search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவூரில் தார் சாலைகள் அமைக்க பூமி பூஜை
    X
    தார்சாலைகள் அமைக்க பூமிபூஜை நடைபெற்ற காட்சி. 

    சேவூரில் தார் சாலைகள் அமைக்க பூமி பூஜை

    • அவிநாசி யூனியன் சேர்மன் ஜெகதீஸ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
    • பொறுப்பாளர் ஷ்யாம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர்:

    அவிநாசி அடுத்துள்ள சேவூர் பஞ்சாயத்தில் ஸ்ரீராம் தியேட்டரிலிருந்து ஏ.டி காலனி வரையும், பந்தம் பாளையம் மெயின் ரோட்டில் இருந்து கன்னடாங்குளம் வரையும் 2இடங்களில் புதிய தார் சாலை அமைக்க அவிநாசி யூனியன் சேர்மன் ஜெகதீஸ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, துணை தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் துணை சேர்மன் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கத்தலைவர் துரை, பொறுப்பாளர் ஷ்யாம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×