என் மலர்
நீங்கள் தேடியது "Coimbatore robbery"
- சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- கொள்ளை குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத்(வயது55).
இவர் கடந்த 4-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மத்தியபிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது பிரசாத் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கேமிரா, வெள்ளி நாணயம், தங்க நாணயம், வைர கம்மல், மூக்குத்தி, வெள்ளி டம்ளர் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விஸ்கி, ஒயின் ஆகியவற்றை வாங்கி விட்டு மீண்டும் பிரசாத்தின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் மது குடித்தனர். மது குடிக்கும் போது சாப்பிடுவதற்காக வீட்டில் உள்ள பிரிட்ஜை திறந்து அதில் இருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு மது குடித்தனர்.
பின்னர் போதையில் படுத்து தூங்கி விட்டு போதை தெளிந்ததும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் தப்பிச் சென்றனர்.
சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்த பிரசாத் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் கொள்ளையர் பயன்படுத்திய மதுபாட்டில் கிடப்பதை கண்டார். இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
- கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலை, ரத்தினம் நகரை சேர்ந்தவர் கார்த்திக். பல் மருத்துவராக உள்ளார்.
இவர் பொங்கலையொட்டி வெளியூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது டாக்டர் வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு கதவு திறந்து இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து டாக்டர் கார்த்திக் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
மேலும் அதில் வைத்திருந்த 136 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. கார்த்திக் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திக் உடனடியாக மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் டி.எஸ்.பி. சிருஷ்டிசிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் பாதையில் வெங்கடாசலம் நகரை சேர்ந்தவர் திலகம்(வயது60).
இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மகன்கள் கவியரசன்(38), சிவா. இவர்களது சொந்த ஊர் நெல்லை.
இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். கடையின் அருகேயே வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர்.
நேற்று கடையில் சிவா மட்டுமே இருந்தார். அப்போது ஒரு வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அதில் 4 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காரில் அமர்ந்து கொள்ள மற்ற 3 பேரும் இறங்கி கடையை நோக்கி வந்தனர்.
கடைக்கு வந்ததும்,சிவாவிடம், நாங்கள் போலீஸ் அதிகாரிகள், உங்கள் கடையில் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சோதனை நடத்த இங்கு வந்துள்ளோம் என்றனர்.
சிவாவும் அவர்களை போலீஸ் என நம்பி சோதனை நடத்த அனுமதித்தார். இதையடுத்து 3 பேரும் கடைக்குள் சென்று சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து, வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் இருந்த சிவா மற்றும் திலகத்திடம் செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வீட்டிலும் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்கள், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் நிலையம் வாருங்கள் என்று காரில் அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்றபின் சிவாவை காரில் இருந்து இறக்கி விட்டனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிவாவுக்கு அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லாமல் பாதி வழியில் இறக்கி விட்டதால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் சோதனை செய்தார்.
அப்போது வீட்டில் பையில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போய் இருந்தது. இதனால் போலீஸ் என கூறி சோதனை நடத்தியவர்கள் தான் திருடி சென்றிருப்பார்கள் என அவருக்கு தோன்றியது.
உடனடியாக அவர் சூலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டு விசாரித்தனர். இதில் சிவாவின் வீட்டில் பணத்தை திருடி சென்றது, போலி போலீஸ் நபர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு இருந்த சி.சி.டி.வி பதிவுகளைச் சேகரித்து போலீஸ் வேடத்தில் கொள்ளையடித்த கும்பலைத் தேடி வருகின்றனர். இதே போல இந்த கும்பல் கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை என்ற பெயரில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என வசூல் செய்துள்ளனர். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
- ஜவுளி எடுத்து மாலையில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை காமராஜர் நகரை சேர்ந்தவர் யுவராஜ்(வயது41).
இவர் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபபிரியா.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யுவராஜ் குடும்பத்தினருக்கு ஜவுளி எடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று யுவராஜ் தனது மனைவி தீப பிரியாவுடன் ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
ஜவுளி எடுத்து மாலையில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைபார்த்து பதறிபோன யுவராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உடனடியாக யுவராஜ் பீரோவில் நகை,பணம் இருக்கிறதா? என பார்த்தார்.
அப்போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.
இவர்கள் கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து யுவராஜ் காரமடை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, சுல்தான் இப்ராகிம், தனிப்பிரிவு காவலர் பிரவீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கொள்ளை நடந்த வீடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு ஏதாவது கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தொடர்ந்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் ஊழியர் கடையில் இருந்த ஜெயக்குமாரின் தாயாரிடம், நான் டீ குடிக்க செல்கிறேன்.
- அதுவரை இவருக்கு நீங்கள் நகையை எடுத்து காண்பிக்குமாறு கூறி சென்றார். அவரும் காண்பித்து கொண்டிருந்தார்.
கோவை:
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.
பின்னர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் நகைகள் வாங்க உள்ளேன். நகைகளை எடுத்து காண்பிக்குமாறு கூறினார். பெண் ஊழியரும் நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து காண்பித்தார்.
இதற்கிடையே அந்த பெண் ஊழியர் கடையில் இருந்த ஜெயக்குமாரின் தாயாரிடம், நான் டீ குடிக்க செல்கிறேன். அதுவரை இவருக்கு நீங்கள் நகையை எடுத்து காண்பிக்குமாறு கூறி சென்றார். அவரும் காண்பித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபர், மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீரை எடுத்து வர உள்ளே சென்றார். அந்த சமயம் பார்த்து வாலிபர் 2 பவுன் நகையை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதனை வைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் பதுங்கிய அந்த வாலிபரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த ரவி என்ற சேசிங் ரவி(வயது40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேறு எங்காவது இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று சந்திரன் கோவிலில் பூஜைகள் முடித்து விட்டு இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை சந்திரன் வழக்கம் போல கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது சாமியின் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் செயின் திருடு போயிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து அவர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராக்கிளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றார். சாமி நகைகள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி நாச்சிகவுண்டர்வீதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 76). இவர் கடந்த 2-ந் தேதி மாலை தனது வீட்டில் துணியை காயப்போட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு ஆணும், பெண்ணும் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். ஜெயலட்சுமி சத்தம் போடாத வகையில் அவரது வாயில் துணியை வைத்து திணித்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஜெயலட்சுமியை தாக்கி கொள்ளையடித்த நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சஞ்சய் (21) மற்றும் அவரது மனைவி சுருதி (20) என்பது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஜெயலட்சுமி வீட்டில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டனர்.
போலீசாரிடம் கணவன்-மனைவி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தோம். மேலும் தீபாவளி செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். அப்போது மூதாட்டி ஜெயலட்சுமி தனியாக இருப்பதை அறிந்தோம். எனவே அவரை தாக்கி நகை கொள்ளையடித்தால் அந்த பணத்தில் தீபாவளியை கொண்டாடலாம் என திட்டமிட்டோம். அதன்படி ஜெயலட்சுமியிடம் நகை பறித்து தீபாவளியை கொண்டாடினோம். ஆனால் போலீசில் சிக்கிக் கொண்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலேரி பாளையத்தை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 38). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான பழனி அருகே உள்ள கீரனூருக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின் கம்மல், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று வீட்டிற்கு வந்த சபரிநாதன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சபரிநாதன் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை புதிவு செய்தனர்.
இதனை வைத்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கருமத்தம்பட்டி அடுத்த சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 74) இவரது மனைவி கருப்பாயி (65). இவர்கள் இருவரும் சொந்த வீட்டில் தனியாக சக்திநகரில் வசித்து வருகின்றனர். இவர்களின் 2 மகன்களுக்கும் திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி ராமநாதன் மற்றும் அவரது மனைவி, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு சென்றனர். இதையடுத்து நேற்று தங்களது வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து கருப்பாயி பின்புறம் உள்ள கதவை திறக்க சென்றுள்ளார். அப்போது பின்பக்ககதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமநாதன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டினுள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதன் தனது மகன் முத்துக்குமாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடம் வந்த முத்துக்குமார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வீட்டில் இருந்த எல்.இ.டி டி.வியை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை கொண்டு அவர்களது மகன் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் மர்மநபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருவேறு இடங்களில் கதவின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருப்பது, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவைப்புதூர் அருகே உள்ள குற்றாலம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 30-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் அறையில் இருந்த 1¼ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய ரமேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கரும்புக்கடை பாத்திமா நகரை சேர்ந்தவர் அஜிமல்ஷா (43). இவர் திருச்சி ரோட்டில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கு இருந்த எல்.இ.டி.,டி.வி. மின்விசிறி, லேப்டாப், கியாஸ் அடுப்பு உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் கடையை திறக்க சென்ற அஜிமல்ஷா கடையில் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரானிக்ஸ் கடையில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கோவை கோவில்பாளையம் மரக்கடை வீதி 2-வது வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது55). இவர் அந்த பகுதியில் சொந்தமாக உரக்கடை வைத்து விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி தேன்தமிழ் பாரதி(52). கணவன், மனைவி 2 பேரும் சம்பவத்தன்று வெள்ளமடை அடுத்த கோவில்தோட்டம் பகுதியில் உள்ள தங்களது மற்றொரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
கோவில்பாளையம்- வேளமடை ரோட்டில் சென்றபோது இவர்களை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்ததும் மர்மநபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக இயக்கி வெங்கடேசன் மோட்டார் சைக்கிள் அருகே வந்தனர்.
அருகே வந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தேன்தமிழ் பாரதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் வெங்கடேசன் தனது மனைவியுடன் கீழே விழுந்தார். இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருடன்.. திருடன்... என சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து வெங்கடேசன் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை விளாங்குறிச்சி ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36). டாக்டர். நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த சந்தானம் வீட்டை சுற்றி பார்த்தார்.
அப்போது வீட்டின் பால்கனி வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சந்தானம் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.






