search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி போல் நடித்து வியாபாரியிடம் நகை-பணம் பறிப்பு
    X

    மேட்டுப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி போல் நடித்து வியாபாரியிடம் நகை-பணம் பறிப்பு

    பறக்கும் படை அதிகாரிகள் என கூறி வியாபாரியிடம் 3 பவுன் நகை, ரூ. 2 ஆயிரத்தை பறித்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பறக்கும் படையினர் என கூறி வியாபாரியிடம் நகை-பணம் பறித்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    மேட்டுப்பாளையம் ராமகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). வியாபாரி. இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வியாபாரி ஆறுமுகத்தை வழி மறித்தனர். தாங்கள் பறக்கும் படை அதிகாரிகள். உங்களை சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.

    பின்னர் ஆறுமுகம் வைத்திருந்த செல்போனை பிடுங்கினார்கள். அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கு ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. நாங்கள் செல்கிறோம்.  நீங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து நகை, பணத்தை வாங்கி செல்லுங்கள் என கூறி விட்டு 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    பணம், நகையை பறி கொடுத்த வியாபாரி ஆறுமுகம் அங்கு சென்று பார்த்த போது போலீஸ் ஜீப் இல்லை. அப்போது தான் நகை, பணத்தை பறித்து சென்றது பறக்கும் படையினர் இல்லை. தேர்தல் அதிகாரிகள் போல் நடித்து பறித்து சென்றது ஆறுமுகத்திற்கு தெரிய வந்தது.

    இது குறித்து ஆறுமுகம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் போல் நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை சாய்பாபா காலணி கே.கே.புதூரை சேர்ந்தவர் அனந்த நாராயணன். இவரது மனைவி பிரேமா ஜெயம் (78). இவர் இன்று காலை மற்ற 2 பெண்களுடன் வாக்கிங் சென்றார். ஸ்டேட் பாங்கி காலனி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் பிரேமா ஜெயம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்த நபரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×