search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan people"

    இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்ட் விளையாடுவதையொட்டி, ஆப்கான் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #IND #AFG #INDvAFG
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.  இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    ‘ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுவதை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன். இதுபோன்ற விளையாட்டுக்கள் தொடர்ந்து இரு நாட்டு மக்களிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும்’ என்றும் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரகானே (கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.

    ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானி ஸ்காய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர்கம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் -உர்- ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான். #IND #AFG #INDvAFG

    ஆப்கானிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அன்றாடம் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குகின்றனர். #Afghanistan #BombsAttack
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அன்றாடம் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் தினந்தோறும் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. குண்டு வெடிப்பு, தற்கொலை தாக்குதல்கள் அன்றாட வாடிக்கையாக உள்ளது. பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. ‘செக்ஸ்’ தொல்லை தரப்படுகிறது.

    இத்தகைய காரணங்களால் வெளியில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது. இருந்தாலும் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அதற்காக தற்போது ‘ஆன்லைன்’ வர்த்தகத்தை மக்கள் நாடுகின்றனர்.

    அதன்மூலம் வீட்டு உபயோக பொருட்கள், கம்ப்யூட்டர்கள், அழகுசாதன பொருட்கள், பர்னிச்சர்ஸ், கார்கள் மற்றும் நிலம் வாங்குதல், விற்றல் என அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது.

    அதற்காக தற்போது ஆசாத் பஜார் ஆப், அபோம் ஆப், ஜே.வி பஜார் டாட்காம் மற்றும் ‌ஷரீனாஸ் டாட்காம் என்பன போன்ற புதிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் முளைத்துள்ளன.

    ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தங்களுக்கு ஒரு புதிய அனுபவம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் குறைந்த செலவில் விரும்பிய பொருட்கள் பாதுகாப்பாக கிடைக்கின்றன என்றும் கூறுகின்றனர்.

    அதே நேரத்தில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஆன்லைன் வர்த்தகர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை தாக்குதல்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் சர்வ சாதாரணமாக நடப்பதால் மக்கள் கூட்டம் இல்லாத ரோடுகள் வழியாக சென்று பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. நிலைமை மோசமாக இருக்கும் பட்சத்தில் பொருள் வினியோகம் நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதும் அவை வழங்கப்படுகின்றன.

    50 ஆன்டுகளாக உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் ஆப்கானிஸ்தானில் தற்போது 50-க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் புதிதாக வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை லைசென்சு இன்றி நடத்தப்படுகிறது என வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Afghanistan #BombsAttack
    ×