search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist Party"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சின்னசாமி, மாதேஸ்வரன், கந்தசாமி, காதர், மாது, விஸ்வநாதன், கமலாமூர்த்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

    சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். பொதுமக்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டக்குழுவினர் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகினர். இதை கண்டித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகினர். இதை கண்டித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் செய்தனர்.

    திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் திடீரென வேலூர்- திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர் களை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    சிவகங்கை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கோபால், நிர்வாகிகள் ஆறுமுகம், திருச்செல்வம், முருகன், குணாளன், நாச்சியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டுக்கு பயிர்காப்பீட்டு செய்த 13 ஆயிரம் விவசாயிகளுக்கு இன்றுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கு பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளதா என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும்.

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அனுப்புவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நோயாளிகளுக்கு சிவகங்கை மருத்துவமனையிலேயே சிகிச்சைஅளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் வைகை மற்றும் சிற்றாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதால் நீர் ஆதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×