search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swapna Barman"

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். #SwapnaBarman
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்தடை ஓட்டம் உள்பட 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் மொத்தம் 5,993 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 

    உஸ்பெகிஸ்தான் வீராங்கனை எகடெரினா வோர்னினா 6,198 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வப்னா பர்மன் இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அவர் கூறுகையில், ‘2-வது இடம் பிடித்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஈட்டி எறிதலில் எனது செயல்பாடு சரியில்லை. அது மட்டுமின்றி கணுக்காலில் வலி காரணமாக என்னால் நன்றாக தயாராக முடியவில்லை’ என்றார். #SwapnaBarman
    ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    கொல்கத்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். 

    100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுகளை உள்ளடக்கிய இப்போட்டியில், 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது. 6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார்.

    இதற்கிடையே, பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் இன்று மாலை நடந்தது. இதில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா மற்றும் கொல்கத்தாவின் ஹெப்டத்லான் இளவரசியான ஸ்வப்னா பர்மனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இதன்மூலம் நம் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
    ×