மேடை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

மேடை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது.மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேடை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை
Published on

மேலூர்

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதி நாவினிபட்டி 4 வழிச்சாலை அருகே நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி செய்து வருகிறார்.

விழாவுக்கான மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான முகமது யாசின், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் துரண சேர்மனுமான பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலூர் நகர்மன்ற துணைத்தலைவர் இளஞ்செழியன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com