search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.98.42 லட்சம் மதிப்பில் தார் சாலை
    X

    ரூ.98.42 லட்சம் மதிப்பில் தார் சாலை

    • பூமி பூஜை நடந்தது
    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

    ஜோலார்பேட்டை,:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.71.46 லட்சம் மதிப்பீட்டில் 1.600 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிக்கும், கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் ரூ.14.89 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தொலைவிற்கு ஜீவாநகர் சாலை அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வரவேற்றார்.

    மேலும் கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் ரூ.12.07 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எழில்கவிதா, உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதாதண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உமாகன்ரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமிசுரேஷ், திருப்பதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×