என் மலர்
சினிமா

என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள் - பாக்யராஜ்
ஔடதம் படத்தின் படக்குழு சந்திப்பில் பேசிய நடிகர் பாக்யராஜ், மொழி தெரியாமல் தான் கம்போடியாவில் தவித்த போது என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தியதாக பாக்யராஜ் கூறினார். #Bhagyaraj #Owdatham
மருத்துவ உலகின் இருட்டு பக்கங்களை வெளிச்சம் போட்டு காண்பித்து மக்களுக்கு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஒளடதம். நேதாஜி பிரபு நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை பிரபலப்படுத்த ஒளடதம் பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை வினியோகிக்க உள்ளனர்.
அதற்கான தொடக்க விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பாக்யராஜ் பேசும்போது ’படக்குழுவினர் தமிழா தமிழில் கையெழுத்திடு இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். காசோலைகளிலும் தமிழில் தான் கையெழுத்து போடுவேன். நான் சீனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் .நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில் ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டி இருந்தது.
என் பாஸ்போர்ட்டில் சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்... சில நாடுகளில் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன”. இவ்வாறு பாக்யராஜ் பேசினார். #Bhagyaraj #Owdatham
Next Story






