search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை
    X

    மானாமதுரையில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பூமிபூஜை நடந்தது.

    கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை

    • மானாமதுரையில் நடந்த கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜையில் அமைச்சர் பங்கேற்றார்.
    • கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன் தலைமை தாங்கினார்.

    தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 8.50 கி.மீட்டர் தூரத்திற்கு பிரதானக்குழாய்கள் பதித்து, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான அக்ரஹாரம் சாலை, தாயமங்கலம் சாலை, அழகர்கோவில் சாலை, மதுரா நகர் சாலை, கன்னார் சாலை, சோனையா கோவில் என 6 இடங்களில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

    மேற்கண்ட 6 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது 2.20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாங்குளம் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட உள்ள (20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் கசடு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பட உள்ளது. இத்திட்டத்தினை ஓராண்டு காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, தி.மு.க. நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×