search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness"

    • தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், தாளாளருமான வெங்கட்ராஜூலு தலைமையிலும் நேதாஜி கல்வி குழுமத்தினுடைய இயக்குநனரும்), மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளருமான விஜயசுந்தரம் முன்னிலையில் நேதாஜி கல்வி நிறுவனங்கள், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் எமதர்மராஜா (மற்றும்) சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை பயணத்தில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம், படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது அவசியம் சீட் பெல்ட் அணிவோம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் வேகத்தடையில் மெதுவாக செல்லவும், போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    விழிப்புணர்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கீழ்காவாதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைக்கோவன், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் வினோத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டிய 1000 ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்று கள்வழ ங்கப்பட்டது.

    மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல்க ல்லூரியின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்மை நேயத்தினை மனதில் கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    விழாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் சிவகுருநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியினுடைய முதல்வர் ராமபிரபா, துணை முதல்வர்,துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.

    தொட்டியம்

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

    கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி பெரியசாமி முசிறி கோட்டாட்சியர் ராஜன், மாவட்ட பழங்குடி யினர் நல அலுவலர் கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்குநாடு கல்லூரி முதல்வர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்துகொண்டு இளம் வாக்கா ளர்களை அதிக அளவில் சேர்த்திடும் வகையில் இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் தேர்தல் தனி துணை தாசில்தார் செல்வி, வரி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தொட்டியம் பகுதி கிராம நிர்வாக அலுவ லர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் தொட்டியம் தாசில்தார் கண்ணாமணி நன்றி கூறினார்.

    • தீ தடுப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து நடந்தது
    • செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்

    வேலூர்:

    பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு பள்ளியில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நிலைய அலுவலர் பொறுப்பு அரசு விளக்கம் அளித்தார்.

    மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளும் முறை. தீ விபத்திற்கு எந்த கருவிகளை பயன்படுத்த வேண்டும் என செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் உடற்கல்வி ஆசிரியர் அமிர்தராஜ், தொரப்பாடி பள்ளி ஆசிரியர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • டி.எஸ்.பி போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் பற்றியும், இதனால் ஏற்படும் வாழ்க்கைத் தரம் பாதிப்பு குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.

    இதையடுத்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணையா, திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், உதவி திட்ட அலுவலர் இளையராஜா மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரியாங்குப்பம் கொம்யூனில் அதிகாரிகள் ஆலோசனை
    • ஆயுஷ்மான் பாரத திட்டம் உள்ளிட்ட 17 வகையான திட்டத்தை விளக்கும் விதமாக அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா என்ற தலைப்பில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் அதன் பயன்பாட்டை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக வருகிற 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துக்கு, மத்திய அரசின் நல திட்ட விளக்க பிரசார வாகனம் வருகிறது.

    அதனை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கொண்டு வந்த குடிநீர் வழங்கும் திட்டம், எரிவாயு திட்டம், ஆயுஷ்மான் பாரத திட்டம் உள்ளிட்ட 17 வகையான திட்டத்தை விளக்கும் விதமாக அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மண்டல அதிகாரி மற்றும் உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரி ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், நோடல் அதிகாரிகள், செயலாக்க அதிகாரிகள் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம், நலவழித் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, வருவாய்த்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை ஊழியர்கள், இந்தியன் வங்கி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்ட மற்ற துறை சார்ந்த ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்பட்டது.

    • போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பங்கேற்பு
    • கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மாக்கமூலா பகுதியில் காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு திட்டம் தொடக்க விழா நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்து கொண்டு பெயர்ப்ப லகையை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் முதல்முறையாக கிராம விழிப்புணா்வு திட்டம் கூடலூரில் தொடங்கப்பட்டு உள்ளது. இது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், கிராமத்துக்கு ஒரு காவலா் வீதம் நியமிக்கப்படுவா்.

    அந்த காவலரை பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடா்புகொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதன்மூலம் கிராமத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றார்.

    தொடா்ந்து கூடலூா், மசினகுடி, ஸ்ரீமதுரை, ஓவேலி, தேவா்சோலை, நடுவட்டம் ஆகிய பகுதிகளுக்கு கிராம விழிப்புணா்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டு உள்ள காவலரின் பெயா், கைப்பேசி எண் அடங்கிய அறிவிப்புப் பலகையை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், கூடலூா் டி.எஸ்.பி. செல்வராஜ், பந்தலூா் டி.எஸ்.பி. செந்தில்குமாா் உள்பட பலர் கலந்துகொண்டனா்.

    • நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.
    • பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீ விபத்து இல்லாத தீபாவளி மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் காங்கயம் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.

    இதில் பட்டாசுகள் திறந்தவெளியில் கூரை வீடுகள் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. எண்ணெய் சேமிக்கும் குடோன்கள், தேங்காய் பருப்பு குடோன்கள், பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வினாடி-வினா போட்டி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய பட்டிமன்றம் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் நடைப்பெற்றது.
    • தீனதயாளன் ஊழல் தடுப்பு வாரம் தொடர்பாக கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், இசையாசிரியர் ஜோதிபிரபா நன்றி கூறினார்‌.

    புதுச்சேரி:

    புதுவை மணப்பட்டு, கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 31-ந் தேதி முதல் தொடங்கி 5-ந் தேதி வரை நடந்தது.

    இதில் ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களை பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய பட்டிமன்றம் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் நடைப்பெற்றது.

    இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகளுக்கான ஊழல் மற்றும் கண்காணிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் புதுவை தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

    இதில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விளக்க உரையாற்றினார். கல்லூரியின் இயக்குநர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மஞ்சுளா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை ஆற்றினார். துணை முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் சினி. தீனதயாளன் ஊழல் தடுப்பு வாரம் தொடர்பாக கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், இசையாசிரியர் ஜோதிபிரபா நன்றி கூறினார்.

    • குடிசை பகுதி மற்றும் தீ எளிதில் பற்றி கொள்ளும் அபாயம் உள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
    • கண்டிப்பாக சப்பல் அணித்து பட்டாசு வெடிக்க வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தீயணைப்பு நிலை அலுவலர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதில் பட்டாசுகளை வீட்டினுள் வெடிக்க கூடாது.

    குடிசை பகுதி மற்றும் தீ எளிதில் பற்றி கொள்ளும் அபாயம் உள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள், அவர்களை பாதுகாப்பாக உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் கண்டிப்பாக சப்பல் அணித்து பட்டாசு வெடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெள்ளகோவில் நகர் பகுதியில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • மாணவிகள் பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
    • மாணவர்கள் அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளு க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகிருபா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா பங்கேற்று பேசுகையில், மாணவிகள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு, தற்பொழுதிலிருந்து பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உயர் கல்வியில் எந்த இலக்கை அடைய முயற்சி செய்கிறோமோ, அதை நோக்கி ஒவ்வொரு நாளும் பயணிக்க வேண்டும்.

    அதற்கென நேரம் ஒதுக்கி குறிக்கோளோடு செயல்பட வேண்டும். நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதோடு, நமக்குள்ளே, கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாமே தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என்றார். இதில் மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • திருநங்கையருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் சார்ந்த புதிய கற்றல் செயல்முறையாகவும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையருடன் மாண வர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திருநங்கை பட்டதாரி ரதிமீனா, யாஷிகா, ரகசியா, குபேரன் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளிடம் கலந்துரையாடினர்.

    திருநங்கையர் குழுத் தலைவி ரதிமீனா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகையில்

    "திருநங்கை"என்ற சொல்லை முத்தமிழறிஞர் கலைஞர் மூன்றாம் பாலினத்த வர்க்காக உருவாக்கிய விதம் குறித்தும் திருநங்கைகளுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்ட விளிம்புநிலையினராய் இருந்த திருநங்கையர் வாழ்வை மறுமலர்ச்சி பெறச் செய்தமை குறித்தும் பேசினர்.

    எங்களைப்போன்ற வர்கள் வாழ்வில் சாதிக்கும் போது உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்த முதுகலைத் தமிழாசிரியர் ராசகணேசன் பேசுகையில்நா ம் வணங்கும் ஆடல்வல்லான் சிவபெரு மானே சிவமும் சக்தியும் கலந்த அர்த்த நாரீஸ்வர ராகவே இருந்து பெண்ணுக்குள் ஆண்மையும் ஆணுக்குள் தாய்மையும் உறைவதை உணர்த்துகிறார்.

    எல்லாக் குழந்தைகளும் ஆணாக அல்லது பெண்ணாகப் பிறக்கின்றனர்.

    வளரும்போது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக திருநங்கையர் களாக அடையாளப்ப டுகின்றனர்.

    நவீன அறிவியல் யுகத்தில் இம்மாற்றங்களைப் பெற்றோர்கள் முன்னரே அடையாளம் கண்டு உரிய நேரத்தில் உரிய முறையில் ஹார்மோன் சிகிச்சை அளித்தால் இதனைத் தொடக்கத்திலேயே சரி செய்யலாம் என்றார்.

    மாணவர்கள் நேரிடை யாக திருநங்கையருடைய வாழ்க்கைச்சூழல், கல்விநிலை குறித்தும் திருநங்கையரிடமே நேர்காணல் நிகழ்த்தினர். மாணவர்கள் வினவிய அனைத்துக் கேள்விகளுக்கும் திருநங்கையர் எதார்த்தமான பதில்களை வழங்கினர்.

    முடிவில் பட்டதாரித் தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது
    • வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது. தாலுகா அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களாக மாறி வருகிறது. அவ்வகையில், விண்ணப்பித்து இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள், இ - வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, பிளக்ஸ் பேனர் தயாரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவை, வாக்காளர் பார்வைக்கு படும்படி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'வரும் 2024 ஜன., 1 நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தவிர, 2024 ஏப்., 1 - ஜூலை 1 மற்றும் அக்., 1 தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தியடையும் நபர்களும், முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ஆகிய விண்ணப்பங்களில், தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தவிர, Voter Help Line என்ற மொபைல் ஆப் வாயிலாகவும், ஆவணங்களை இணைத்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரியும், ஆதார் விபரம் இணைக்கவும், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×