search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore robbery"

    கோவை அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை 18 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காளப்பட்டி அருகே உள்ள சக்தி வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63). விவசாயி.

    கடந்த 13-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 15 பவுன் தங்க செயின், கம்மல், மோதிரம் உள்பட மொத்தம் 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஆறுமுகம் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பறக்கும் படை அதிகாரிகள் என கூறி வியாபாரியிடம் 3 பவுன் நகை, ரூ. 2 ஆயிரத்தை பறித்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பறக்கும் படையினர் என கூறி வியாபாரியிடம் நகை-பணம் பறித்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    மேட்டுப்பாளையம் ராமகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). வியாபாரி. இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வியாபாரி ஆறுமுகத்தை வழி மறித்தனர். தாங்கள் பறக்கும் படை அதிகாரிகள். உங்களை சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    பின்னர் ஆறுமுகம் வைத்திருந்த செல்போனை பிடுங்கினார்கள். அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கு ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. நாங்கள் செல்கிறோம்.  நீங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து நகை, பணத்தை வாங்கி செல்லுங்கள் என கூறி விட்டு 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    பணம், நகையை பறி கொடுத்த வியாபாரி ஆறுமுகம் அங்கு சென்று பார்த்த போது போலீஸ் ஜீப் இல்லை. அப்போது தான் நகை, பணத்தை பறித்து சென்றது பறக்கும் படையினர் இல்லை. தேர்தல் அதிகாரிகள் போல் நடித்து பறித்து சென்றது ஆறுமுகத்திற்கு தெரிய வந்தது.

    இது குறித்து ஆறுமுகம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் போல் நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை சாய்பாபா காலணி கே.கே.புதூரை சேர்ந்தவர் அனந்த நாராயணன். இவரது மனைவி பிரேமா ஜெயம் (78). இவர் இன்று காலை மற்ற 2 பெண்களுடன் வாக்கிங் சென்றார். ஸ்டேட் பாங்கி காலனி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் பிரேமா ஜெயம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்த நபரை தேடி வருகிறார்கள்.
    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப்புதூரில் வங்கி அதிகாரி வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து 35 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப் புதூரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு(வயது 57). வங்கி அதிகாரி.

    இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாநகராட்சி ஊழியர்கள் என கூறிக் கொண்டு 2 பேர் வந்துள்ளனர். அப்போது வீட்டில் அவரது மாமியார் தேவயானி (72) மட்டும் இருந்துள்ளார்.

    அவரிடம் வீட்டை அளக்க வேண்டும் என கூறி உள்ளனர். பின்னர் 2 பேரும் டேப்பை பிடித்தவாறு வீட்டுக்குள் பல அறைகளுக்கும் சென்று அளவீடு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 35 பவுன் நகைள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ்பாபு இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    மாநகராட்சி ஊழியர்கள் என கூறி வந்த 2 பேர் தான் நகைகளை திருடி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை சிங்காநல்லூர் அருகே என்ஜினீயர் வீடடின் முன் பக்க கதவை உடைத்து 25 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரை சேர்ந்தவர் பிரசன்ன பாபு(வயது 37). என்ஜினீயர்.

    இவர் பீளமேடு ஐ.டி. பூங்காவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 24-ந்தேதி பிரசன்ன பாபு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெல்லை சென்றார்.

    இன்று அதிகாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்ற போது பீரோ உடைக்கப்பட்டு 25 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டில் ஆள் இல்லாததை கண்காணித்து மர்மநபர்கள் கதவை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில், திருடர்களின் நடமாட்டம் குறித்த காட்சிகள் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
    கோவை ராமநாதபுரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (வயது 52).

    இவர் நேற்று இரவு அப்பகுதியில் செல்போனில் பேசிய படி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் கீதா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட கீதா நகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு நகைபறிக்க முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் குனியமுத்தூரை சேர்ந்த ரசூல்(19) என்பது தெரிய வந்தது. இருசக்கர வாகன திருட்டு வழக்கு ஒன்றில் கைதான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்நிலையில் பெண்ணிடம் நகைபறிக்க முயன்று மீண்டும் சிக்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை அருகே மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து 27 பவுன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள துடியலூர் லவ்லி நகரை சேர்ந்தவர் கண்ணையன் (80). டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் என கண்ணையனிடம் அறிமுகம் செய்தனர். உங்கள் வீட்டின் தண்ணீர் தொட்டி சுத்தமாக இருக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்கள்.

    அதன்படி வீட்டில் இருந்த தொட்டியை சோதனை செய்தனர். பின்னர் மாடியில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டியை சோதனை செய்ய வேண்டும் என்றனர். அவர்களை கண்ணையனும், அவரது மனைவியும் மாடிக்கு அழைத்து சென்றனர்.

    தண்ணீர் தொட்டி சுத்தமாக இருக்கிறது என கூறி விட்டு கீழே இறங்கினார்கள். அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்னர் கண்ணையனும், அவரது மனைவியும் வீட்டிற்குள் சென்றனர்.

    அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட 27 பவுன் நகைகளை காணவில்லை.

    இதனால் கண்ணையனும் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் மாடிக்கு சென்ற சமயத்தில் மர்ம நபர்களுடன் வந்த வேறு ஒருவர் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடி சென்று இருக்கலாம் என கண்ணையனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    கோவை அருகே துடியலூரில் மருத்துவ பிரதிநிதி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள துடியலூர் பன்னிமடை ஸ்ரீவாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச பிரபு. மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி கவிதா. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு தங்களது சொந்த ஊரான தாராபுரம் அருகே உள்ள தளவாய் பட்டினம் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட வாலிபர்கள் 2 பேர் சீனிவாச பிரபு வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் முன் பக்க கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை திருடினார்கள். சீனிவாச பிரபு வீட்டில் இருந்து பொருட்களை எடுக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியராஜ் மற்றும் ஹரிஸ் ஆகியோர் அங்கு வந்தனர். இதனை பார்த்ததும் கொள்ளையர்கள் 2 பேரும் நகைகளுடன் பின்பக்க மதில் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர்.

    அவர்கள் வந்த மொபட் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளையர்கள் விட்டு சென்ற மொபட்டை கைப்பற்றினார்கள். அதனை வைத்து நகை திருடிய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
    கோவை மாவட்டம் குனியமுத்தூரில் வியாபாரியின் வீட்டின் முன்கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கோவை:

    கோவை குறிச்சி மாச்சம் பாளையம் ரோடு அம்மணியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜெயக்குமார் (வயது 30).

    இவர் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெல்லை சென்றார்.

    இன்று அதிகாலை வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    கோவை அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி ரூ.3½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையில் திருப்பூர் பெதப்பம்பட்டியை சேர்ந்த வேலுசாமி (வயது36), தர்மபுரியை சேர்ந்த ஜெகதீஸ் (38) ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் அப்பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இரவு பணி முடிந்ததும் கடையில் வசூலான ரூ.3½ லட்சத்தை எடுத்துக் கொண்டு மொபட்டில் புறப்பட்டனர்.

    நள்ளிரவு 11 மணி அளவில் சூலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இவர்களை வழி மறித்து இருவரின் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் ஜெகதீஸ், வேலுசாமி ஆகியோர் நிலை குலைந்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர்.

    பணத்தை பறிகொடுக்காமல் இருக்க இருவரும் பையை இறுக்கிப் பிடித்தனர். இதனால் ஆவேசமடைந்த கும்பல் கத்தியால் வேலுசாமி, ஜெகதீசை குத்தியது. இதில் அவர்கள் காயம் அடைந்து கீழே விழுந்தனர். உடனே பணத்தை பறித்துக் கொண்டு கும்பல் தப்பி ஓடி விட்டது. அவ்வழியாக வந்தவர்கள் வேலுசாமி, ஜெகதீசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவஇடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேரும் லுங்கி, பனியன் அணிந்து வந்துள்ளனர். டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் சூப்பர்வைசர் நேற்று திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். எனவே விற்பனையாளர்கள் இருவரும் வசூல் தொகையுடன் சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.

    கொள்ளையர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை சரவணம்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 6 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சாந்தி(வயது 50).

    இவர் நேற்று இரவு மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த அவர் திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாநகர் முழுவதும் போலீஸ் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    கருமத்தம்பட்டி அருகே தனியார் கம்பெனி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது.
    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஊஞ்ச பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் இளவரசன். பேப்ரிக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மேட்டூர் சென்று இருந்தார்.

    இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. இளவரசன் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை.

    நகையை திருடிய மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள கலங்கலில் வேடசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த மணி, தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடி சென்று விட்டனர்.

    கோவிலில் வைக்கப்பட்டு இருந்த வேலும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந்தேதி திருட்டு நடைபெற்றது. மீண்டும் தற்போது பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

    சூலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கோவிலில் திருடும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×