search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protested"

    • அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி ஒன்றி யங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சுழி, நரிக்குடியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள்,சி.ஐ.டி.யு. தலைவர் சாராள், ஒன்றிய கன்வீனர் சுரேஷ் குமார், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

    மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர்.
    • இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தர்ராஜ். துணைத் தலைவராக இருப்பவர் வசந்தி மயில்வேல். ஊராட்சி மன்ற செயலராக இருப்பவர் பால்ராஜ். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது பல்வேறு முறையீடு புகார்கள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யங்கோட்டை ஊராட்சி புதூரில் உள்ள திருமண மண்டபம் அருகே 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதி ரூ.6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் செல்வ மகாமுனி, சரண்யா, இளங்கோவன், முனிராஜ், பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டியபடி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    பவானி:

    பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி வட்டார தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் விஜயாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடியில் அதிகமான பணி சுகாதாரத் துறை பணிகள் செய்யப்ப டுகின்றன. அதனால் தான் அங்கன்வாடி ஊழியர்களு க்கு 42 வயதில் பிஎச்என் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பதவி உயர்வை வழங்கிட வேண்டும். இல்லை என்றால் சுகாதாரத் துறை பணியை கண்டிப்பாக புறக்கணி ப்போம்.

    அதிகமாக உள்ள காலி பணிகளினால் ஒரு ஊழியர் இரண்டு மூன்று மையங்களில் பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. திட்டத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை உள்ளது.

    எனவே உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் பவானி வட்டார அளவில் பணியாற்றும் அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியா ளர்கள் என 50க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர் பர்கூர் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் வி.கற்பகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் தமிழரசி வரவேற்புரை யாற்றினார்.

    கூட்டத்தில்1993 அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு மேற்பார்வை யாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் 5 ஆண்டு பணி முடிந்த குரு மைய ஊழியர்களுக்கும் 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

    காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும்.

    ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும்.உள்ளி ட்ட பல்வேறு கோரி க்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் அடிப்படையில் நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிக பணியாளர்கள் 137 பேர் என மொத்தமாக 175 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் காரமடை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலாக தூய்மைப்பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர்.

    தற்போது நகராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. தினசரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன்னர் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். ஆனால் அவர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த அவர்கள் நகராட்சி குப்பைக்கிடங்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது எனவும், தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு சுமார் 9 மணி வரை தூய்மை பணியாளர்கள் தங்களுடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, காரமடை நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், வார்டு உறுப்பினர் குருபிரசாத், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏற்கனவே பணியில் உள்ள தூய்மைப்பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் நீக்கப்பட மாட்டார்கள் எனவும்,ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், தங்களுக்கு அரசு நிர்ணயித்த ரூ.606 சம்பளத்தையே வழங்க வேண்டும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
    • ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் கே.என்.பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கே.என்.பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்ட த்தில் ஈடுபட முயன்றனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவ அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு அரசு மருத்துவ உயரதிகாரிகளிடம் இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய- மாநில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், மாணவர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட தலைவர் கலை வாசம் ஆகியோர் வரவேற்றனர்.

    மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

    பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி நடைபெறுவதால் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BharatBandh #Rally
    புதுடெல்லி:

    குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்துவது, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு சார்பு தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

    ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், மத்திய-மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வடமாநிலங்களில் நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களிலும் ஸ்டிரைக்குக்கு ஆதரவு இருந்தது.

    பல மாநிலங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணிக்கு வராததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், கேரளாவில் பல இடங்களில் ரெயில் மறியல் நடந்தது. சத்தீஸ்கரில் வங்கி மற்றும் அஞ்சலகச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர்களும் பணிக்கு வரவில்லை.



    மணிப்பூர் பகுதியில் உள்ள அரசு நிலக்கரி சுரங்கம், கேவ்ரா, தீப்கா போன்ற இடங்களில் உள்ள சுரங்கங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. என்றாலும் இங்கு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படவில்லை. பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின.

    கோவா மாநிலம் பனாஜியில் போக்குவரத்து, வங்கி, துறைமுக தொழிலாளர்கள் உள்பட 5,000 பேர் 3 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தினர்.

    கர்நாடகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் தொலைதூரம் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    மராட்டியத்தில் மும்பை, தானே, நவிமும்பை ஆகிய இடங்களில் மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 33,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. டெல்லி மண்டி அவுசில் இருந்து தொடங்கும் இந்த பேரணியில் அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பேரணி பாராளுமன்றத்தை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பாராளுமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் நேற்றும், இன்றும் அரசு பஸ்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல ஓடின. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. தொலைதூரம் செல்லும் ரெயில்களும், புறநகர் ரெயில்களும் வழக்கம் போல் ஓடின.

    மத்திய அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் உள்பட பல தபால் நிலையங்களில் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது.

    சென்னையில் வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக பல ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு இருந்தன. வங்கிகளில் காசோலை மூலமான பல கோடி பணப் பரிமாற்றங்களும் நடைபெறாமல் 2-வது நாளாக முடங்கியது.

    சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #BharatBandh #Rally

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×