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நாளை (28-ந் தேதி) ஊட்டி மற்றும் குன்னூரில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

    அதேபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கி உள்ள இந்திய ஒற்றுமைக்கான நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். கேரள மாநிலம் வழியாக தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் 29-ந் தேதி கூடலூா் வழியாக கா்நாடக மாநிலம் செல்ல உள்ளாா். இதில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளா்கள் ரவிகுமாா், தமிழ்செல்வன், விஜயாமணிகண்டன், நகர செயலாளா்கள் ஜாா்ஜ், ராமசாமி, ஒன்றிய செயலாளா்கள் லியாகத் அலி, லாரன்ஸ், காமராஜ், கண்டோன்மென்ட் நகரிய செயலாளா் மாா்டின், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், துணைத் தலைவா் உமா ராஜன், நகராட்சி தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், பரிமளா, சிவகாமி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் ராம்குமாா், மாயன், பேரூராட்சி தலைவா்கள் கலியமூா்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, சித்ராதேவி, வள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

    ஊட்டி,

    குன்னூர் நகராட்சி 20-வது வார்டிற்கு உட்பட்டது மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இங்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி மூலம் ரூ.22 லட்சம் செலவில் இரவோடு, இரவாக சாலை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சமீபத்தில் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீண்டும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. வாகன ஓட்டிகளும் கீழே விழும் நிலையும் காணப்படுகிறது.

    இதற்கு காரணம் இந்த சாலை தரம் இல்லாமல் அமைக்கப்பட்டதாக நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தரமற்ற சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பெயர்ந்த சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும்
    • தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 30 வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கண்டித்து குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சமீப காலத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாத நிலையில் மலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இதுவரை எந்த தீர்வும் காணப்படாத நிலையில் இன்று உண்ணாவிரத. போராட்டம் நடைபெற்றது.

    அப்போது பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும். தேயிலை ஏல மையத்தில் செயற்கை வணிகத்தை மத்திய அரசு விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேயிலை ஏல மையங்களில் குறைந்தபட்சம் தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

    கலப்பட‌ தேயிலை தூளினால் தேயிலை விவசாயம் பாதிக்கப்படுகிறது மற்றும் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும் உட்பட‌ பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும்‌உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    • புலியை நேரில் காண்பது மிக அரிதாகவே இருந்து வருகிறது.
    • புலி மெதுவாக எழுந்து புதருக்குள் சென்றது.

    குன்னூர்,

    முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனம் மற்றும் வன விலங்குகளை காண்பதற்காக வனத்துறை வாகனம் மூலம் தினசரி சவாரி நடைபெற்று வருகிறது.

    இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து வனப்பகுதியில் சவாரி செய்யும் போது காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகளை மட்டுமே காண முடியும்.

    புலியை நேரில் காண்பது மிக அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால், சுற்றுலா பயணிகள் புலியை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலில் வாகனத்தில் சவாரி செல்கின்றனர். பெரும்பாலான நேரத்தில் புலியை காணாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் சவாரி சென்றனர். அப்போது சர்க்கிள் ரோடு பகுதியில் சென்ற போது புதருக்குள் புலி ஒன்று படுத்து கிடந்தது. அதை கொசுக்கள் சில மொய்த்து கொண்டிருந்தது. இதனால் தலையை அசைத்தபடி புலி படுத்து கிடந்தது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் புலியை பார்த்து ரசித்தனர். மேலும் சாலையின் கரையோரம் இருந்ததால் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    சிலர் ஆர்வ மிகுதியால் புலியை பார்த்தவாறு ஒருவருக்கொருவர் பேசினர். இதைக்கண்ட வன ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை சத்தம் போடக்கூடாது என அறிவுறுத்தினர். பின்னர் புலி மெதுவாக எழுந்து புதருக்குள் சென்றது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புலியை பார்த்த திருப்தியுடன் சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகளை கண்டால் சத்தம் போட்டு இடையூறு செய்யக்கூடாது என்றனர்.

    • பல் நோக்கு மைய கட்டிடத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி ஏற்பாடு

    ஊட்டி

    குன்னூா் ஊராட்சி இளித்தொரை கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மைய கட்டிடத்தை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் திறந்துவைத்தாா்.மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நகா்ப்புற ங்களின் வளா்ச்சிக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் வளா்ச்சிப் பணிகள் மேம்பட வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதற்கேற்ப இளித்தொ ரை கிராம மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் விதமாக சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பல்நோக்கு மைய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குன்னூா் சப்- கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், குன்னூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் சுனிதா நேரு, எடப்பள்ளி ஊராட்சி தலைவா் முருகன், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    • சாலை மீண்டும் குறுகலாக மாறி உள்ளது.
    • வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளை யம் சாலை மலைப்பா தையாக உள்ளது. இந்த சாலையில் குறுகிய வளைவுகள், கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில், சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சாலையோரம் பள்ளமாக உள்ள பகுதி களில், தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. குறுகிய வளைவுகளால் போக்குவ ரத்து பாதி ப்பு, விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் குன்னூர்-மேட்டு ப்பாளையம் சாலையில் கே.என்.ஆர்.நகர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் சாலை மீண்டும் குறுகலாக மாறி உள்ளது. அந்த இடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே இடிந்த தடுப்புச்சுவ ரை போர்க்கால அடிப்படை யில் விரைந்து சீரமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    • பொதுமக்கள் கூடியதால் தப்பிச்சென்றது.
    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாகி உள்ளது.

    குன்னூர், -

    குன்னூர் நகர பகுதியான ராஜாஜி நகர் 25-வது வார்டு பகுதியில் அய்யப்பன் கோவில் செல்லும் சாலையின் அருகே பயன்படுத்தப்படாத கழிவறை உள்ளது.

    இது முட்புதர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த சாலையின் வழியாக கரடி ஒன்று நடந்து வருவதை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்தவர்கள் உடனடி யாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .

    வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து கரடி எங்கு உள்ளது என்று தேடினர். அந்தப் பகுதியில் சாலையின் ஓரங்களில் உணவுப்பண்டங்களை கொட்டி உள்ள நிலையில் இந்த உணவுகளை சாப்பிடுவதற்காக கரடிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாகி உள்ளது.

    பொதுமக்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அந்தப் பகுதியில் இருந்த பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் சென்று மறைந்தது. கரடி மறைந்த இடத்தை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் சுற்றி தேடிப்பார்த்தனர். ஆனால் கரடி அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு சென்று விட்டது.

    கரடி கழிவறைக்குள் புகுந்த தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு கூடி நின்றனர். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறி அப்புறப்படுத்தினர்.   

    • மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.
    • ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி,

    குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் ஆசிரியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தலைமையாசிரியர் ஜோஸ்பின் மேரி சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சார்பில் பரிசுகளை வழங்கினார். பள்ளி மாணவர்கள் அளித்த சிறப்பான ஆசிரியர் தின நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பிள்ளைகள் சிறு வயதில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.
    • மாணவிகள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிய வேண்டும்

    ஊட்டி:

    குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டாக்டர் புணர்ஜீத் மற்றும் டாக்டர் ரமேஷ், அரசு பொதுநல மருத்துவர் டாக்டர் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பெற்றோர்களுக்கு இடையே குழந்தைகளை கவனிக்கும் முறையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    டாக்டர்கள் ேபசும் போது கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் சிறு வயதில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.

    பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும். மேலும் சிறு வயதில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் உடல், மன அளவில் பாதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பின்பு கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் பற்றிய கருத்துக்களை மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தனர். தலைமை ஆசிரியர் பேசுகையில் மாணவிகள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ×