search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congratulates"

    ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    கொல்கத்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். 

    100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுகளை உள்ளடக்கிய இப்போட்டியில், 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது. 6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார்.

    இதற்கிடையே, பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் இன்று மாலை நடந்தது. இதில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா மற்றும் கொல்கத்தாவின் ஹெப்டத்லான் இளவரசியான ஸ்வப்னா பர்மனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இதன்மூலம் நம் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி பிரதமர் மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #President #RamNathKovind #Modi
    புதுடெல்லி:

    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவருக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    அதில், சிறப்பான பணி, ஞானம் மற்றும் பணிவின் மூலம் இந்தியர்களின் அன்புக்குரியவராக விளங்கி, ஓராண்டு பதவி காலத்தை நிறைவுசெய்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரங்கள் கிடைப்பதற்கு ஜனாதிபதி பாடுபடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.   #President #RamNathKovind #Modi
    இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்ட் விளையாடுவதையொட்டி, ஆப்கான் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #IND #AFG #INDvAFG
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.  இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    ‘ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுவதை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன். இதுபோன்ற விளையாட்டுக்கள் தொடர்ந்து இரு நாட்டு மக்களிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும்’ என்றும் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரகானே (கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.

    ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானி ஸ்காய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர்கம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் -உர்- ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான். #IND #AFG #INDvAFG

    ×