search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhagyaraj"

    ‘சின்ன வீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை பாக்யராஜே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. #Bhagyaraj #Chinnaveedu
    தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளை பெற்றவர். அவரது இயக்கத்தில் ‘சித்து பிளஸ்-2’ படம் 2010-ல் வெளிவந்தது. இதில் அவரது மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்து இருந்தார்.



    தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். சின்ன வீடு படம் 1985-ல் வெளியானது. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஊர்வசியின் அக்காள் கல்பனா கதாநாயகியாக நடித்து இருந்தார். அனு இன்னொரு நாயகியாக வந்தார்.

    விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த படம் மையப்படுத்தி இருந்தது. சின்ன வீடு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாக்யராஜே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. படத்துக்கான திரைக்கதையை தயார் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. #Bhagyaraj #Chinnaveedu
    திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் அதனை உறுதிப்படுத்தினார். #Bhagyaraj #WritersAssociation
    தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் தங்களது கதைச் சுருக்கம், கதை வசனம், திரைக்கதை ஆகியவற்றை பதிவு செய்வதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம். கடந்த தேர்தலில் இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு இயக்குனர் கே.பாக்யராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு கதை திருட்டு பிரச்சினை எழுந்தது. கள்ள ஓட்டால் பாதிக்கப்படும் ஒருவர் அரசியலுக்குள் நுழைந்து மாற்றங்களை ஏற்படுத்துவது போல் அமைந்த கதையை தான் 10 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாக உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

    புகாரை விசாரித்த பாக்யராஜ், வருணுக்கு ஆதரவாக கடிதம் வழங்கினார். இந்த விவகாரம் ஐகோர்ட்டுக்கு போனது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டு சர்கார் படத்தின் டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு முருகதாஸ் இடம் கொடுத்தார். இந்த பிரச்சினையின் போது தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறி பாக்யராஜ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.



    பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தலைவர் ஆவேன் என பாக்யராஜ் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

    அவரது சமாதானத்தை ஏற்காத தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பாக்யராஜ் தலைவராக இல்லாத சங்கத்தில் தாங்கள் நிர்வாகிகளாக இருக்கமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    நிர்வாகிகளின் முடிவை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ் தனது முடிவை மாற்றிக்கொண்டார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சென்னையில் நடைபெற்ற கோகோ மாக்கோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, எழுத்தாளர் சங்க விவகாரம் குறித்து பாக்யராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது தான் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அவர் உறுதி செய்தார். #Bhagyaraj #WritersAssociation

    ‘சர்கார்’ படத்தின் கதை சர்ச்சை தொடர்பாக, எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக பாக்யராஜ் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். #Sarkar
    நடிகர் விஜய், நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள “சர்கார்” படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் புகார் செய்தார்.

    ‘செங்கோல்’ என்ற தனது படத்துக்காகத் பதிவு செய்திருந்த கதையைத் தான் சர்காராக இயக்குநர் முருகதாஸ் படமாக்கியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தார்.

    மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் செய்திருந்தார். இந்தப் புகாரை ஆய்வுசெய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ், ‘சர்கார்’, ‘செங்கோல்’ கதைகளை ஆய்வுசெய்து, இரு கதைகளின் மையக்கருவும் ஒன்றுதான் எனக்கூறினார்.

    மேலும் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கோர்ட்டில் கருத்தும் தெரிவித்தார். இதற்கிடையில், கோர்ட்டு விசாரணையில் கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சர்கார் பட கதை சர்ச்சை காரணமாக தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே.பாக்யராஜ் அறிவித்தார்.

    தனக்கு தேவையில்லாத அசவுகரியங்கள் ஏற்பட்டதால் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது கடிதத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை நிர்வாகிகள் ஏற்கவில்லை.

    இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினர் கூறும்போது, “ராஜினாமா கடிதத்தை அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவித்தோம். அனைவரும் ஒருமனதாக ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர். நிர்வாகிகள் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது முடிவையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம் ” என பாக்யராஜிடம் கூறினர்.

    இந்நிலையில் மீண்டும் தான் ராஜினாமா செய்வதாக கூறி, மற்றொரு கடிதத்தை பாக்யராஜ் சங்கத்துக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், பாக்யராஜின் மற்றொரு ராஜினாமா கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்க சங்க உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். #Bhagyaraj
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். சர்கார் பட கதை விவகாரத்தால் மிகவும் மனவேதனை அடைந்ததாக பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், பாக்யராஜின் ராஜினிமாவை ஏற்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரைப்பட எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்திருப்பதாவது,

    பாக்யராஜ் தொடர்ந்து தலைவர் பதவியை வகிக்க வேண்டும், என்று அவரது ராஜினாமாவை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதால், பாக்யராஜே தலைவர் பதிவியை ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாக்யராஜ் தலைவர் பொறுப்பேற்பது குறித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #Bhagyaraj

    சர்கார் பட சர்ச்சையை தொடர்ந்து திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். #Bhagyaraj #Sarkar
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    போட்டி இல்லாமல், அனைத்து உறுப்பினர்களோட ஏகோபித்த ஒப்புதலோட என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க, நானும் சந்தோஷமா பொறுப்பு ஏறத்துக்கிட்டு, மன சாட்சியோட நேர்மையா செயல் பட்றதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது. 

    திடீர்னு சர்கார் பட சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து, நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சுது. ஆனா.. அதுல பல அசெளகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காம நான் நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன். 



    என்னை மாதிரியே போட்டி இல்லாம பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினாமா பண்ணிட்டு முறையா தேர்தல் நடத்தி, மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். நான் யாரையும் நிர்பந்திக்கவில்லை.

    தேர்தல் நடத்தினால் அதில் முறையா நின்னு, மெஜார்ட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு, தொடர்ந்து கடமையோட செயல்பட்றேன். இப்படிக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்யும் கே.பாக்யராஜ். 

    எனக்கு நேர்ந்த அசௌகர்யங்கள் என்ன? 

    ஒழுங்கினங்கள் என்னாங்கறதை, சங்க நலன் நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல.

    அதோ், முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன் படாததாலே வேறு வழியே இல்லாம சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப் பெரிய படமான சர்கார் படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன். #Bhagyaraj #Sarkar

    ஔடதம் படத்தின் படக்குழு சந்திப்பில் பேசிய நடிகர் பாக்யராஜ், மொழி தெரியாமல் தான் கம்போடியாவில் தவித்த போது என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தியதாக பாக்யராஜ் கூறினார். #Bhagyaraj #Owdatham
    மருத்துவ உலகின் இருட்டு பக்கங்களை வெளிச்சம் போட்டு காண்பித்து மக்களுக்கு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஒளடதம். நேதாஜி பிரபு நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை பிரபலப்படுத்த ஒளடதம் பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை வினியோகிக்க உள்ளனர்.

    அதற்கான தொடக்க விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பாக்யராஜ் பேசும்போது ’படக்குழுவினர் தமிழா தமிழில் கையெழுத்திடு இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

    தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். காசோலைகளிலும் தமிழில் தான் கையெழுத்து போடுவேன். நான் சீனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள்.



    அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் .நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில் ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டி இருந்தது.

    என் பாஸ்போர்ட்டில் சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்... சில நாடுகளில் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன”. இவ்வாறு பாக்யராஜ் பேசினார். #Bhagyaraj #Owdatham

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பாக்யராஜ் அவர்களது குடும்பத்துடன் நேரில் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும், நடிகர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar 

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை கையாடல் செய்ததாக பாக்யராஜ் அளித்த புகாருக்கு இயக்குநர் விசு விளக்கம் அளித்திருக்கிறார். #Bhagyaraj #Visu
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்து ரூ.37 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்றும், முன்னாள் தலைவரும் திரைப்பட இயக்குனருமான விசு, முன்னாள் செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதற்கு பதில் அளித்து இயக்குனர் விசு கூறியதாவது,

    ‘‘ எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறேன். இயக்குனர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குச் சென்று என் மீது பண மோசடி புகார் அளித்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அறக்கட்டளையில் எந்த மோசடியும் நடக்கவில்லை. பணம் கையாடல் செய்யப்படவும் இல்லை.



    அந்த பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறது. அதில் வரும் வட்டியில் நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. பாக்யராஜ் என்மீது போலீசில் புகார் அளித்ததன் மூலம் மனிதாபிமானம் செத்துப்போய் விட்டதாக நினைக்கிறேன். ஆண்டவன் கருணையால் உடல்நலம் தேறி திரும்பி வருவேன். அப்போது இந்த மோசடி புகாரை எதிர்த்து நிற்பேன்.

    நான் நாணயத்தோடு பிறந்தவன். நிறைய பேருக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். நேர்மையாக வருமான வரி கட்டுகிறேன். சங்க அறக்கட்டளையில் இருந்து ஒரு பைசா கூட எடுத்தது இல்லை. ’’

    இவ்வாறு விசு கூறியுள்ளார். #Bhagyaraj #Visu

    ×