search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BHUMI PUJA"

    • ரூ.4 கோடியில் கட்டப்பட உள்ளது
    • விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரைப்பெ ரும்பாக்கம் பகுதியில், கொசத்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய உயர் மட்ட மேம்பால பணிக்கு பூமி பூஜை விழா இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்சிக்கு சோளிங்கர் ஏ. எம்.முனிரத்தினம் எம்.எல்ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, இந்த உயர் மட்ட மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதில் ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைபுத்தீன், வெங்கடேசன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமு ருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்லக்கிளி மூர்த்தி, திவ்யபாரதி தினேஷ் காந்தி, சுலோச்சனா பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர் இந்திரா, மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, காங்கிரஸ் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரகாஷ், நகர செயலாளர் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேடை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது.
    • மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதி நாவினிபட்டி 4 வழிச்சாலை அருகே நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி செய்து வருகிறார்.

    விழாவுக்கான மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான முகமது யாசின், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் துரண சேர்மனுமான பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலூர் நகர்மன்ற துணைத்தலைவர் இளஞ்செழியன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
    • புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி. என். பாளையம் செல்லும் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 59.08 லட்சம்மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கும், துத்திப்பட்டு கிரா மத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ 46 லட்சம்மதிப்பீட்டில் தார்சாலையாகஅமைப்பதற்கும்,துத்திப்பட்டு முதல் கிருஷ்ணா புரம் வரை செல்லும் சாலையை ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அலுமேலுகிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கை முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங்,வனக்குழு தலைவர் நடராஜன்,அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் பிரதாப், முத்து, பாண்டியன், சுரேஷ், சரவணன் , அரசு ஒப்பந்த தாரர் சரவணன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
    • கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம்,திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கட்டி பல வருடங்கள் ஆகியதால் தடுப்பணையின் கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் அணையின் உறுதி தன்மை கேள்விக்குறி யானது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணிகள் நடைபெறும் அகலங்கன்னு பாலத்தை காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்பொறியாளரிடம் கூறிய கலெக்டர் இந்த மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
    • சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலையாக அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற் றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன் பொதுகுழு உறுப்பினர் மணிவண்ணன் ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால கிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி கள் வாசு, அய்யா துரை, இக்பால்சையீத் முன்னாள் கவுன்சிலர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் நடந்த கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜையில் அமைச்சர் பங்கேற்றார்.
    • கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன் தலைமை தாங்கினார்.

    தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 8.50 கி.மீட்டர் தூரத்திற்கு பிரதானக்குழாய்கள் பதித்து, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான அக்ரஹாரம் சாலை, தாயமங்கலம் சாலை, அழகர்கோவில் சாலை, மதுரா நகர் சாலை, கன்னார் சாலை, சோனையா கோவில் என 6 இடங்களில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

    மேற்கண்ட 6 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது 2.20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாங்குளம் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட உள்ள (20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் கசடு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பட உள்ளது. இத்திட்டத்தினை ஓராண்டு காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, தி.மு.க. நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.15.5 லட்சம் மதிப்பில் அமைகிறது
    • கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வாங்கூர் ஊராட்சி, வரதராஜபுரம் கிராமத்தில் ரூ.15.5 லட்சம் மதிப்பில் மேநீர் தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.

    வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேநீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் வாங்கூர் கிராமம், நத்தம் பேட்டையில் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.7.5 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழாவும் நடந்தது.

    • பூமி பூஜை நடந்தது
    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

    ஜோலார்பேட்டை,:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.71.46 லட்சம் மதிப்பீட்டில் 1.600 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிக்கும், கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் ரூ.14.89 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தொலைவிற்கு ஜீவாநகர் சாலை அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வரவேற்றார்.

    மேலும் கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் ரூ.12.07 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எழில்கவிதா, உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதாதண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உமாகன்ரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமிசுரேஷ், திருப்பதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    • அவிநாசி யூனியன் சேர்மன் ஜெகதீஸ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
    • பொறுப்பாளர் ஷ்யாம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     பெருமாநல்லூர்:

    அவிநாசி அடுத்துள்ள சேவூர் பஞ்சாயத்தில் ஸ்ரீராம் தியேட்டரிலிருந்து ஏ.டி காலனி வரையும், பந்தம் பாளையம் மெயின் ரோட்டில் இருந்து கன்னடாங்குளம் வரையும் 2இடங்களில் புதிய தார் சாலை அமைக்க அவிநாசி யூனியன் சேர்மன் ஜெகதீஸ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, துணை தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் துணை சேர்மன் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கத்தலைவர் துரை, பொறுப்பாளர் ஷ்யாம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரேசன் கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி தெற்கு புதுகுடியிருப்பு கிராமத்தில் தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக ரேசன் கடை செயல்பட்டு வருகிறது.

    அந்த பகுதி பொதுமக்கள் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கத்திடம் ரேசன் கடை கட்டிடம் கட்டிதர கோரி மனு அளித்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்து பரிந்துரை செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் தெற்கு புதுகுடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் தானமாக வழங்கிய இடத்தில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

    திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருப்புல்லாணி கிழக்கு பகுதி மாவட்ட கவுன்சிலருமான ஆதித்தன், பெரியபட்டினம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்ஜான் பீவி, தி.மு.க. கிளை செயலாளரும்-மீனவர் கூட்டுறவு சங்க தலைவருமான அன்சார் அலி, ஒன்றிய துணை செயலாளர் பஷீர் முகம்மது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது அபிபுல்லா, ஊர் தலைவர் பாலு ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகலட்சுமி, கிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் கருப்பையா, முத்து கிருஷ்ணன் ,வண்ணாங்குண்டு கிளை செயலாளர் நஜிபுதீன், சிட்டாங்காடு கிளை செயலாளர் கருப்பையா, ரேசன் கடை பொறுப்பாளர் முருகேசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் செந்தமிழ்நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்கும் படி செய்கிறார். வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களால் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இது தவிர செந்தமிழ்நகர் என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக இருக்க வீடு இன்றி புறம்போக்கு நிலத்தில் இருக்கும் விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து அதில் வீடு உள்ளிட்ட வசதிகளை அரசு சார்பில் செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த திட்டத்தில் வீடு கட்டிக்கொடுப்பதுடன் சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை அருகே 30 ஆண்டுகளாக இருளில் தவித்த கிராம மக்களுக்கு பட்டா வழங்கி விளக்கு வசதி செய்து கொடுத்தார்.

    தற்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் ஊராட்சியில் இருளர் சமுதாய மக்கள் நீர்நிலை பகுதியில் வசித்து வந்தனர். அவர்களுடைய இருப்பிடம் தேடிச்சென்று சாதிச்சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அப்போது அவர்கள் பட்டா, வீடு கோரிக்கையை வைத்தனர்.

    இதையடுத்து விளிம்புநிலை மக்களான இருளர் சமுதாயத்தை சேர்ந்த 61 குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வந்தது தெரிய வந்தது. ஆனால் நீர்நிலை புறம்போக்கில் அவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என்பதால் அரசின் முயற்சியோடு தனியார் இடத்தை விலைக்கு வாங்கி அதில் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. கலெக்டரிடன் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகிறது.

    இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் செந்தமிழ்நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 9 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை ஒன்றியம் புதுக்குடி அருகே வீடு கட்டப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக கும்பகோணம் ஒன்றியத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு, தனியாரிடமிருந்து இடம் அரசு சார்பில் விலை விலைக்கு வாங்கி தரமான கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. இதற்காக பூமி பூைஜ போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    போளூர்:

    போளூர் ஸ்ரீ பால முருகன் கோவில் சிமெண்ட் சாலை அமைக்க போலு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது

    அதைத் தொடர்ந்து நேற்று சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை போடும் கோவில் அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தர்மகர்த்தா செல்வம் முன்னிலை வகித்தார், செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அக்ரி எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர் அவைத்தலைவர் ஏழுமலை, சேத்துப்பட்டு ஸ்ரீதர் 17-வது வார்டு உறுப்பினர் கவிதா கருணாகரன் மற்றும் பாசறை பாபு மண்ணு சண்முகம் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர செயலாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

    ×