என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  கருமத்தம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, டி.வி திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருவேறு இடங்களில் கதவின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருப்பது, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  கருமத்தம்பட்டி:

  கருமத்தம்பட்டி அடுத்த சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 74) இவரது மனைவி கருப்பாயி (65). இவர்கள் இருவரும் சொந்த வீட்டில் தனியாக சக்திநகரில் வசித்து வருகின்றனர். இவர்களின் 2 மகன்களுக்கும் திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி ராமநாதன் மற்றும் அவரது மனைவி, கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு சென்றனர். இதையடுத்து நேற்று தங்களது வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.

  இதனையடுத்து கருப்பாயி பின்புறம் உள்ள கதவை திறக்க சென்றுள்ளார். அப்போது பின்பக்ககதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமநாதன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டினுள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதன் தனது மகன் முத்துக்குமாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடம் வந்த முத்துக்குமார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வீட்டில் இருந்த எல்.இ.டி டி.வியை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை கொண்டு அவர்களது மகன் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் மர்மநபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருவேறு இடங்களில் கதவின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருப்பது, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×