search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boAt"

    • ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.

    ஆழ்கடல் அழகை ரசிக்க நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தற்போது இதற்கு மாற்றாக செமிசப் மெரின்' என் றழைக்கப்படும் விசைப் படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கலாம்.

    கடலை காணும் வகையில் இரு புறமும் நீர் புகாத கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் செல்லும் போது படகில் கீழடுக்கு 1.4 மீட்டர் அளவில் ஆழ்கடலில் பயணிப்பதால் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் அரிய வகை நீர் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

    இவ்வகை படகுகளில் செல்ல, பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த படகுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம், உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு தயாரித்து வருகிறது. சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் 16 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    இதில், மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்கலாம். ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் செல்லும்போது படகு ஆடாமல் பயணிக்க இருபுறமும் இறக்கை போன்ற அமைப்புடன் படகு கட்டப்பட்டு வருவதால் இதன் பெயர் 'டிரை மரான்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    • பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
    • 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.

    அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல் மார்க்கமாக படகில் அகதிகள் சென்றனர். அப்போது அந்த படகு துனிசியா கடலில் கவிழ்ந்தது.

    இதில் 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    • போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 தர ஸ்வெட் ரெசிஸ்டணட் வசதி உள்ளது.
    • இதில் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் லீப் கால் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாசட்ச் குறைந்த விலையில், அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய போட் வேவ் லீப் கால் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.83 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், IP68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறம் கரவுன் போன்ற பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    உடல்நல அம்சங்களை பொருத்தவரை போட் வேவ் லீப் கால் மாடலில் ஹார்ட் ரேட் மாணிட்டர், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் தினசரி ஆக்டிவிட்டி டிராக்கர், சுவாச பயிற்சி போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

     

    போட் வேவ் லீப் கால் மாடலில் பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதி உள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 10 காண்டாக்ட்களை சேமிக்க முடியும். இத்துடன் டயல் பேட் உள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், சிரி போன்ற அம்சங்களும் உள்ளன. இவைதவிர மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், வானிலை அப்டேட்கள், ஃபைண்ட் மை போன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இது 60 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது.

    புதிய போட் வேவ் லீப் கால் மாடல் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மார்ச் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் HD ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது.
    • இதில் உள்ள ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல்நல விவரங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் பெயரில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் அழகிய மெட்டாலிக் டிசைன், மென்மையான, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலிகான் ஸ்டிராப்களை கொண்டிருக்கிறது. மேலும் இதன் சிலிகான் ஸ்டிராப்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.

    இத்துடன் 1.83 இன்ச் 2.5D HD 240x280 பிக்சல் டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய போட் ஃப்ளெக்ஸ் கனெக்ட் HD ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் பத்து காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ள முடியும். முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது.

     

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ இரண்டு மணி நேரங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செய்வதோடு, உடல்நல விவரங்களையும் அறிந்து கொள்ள செய்கிறது. இத்துடன் கிரிக்கெட் ஸ்கோர், வானிலை விவரங்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் அம்சங்கள்:

    1.83 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே

    பிரீமியம் மெட்டல் டிசைன்

    சருமத்திற்கு உகந்த சிலிகான் ஸ்டிராப்கள்

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    பில்ட்-இன் வாட்ச் ஃபேஸ், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    10-க்கும் அதிக ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஹார்ட் ரேட், SpO2, ஆக்டிவிட்டி டிராக்கர்

    ஸ்லீப் மற்றும் செடண்டரி அலெர்ட்கள்

    IP68 டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    240 எம்ஏஹெச் பேட்டரி, பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    ஸ்மார்ட் அலெர்ட்கள்

    ஒரு வருட வாரண்டி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக ரூ. 1499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிளாக், செர்ரி பிளாசம் மற்றும் டீப் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
    • தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆற்று கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • போட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மேம்பட்ட க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட், ஹைபை DSP அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக போட் ராக்கர்ஸ் டிரினிட்டி வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்தது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ஹைபை DSP மற்றும் க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. போட் ராக்கர்ஸ் அபெக்ஸ் மாடலை தொடர்ந்து புதிய இயர்போன் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய போட் நெக்பேண்ட் இயர்போன் சிக்னேச்சர் சவுண்ட் மோட், ஃபிலெக்சிபில், குறைந்த எடை கொண்டிருக்கிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 150 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

     

    இதில் உள்ள ENX தொழில்நுட்பம் அழைப்புகளின் போது க்ளியர் ஆடியோவை வெளிப்படுத்துகிறது. மேலும் லோ லேடன்சி BEAST மோட் ஆடியோ அனுபவத்தை கேமிங்கின் போது மேம்படுத்துகிறது.

    போட் ராக்கர்ஸ் டிரினிட்டி இயர்போன் அமச்ங்கள்:

    ஹைபை DSP சார்ந்த க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட்

    போட் சிக்னேச்சர் சவுண்ட்

    10mm டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.2, டூயல் பேரிங்

    பீஸ்ட் மோட், லோ லேடன்சி

    ENx தொழில்நுட்பம்

    பட்டன் கண்ட்ரோல்

    IPX சான்று

    220 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் 150 மணி நேர பிளேபேக்

    ASAP சார்ஜ்

    டைப் சி சார்ஜிங்

    ஒரு வருட வாரண்டி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் ராக்கர்ஸ் டிரினிட்டி நெக்பேண்ட் இயர்போன் காஸ்மிக் பிளாக், ஜஸ்ட் புளூ மற்றும் கட்ச் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது.

    • போட் நிறுவனத்தின் புதிய இயர்போன் THX டியூனிங் செய்த ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
    • மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ஆடியோ மோட்களை ஸ்விட்ச் செய்ய விசேஷ பட்டன் உள்ளது.

    போட் நிறுவனம் தனது புதிய நெக்பேண்ட், ராக்கர்ஸ் 378 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புது நெக்பேண்ட் இயர்போன் அளவில் பெரிய டைனமிக் டிரைவர்கள், 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம், THX சார்பில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. போட் இம்மார்டல் 121 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    போட் ராக்கர்ஸ் 378 மாடல் பயனர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் நோக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மென்மையான சிலிகான், எடை குறைந்த ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதன் நெக்பேண்ட்-இல் இயர்போனை கண்ட்ரோல் செய்வதற்கான பட்டன்கள் உள்ளன. மேலும் இயர்பட்களில் காந்தம் உள்ளது.

    ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் போட் ராக்கர்ஸ் 378 மாடல் 200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. ராக்கர்ஸ் 378 மாடலில் உள்ள 10mm டைனமிக் டிரைவர்களை THX டியூனிங் செய்து 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் வழங்குகிறது.

    இந்த தொழில்நுட்பம் அதிநவீன சரவுண்ட் சவுண்ட், முப்பரிமாண கோணத்தில் ரியலிஸ்டிக் ஆடியோ மற்றும் பொசிஷனல் அக்யுரசி வழங்குகிறது. இதில் உள்ள ஸ்பெஷல் பீஸ்ட் மோட் ஆடியோ லேடன்சியை 65ms வரை குறைக்கும். மோட்களிடையே மாறிக் கொள்ள பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, போட் பாரம்பரிய சவுண்ட் உள்ளிட்டவை கேமிங்கிற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆக மாற்றுகிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போட் ராக்கர்ஸ் 378 மாடல்- ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ, மிட்நைட் புளூ மற்றும் வைப்ரண்ட் ரெட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போட் லைஃப்ஸ்டைல், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராமல் இவர்களது விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • படகிலிருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர்.

    குளச்சல்:

    குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் இவரது படகு குளச்சல் மீன்பிடித்துறை முகத்திலிருந்து புறப்பட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றது. படகில் ரீகன் (36), ஜார்ஜ் (43), மர்வின் (37), ராமன் துறையை சேர்ந்த சோனி (53), ஜாண்சன் (50), சின்னமுட்டத்தை சேர்ந்த தியோ (33), அழிக்கால் எட்வின்ராஜ் (27), சிபு (27) மற்றும் ஒடிசாவை சேர்ந்த கேதர் ஜெனோ (28), அமீர் (43), உ.பி.யை சேர்ந்த கமலேஷ் (26), லோகேஸ் (23), பின்று (21), ஆகிய மீன்பிடித்தொழிலாளர்களும் சென்றனர்.

    இவர்களது படகு கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராமல் இவர்களது விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் படகிலிருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர். அவர்கள் என்ன நடந்தது? என்பதை அறிவதற்குள் படகு சாய்வாக சரிய தொடங்கியது. கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது. படகின் உள்அறைகளிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து படகை இயக்கினால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். இருப்பினும் படகு நிலை தடுமாறி தொடர்ந்து சரிய தொடங்கியதால் 14 மீனவர்களும் பீதியடைந்தனர். அவர்கள் கூச்சலிட தொடங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் உதவிக்கு அழைத்த படகு விரைந்து வந்து 14 மீனவர்களையும் மீட்டது. விசைப்படகையும் மீட்டு நேற்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்தனர். கப்பல் மோதிய வேகத்தில் மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ.1.25 கோடி என கூறப்படுகிறது.

    இது குறித்து ரெஸ்லின் டானி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் போலீசார் சேதமடைந்த படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மேற்கூறிய போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார். குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதிவிட்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட இந்த படகு மீது கப்பல் மோதியதும் நங்கூரத்தின் கயிறு கப்பலின் பிரப்பலரில் சிக்கியது. இதனால் படகை சிறிது தூரம் கப்பல் இழுத்து சென்றது. இதை கவனித்த மீனவர் மெர்வின் நங்கூரத்தின் கயிறை அறுத்து விட்டு படகை விடுவித்தார்.

    பின்னர் வி.எச்.எப்.-16 ஒயர்லெஸில் காப்பாற்றுமாறு மீனவர்கள் கப்பலுக்கு தகவல் தெரிவித்தும், கப்பல் ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

    • போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் உடல் ஆரோக்கியத்துக்கான சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. வேவ் சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் போட் வேவ் எலெக்ட்ரா என அழைக்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் லூப், அமேஸ்ஃபிட் பாப் 2 மற்றும் சில ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.81 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், IP 68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. பிரீமியம் அலுமினியம் அலாய் டிசைன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் உள்ளது.

    இத்துடன் ஆக்டிவிட்டி டிராக்கர், பிரீதிங் டிரெயினிங், ஹைட்ரேஷன் அலர்ட், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதி கொண்டிருக்கிறது. பயனர்கள் இதில் அதிகபட்சமாக 50 காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து எளிமையாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    இவை தவிர மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், ஃபைண்ட் மை போன் போன்ற வசதிகள் உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் கிடைக்கும். ப்ளூடூத் பயன்படுத்தும் பட்சத்தில் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.

    • போட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடல் ஏராளமான அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய இயர்பட்ஸ் அளவில் சிறியதாகவும், கவர்ச்சிகரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 மாடல் அசத்தல் தோற்றம், ENx, BEAST, IWP, மற்றும் ASAP போன்ற அதிநவீ தொழில்நுட்ப வசதிகள், தலைசிறந்த சவுண்ட், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    பெபில் வடிவம் கொண்ட போட் ஏர்டோப்ஸ் 100 அளவில் சிறியதாகவும், தலைசிறந்த டிசைன் மற்றும் கேஸ் கொண்டிருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் 100 சபையர் புளூ, ஒபல் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IWP எனப்படும் (Insta Wake N Pair) அம்சம் கொண்டுள்ளது. இது கேஸ்-ஐ திறந்ததும் பயனர் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும்.

    இதில் உள்ள பீஸ்ட் (BEAST) மோட் ப்ளூடூத் மூலம் அல்ட்ரா லோ-லேடென்சி ரியல் ஆடியோவை 50ms வேகத்தில் வழங்குகிறது. ஏர்டோப்ஸ் 100-இல் உள்ள கல்வேனிக் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ அதிவேகமாக சார்ஜ் செய்து விடும். இதன் மூலம் இயர்பட்ஸ்-ஐ ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

    போட் ஏர்டோப்ஸ் 100 மாடலில் 10mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை சிறப்பான ஆடியோ மற்றும் டீப் பேஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள குவாட் மைக்ரோபோன்கள் மற்றும் ENX தொழில்நுட்பம் அழைப்பின் போதும் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி இருப்பதால், பாடல்கள், வால்யும் மாற்றுவது மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும்.

    இந்த இயர்பட்ஸ்-இல் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. வானிலை, செய்திகள் மற்றும் கிரிகெட் ஸ்கோர் உள்ளிட்டவைகளை ஒன் டச் வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் அறிந்து கொள்ளலாம். போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • போட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நல அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்வதில் முன்னணி பிராண்டாக விளங்கும் போட், "வேவ் அல்டிமா" பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய, கிராக் ரெசிஸ்டண்ட் கர்வ் ஆர்க் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.8 இன்ச், 500 நிட் சூப்பர் பிரைட், எட்ஜ்-டு-எட்ஜ் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, குறைந்த எடை கொண்ட அலுமினியம் அலாய் டயல், சருமத்திற்கு மென்மையான உணர்வை தரும் சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ரேஜிங் ரெட், ஆக்டிவ் பிளாக் மற்றும் டியல் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.

    புதிய வேவ் அல்டிமா மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட்-இன் HD ஸ்பீக்கர், மைக்ரோபோன், ப்ளூடூத் 5.3 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மைக்ரோபோன் அதிக சத்தமுள்ள பகுதிகளில் உங்களுக்கு உதவும். மேலும் இதில் ஏராளமான சென்சார்கள், மாணிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உடல் நலனை பாதுகாக்க உதவுகிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் லைப்ஸ்டைல் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

    • கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கடல்நீர் சூழ்ந்தது.
    • படகில் உள்ள மீன்பிடி உபகரண பொருட்களை நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி மீனவர் காலனி பகுதியிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடி தொழிலுக்கு மீனவர்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் சில தினங்களாக நிலவி வந்த புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில் திடீரென கடல் சீற்றம் அதிகரித்து கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளது.

    மேலும் கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை சுற்றியும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

    மீனவர்கள் ஏற்கனவே நங்கூரமிட்டு கட்டப்பட்ட படங்களை மேலும் தற்பொழுது கடல் நீரில் அடித்து செல்லாத அளவிற்கு பாதுகாப்பாக கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக படகில் உள்ள மீன் பிடி உபகரண பொருட்களையும் இடுப்பளவு நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது கடல் நீர் உப்புகாமல் தடுக்க நிரந்தரமாக தடுப்பு அணை அமைத்து, பாலம் அமைத்து தரவேண்டும் விழுந்தமாவடி மீனவ காலனி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×